Guava Chutney : சித்த மருத்துவர் சிவராமன் வீட்டு விருந்தில் பரிமாறப்பட்ட கொய்யா சட்னி செய்வது எப்படி?
Jan 07, 2024, 01:00 PM IST
Guava Chutney : சித்த மருத்துவர் சிவராமன் வீட்டு விருந்தில் பரிமாறப்பட்ட கொய்யா சட்னி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
கொய்யாக்காய் – 1
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
உளுந்து – ஒரு ஸ்பூன்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் அல்லது வர மிளகாய் – 2 (உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
மல்லித்தழை – ஒரு கைப்பிடி
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கொய்யாக்காயை நறுக்கி சிறு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேகவைத்து எடுத்து ஆறவைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் சீரகம், உளுந்து மற்றும் கடலை பருப்பு சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், புளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
வெங்காயம் பென்னிறமானதும் மல்லித்தழையை தூவி இறக்கிவிடவேண்டும்.
வேகவைத்துள்ள கொய்யாக்காய் மற்றும் இந்த வெங்காய கலவை இரண்டும் நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸிஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை இட்லி, தோசை, இடியாப்பம், பூர், சப்பாத்தி, ஆப்பம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
நாட்டு கொய்யாப்பழங்கள் எனில் அவற்றின் விதைகளை நீக்கிவிடவேண்டும். தாய் கொய்யா எனில் அதை அப்படியே பயன்படுத்தலாம்.
கொய்யாவின் நன்மைகள்
கொழுப்புச் சத்து குறைவான பழம் என்பதால் பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது. அருமையான கனிச்சாறு உள்ளதால் குடல் புண்ணை குணப்படுத்தும் தன்மைகொண்டது. மலச்சிக்கலை போக்குவதற்கு உதவுகிறது. கொய்யா பழம், காய், மரத்தின் வேர், இலைகள், பட்டை போன்றவற்றிலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்