Benefits of Dates: தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா! வாங்க தெரிஞ்சுக்கலாம்!
Oct 04, 2024, 10:26 AM IST
Benefits of Dates: அரபு நாடுகளில் விளையும் பேரீச்சம் பழம் பல சத்துக்களைக் கொண்ட பழமாகும். இதில் பொதுவாக அதிக இரும்புச்சத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் மேலும் பல சத்துக்கள் உள்ளன.
அரபு நாடுகளில் விளையும் பேரீச்சம் பழம் பல சத்துக்களைக் கொண்ட பழமாகும். இதில் பொதுவாக அதிக இரும்புச்சத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் மேலும் பல சத்துக்கள் உள்ளன. வெளி நாடுகளில் இருந்து இந்த பழங்கள் இறக்குமதி செய்யப்படுவதால், இதற்கு இந்தியாவில் மவுசு அதிகம். பேரீச்சம் பழத்திற்கு உள்ள பெயரை தாண்டி இதனை தினம் தோறும் உட்கொள்வதால் பல விதமான பலன்களை அளிக்கிறது. மேலும் மருத்துவர்களும் இதனை தினம் தோறும் உட்கொள்ள பரிந்துரை செய்கின்றனர். பேரீச்சம் பழத்தை வைத்து பல இனிப்பு உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன. இதில் உள்ள முக்கிய சத்துக்களையும், இது அளிக்கும் பலன்களையும் இங்கு காணலாம்.
பேரீச்சை பழத்தின் நன்மைகள்
பேரீச்சை பழத்தில் இரும்புச்சத்து உள்ளதாக கூறப்படுகிறது. வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து ஆகியவையும் இதில் நிறைந்துள்ளன. இதனை தொடர்ந்து சாபிட்டு வந்தால் வாதம், பித்தம், முட்டி வீக்கம் நிவர்த்தி ஆகும். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.இவை உடலின் தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பலப்படுத்தும். மேலும் பேரீச்சைப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிடக் கூடிய அருமையான பழம் எனக் கூறப்படுகிறது. தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலு அடைந்து அதன் ஆரோக்கியம் மேம்படும். மேலும் தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமடையும்.
பேரீச்சம் பழத்தை , மற்ற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிடலாம். இனிப்பு உணவுகளைத் தவிர்த்துத் தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஒரு டம்ளர் பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர எலும்பு வலுப்பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும். எங்கேனும் அடிபட்டதால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம். வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.
பேரீச்சம் பழத்தில் உள்ள நன்மைகளை பெறுவதற்கு அதனை தினமும் சாப்பிட்டு வந்து அனைத்து விதமான உடல் உறுப்புகளையும் மேம்படைய செய்கிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்