Hair Care Tips : நரை முடி பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா.. இந்த விஷயங்களை மட்டும் ட்ரை பண்ணுங்க!
Jun 22, 2024, 07:00 AM IST
Hair Care Tips : ஆயுர்வேதம் ஒரு பாரம்பரிய இந்திய மருத்துவ முறை ஆகும். முடி முன்கூட்டியே நரைப்பதைக் குறைக்க பல மூலிகை வைத்தியங்கள் உள்ளன. மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, மெலனின் உற்பத்தியைத் தூண்டி, ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த தீர்வுகள் செயல்படுகின்றன.
Hair Care Tips : இன்றைய சூழலில் வெள்ளை முடி என்பது இளைஞர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. வேலைப்பளு, மன அழுத்தம் பொருளாதார பிரச்சனைகளால் தொடர்ந்து சிரமப்படுபவர்களுக்கு நாளடைவில் முடி உதிர்வு அதிகரிப்தோடு நடைமுடியும் ஏற்படுகிறது. தூக்கமின்மையும் இதற்கு ஒரு முக்கிக காரணமாக பார்க்கப்படுகிறது.
இளம் வயதிலேயே வரும் வெள்ளை முடி நோய் அறிகுறியாக இருக்கலாம். இந்த வெள்ளை முடியை தடுக்க பலரும் பல்வேறு பொருட்களை பயன்படுத்துகின்றனர். இரசாயனங்கள் உள்ள பொருட்களைப் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்படும். சில நேரங்களில் அது எதிர் விளைவைக் கொண்டிருக்கிறது. அதனால் அவற்றின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
ஆயுர்வேதத்தில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாத வெள்ளை முடிக்கு பொருத்தமான சிகிச்சை உள்ளது. ஆயுர்வேதம் ஒரு பாரம்பரிய இந்திய மருத்துவ முறையாகும். முடி முன்கூட்டியே நரைப்பதைக் குறைக்க பல மூலிகை வைத்தியங்கள் உள்ளன. மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, மெலனின் உற்பத்தியைத் தூண்டி, ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த தீர்வுகள் செயல்படுகின்றன. இங்கு 7 மூலிகை மருந்துகள் உள்ளன. இவை முடி நரைப்பதைக் குறைத்து முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.
கரிசலாங் கண்ணி
கரிசலாங் கண்ணி முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. முடி உதிர்வதைத் தடுக்கிறது. வெள்ளை முடி பிரச்சனைக்கு பயனுள்ளதாக இருக்கும். முடியை வலிமையாக்கும். கரிசலாங் கண்ணி எண்ணெயை உச்சந்தலையில் தொடர்ந்து மசாஜ் செய்யலாம். எண்ணெய் அல்லது தூள் வடிவில் பயன்படுத்தலாம்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. முடி நரைப்பதைத் தடுக்கிறது. இதை நேரடியாக உண்ணலாம். எண்ணெய் அல்லது தூள் வடிவில் முடிக்கு தடவலாம். இதனால் முடி உதிர்வு தடுக்கப்படுவதோடு வெள்ளை முடியையும் குறைக்க உதவும்.
வேம்பு
வேம்புக்கு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை உச்சந்தலையில் தொற்று, பொடுகு மற்றும் முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கின்றன. இதை எண்ணெயாகப் பயன்படுத்தலாம். கூந்தலுக்கு வேப்பம்பூவும் வேப்ப இலையை அரைத்து பூசலாம்.
அஸ்வகந்தா
அஸ்வகந்தா மன அழுத்தத்தை குறைக்கிறது. ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்துகிறது. முடி நரைப்பதைத் தடுக்க உதவுகிறது.
வெந்தயம்
வெந்தையம் மயிர்க்கால்களின் வலிமையை மேம்படுத்த உதவுகிறது. முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கிறது. வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து பேஸ்ட் செய்து உச்சந்தலையில் தடவ வேண்டும். வெந்தய தூளை தண்ணீருடன் உட்கொள்ளலாம். வெந்தயத்தைக் கொண்டும் பேஸ்ட் செய்யலாம்.
செம்பருத்தி மலர்
செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளில் வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கின்றன. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. செம்பருத்திப் பூக்களை எண்ணெயில் சேர்த்துப் பயன்படுத்தவும். அல்லது செம்பருத்திப் பூவைக் கொண்டு ஹேர் மாஸ்க் செய்யலாம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மெலனின் உற்பத்தியை மீட்டெடுக்க உதவுகின்றன. நரைப்பதை தாமதப்படுத்துகிறது. கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து தலைமுடியில் தொடர்ந்து தடவி வந்தால் நல்லது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்