தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Girl Baby Names : கிருஷ்ணனின் ராதையிடம் இருந்து பெண் குழந்தைகளுக்கு இத்தனை பெயர்கள் வைக்க முடியுமா?

Girl Baby Names : கிருஷ்ணனின் ராதையிடம் இருந்து பெண் குழந்தைகளுக்கு இத்தனை பெயர்கள் வைக்க முடியுமா?

Priyadarshini R HT Tamil

Aug 12, 2024, 06:27 AM IST

google News
Girl Baby Names : கிருஷ்ணனின் ராதாவிடம் இருந்து பெறப்பட்ட பெண் குழந்தைகளின் பெயர்கள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Girl Baby Names : கிருஷ்ணனின் ராதாவிடம் இருந்து பெறப்பட்ட பெண் குழந்தைகளின் பெயர்கள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Girl Baby Names : கிருஷ்ணனின் ராதாவிடம் இருந்து பெறப்பட்ட பெண் குழந்தைகளின் பெயர்கள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ராதாவின் இத்தனை அழகிய பெயர்களுள் ஒன்றை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள்

ராதா, இந்து புராணக் கதைகளின் முக்கிய கதாபாத்திரம். இறைவன் கிருஷ்ணரின் காதலி. ராதா என்ற பெயர் இந்தியாவில் நிறைய பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படுவது வழக்கம்தான், என்றாலும், அதில் இருந்து பெறப்பட்ட வேறு பெயர்களையும் பாருங்கள். அதையும் பெண் குழந்தைகளுக்கு வைக்கலாம்.

ராசேஸ்வரி

ராசேஸ்வரி என்ற பெயர், சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட பெயர். ‘உணர்வுகளின் ராணி’ என்பது இதன் பொருள் அல்லது ‘சென்டிமென்ட்களின் ராணி’ என்பது மற்றொரு பொருள். இந்த பெயருக்கு உணர்வுகளுடன் நிறைய தொடர்பு உண்டு. இது உணர்வுகளை கருணையுடனும், ஞானத்துடன் வெளிப்படுத்தும் மற்றும் பாராட்டும் திறன் கொண்டது.

ரம்யா

ரம்யா, என்றால் ‘இனிமையான மற்றும் மகிழ்ச்சியான’ என்று பொருள். அழகு, கருணை மற்றும் ஈர்ப்பின் திறன்களை வெளிப்படுத்துகிறது. அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியையும், நேர்மறை எண்ணங்களையும் கொண்டுவருவது என்பது இந்தப்பெயரின் பெருமை. அமைதியின் ஒளிக்கீற்று மற்றும் மயக்கும் இருப்பு என்பதை காட்டுகிறது.

பிருந்தாராதா

பிருந்தாராதா, சமஸ்கிருதப் பெயர் ஆகும். இது ராதா என்ற பெயரையும், கிருஷ்ணாவின் துணைவி என்பதன் இணைத்து வைக்கப்பட்ட பெயர். ராதாவின் பெயர் பிருந்தா, கிருஷ்ணனின் துணைவி என்பது ராதா, இது இரண்டையும் சேர்த்து வைக்கப்பட்ட பெயர். கிருஷ்ணனின் அன்புக்காதலி என்பது இதற்கு ஒரு அர்த்தம். பிருந்தாவன் என்பது புனிதமான தோட்டம் ஆகும். அங்குதான் கிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது பலவேறு திருவிளையாடல்களை நடத்திய இடமாகக் கருதப்படுகிறது.

சர்வவந்த்யா

சர்வவந்த்யா என்பது சமஸ்கிருதப் பெயர். இதற்கு அனைவராலும் வழிபடப்படுபவர் என்று பொருள். இந்தப் பெயருக்கு அதிகாரம், ஞானம், ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் மற்றவர்களை கவர்தல் என்று பொருள்.

சத்யபாரா

சத்யபாரா என்பது சமஸ்கிருதப் பெயர். அதற்கு, உண்மைக்கு கட்டுப்பட்டவர் என்பது அதற்கு பொருள். இந்தப் பெயர், சிறந்த நற்குணங்களைக் கொண்டவர் என்பதை சுட்டிக்காட்டுகிறது. உண்மைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தப்பெயரை கொண்டவர்கள் எப்போதும் நேர்மை தவறமாட்டார்கள் என்றும், எது சரி மற்றும் உண்மை என்பதை மட்டும் கைகொண்டு, அதை நம்பி அதன் வழி நடப்பவர்கள் என்று பொருள்.

ஸ்ரீ கிருஷ்ணபல்லவா

ஸ்ரீ கிருஷ்ணபல்லவா என்பது சமஸ்கிருதப் பெயர். இதற்கு அன்பான கடவுள் கிருஷ்ணர் என்பது பொருள். இதற்கு கடவுள் கிருஷ்ணருக்கு பிடித்தவர்கள் என்று பொருள். தெய்வத்துடன் தொடர்புடையவர் என்று பொருள்.

பூர்ணா

பூர்ணா என்றால் முழுமையானவர் அல்லது முழுமை என்று பொருள். முழுமை, என்பதை இது குறிப்படுகிறது. நிறைவான, பர்ஃபெக்ட்டானவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. இந்த பெயர், முழு இதயம் கொண்டவர் மற்றும் திருப்தியாக இருக்கும் மனநிலை என்ற பொருள் உள்ளது.

கந்தர்வா

கந்தர்வா என்றால், தெய்வீக பாடல்கள் பாடுபவர்கள் அல்லது பரலோக இசைக்கலைஞர் என்று பொருள். இந்தப்பெயர் கருணை, பண்ணிசை, இசையில் உள்ள ஈடுபாடு, கலை வெளிப்பாடு மற்றும் ஆன்மீக தொடர்பைக் காட்டுவதாக உள்ளது.

முக்திபிரதா

முக்திபிரதா, என்றால் விடுதலையை அருளுபவர் என்று பொருள். விடுதலை அளிப்பவர் என்ற பொருளும் உண்டு. இந்தப்பெயர், விடுதலை அல்லது ஆன்மீக சக்தியைக் கொடுப்பவர் என்பதை இது காட்டுகிறது. இது இரக்கம், பிரதிபலிப்பு மற்றும் இந்து இதிகாசங்களில் உள்ள நற்சிற்தனைகளை கொண்டது என்று இதற்கு பெயர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி