Hair Fall Reasons: தலைமுடி உதிர காரணமும் அதை தடுக்கும் முறைகளும்!
Jun 04, 2023, 06:34 PM IST
பெண்களுக்கு முடி உதிர என்ன காரணம் என்பதையும் அதை தடுத்து நிறுத்த என்ன செய்யலாம் என்பதையும் இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
முடி உதிர்தல் பொதுவான பிரச்னையாக இருந்தாலும் வழக்கத்தை விடவும் அதிகப்படியான முடி உதிர்வதாக பெண்கள் பலரும் கவலை கொள்கின்றனர். அதற்கு என்ன காரணம்? என்பதையும் அதை சரிசெய்யும் முறைகள் குறித்து இப்போது பார்ப்போம்.
தலைமுடி அதிகம் உடைவதாலும் அடிக்கடி முடியை அலச முடியாமல் போவதாலும் முடி உதிர்தல் பிரச்னை மிகப்பெரிய தொந்தரவாக உருவெடுக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முடி உதிர்ந்து அதன் அளவு பாதியாக குறைவதற்கு முன்பே சில வழிமுறைகளை பின்பற்றி முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம்.
குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிப்பது பெரும் சிக்கலான ஒன்று. இந்த சீசனில் முடி வறட்சி, அரிப்பு தொல்லை போன்றவை அதிகமாகவே இருக்கும். முடியின் வேர் முதல் நுனி வரை அதிகப்படியான வறட்சி ஏற்படும் போது முடி அதிகம் உதிர தொடங்குகிறது.வெயில் காலத்தில் உடலில் உள்ள நச்சுக்கள் வியர்வை வழியாகவும், சிறுநீர் மூலமாகவும் வெளியேறிவிடும். ஆனால் குளிர்காலத்தில் அதிகம் வியர்க்காது. உடலில் நச்சுத்தன்மை அதிகமாகும் போது, முடி உதிர்தல் பிரச்னை ஏற்படுகிறது.
பொடுகு பிரச்னை தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதனால் உச்சந்தலையில் அரிப்பும் ஏற்படும். இது, பொதுவாக குளிர்காலத்தில் அதிகம் காணப்படுகிறது. பொடுகு தொல்லை காரணமாகவும் இந்த சீசனில் முடி அதிகம் உதரலாம்.குளிர்காலத்தில் பலரும் தண்ணீர் குடிக்கும் அளவை குறைத்து கொள்கின்றனர். இதனால் உடலுக்கு தேவைப்படும் நீர்ச்சத்தின் அளவில் பற்றாக்குறை ஏற்படுகிறது. உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாத போது, முடி அதிகம் உதிர தொடங்குகிறது.
முடி உதிர்வை தடுக்க தலைக்கு குளிப்பதற்கு முன்பு ஆலிவ் ஆயிலை கொண்டு முடியை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்த பின்பு தலைக்கு ஷாம்பு தேய்த்து குளிக்க வேண்டும். எல்லோரும் முடியை அலசிய பின்பு கண்டிஷ்னர் போடுவார்கள். ஆனால் இது தலைக்கு குளிப்பதற்கு முன்பே போடப்படும் கண்டிஷ்னர் போன்றது.
குளிர்காலத்தில் ஏற்படும் முடி உதிர்தல் பிரச்சனையை சரிசெய்ய பூசணி விதையை பயன்படுத்துவது மிகச் சிறந்த தேர்வு. காய்ந்த பூசணி விதையை நன்கு அரைத்து பொடியாக்கி அதில் தயிர் சேர்த்து அந்த கலவையை முடியில் தடவி பின்பு அலசவும்.
முறையான உணவுகளை தேர்ந்தெடுப்பது மிக மிக அவசியம். துரித உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்த்து, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். இவை முடி மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
டாபிக்ஸ்