Shoulder: தோள்பட்டையில் ஏற்படும் ரத்த உறைவு: அதை சரிசெய்யும் சிகிச்சை வழிமுறைகள்!
Jan 04, 2024, 08:59 AM IST
தோள்பட்டையில் ஏற்படும் ரத்த உறைவினை சரிசெய்யும் சிகிச்சை வழிமுறைகள் குறித்துக் காண்போம்.
தோள்பட்டையில் ஏற்படும் ரத்த உறைவு தோள்பட்டை மூட்டுகளைப் பாதிக்கிறது. இந்த நிலை ஒரு நபரின் சராசரிப் பணிகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இது எளிய செயல்பாடுகளைக் கூட சவாலாக மாற்றும்.
சுகாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, தோள்ப்ட்டையில் ஏற்படும் ரத்த உறைவுக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இதனால், அனைத்து வயதினரும் அடிக்கடி எதிர்பாராத தோள்பட்டை வலியை அனுபவிக்கிறார்கள். இதனால் இதிலிருந்து விரைவாக குணமடையவும் அறிகுறிகள் மற்றும் பல்வேறு சிகிச்சைகளைப் புரிந்துகொள்வது அவசியம்.
தோள்பட்டை உடற்கூறியல் நுணுக்கங்கள்:
டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையின் எலும்பியல் மற்றும் விளையாட்டு மருத்துவப் பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் ஆஷிஸ் ஆச்சார்யா இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "தோள்பட்டை, பெரும்பாலும் க்ளெனோஹூமரல் மூட்டு என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நெகிழ்வுத்தன்மை கையை பல்வேறு திசைகளில் நகர அனுமதிக்கிறது. மூட்டு ஒரு பந்து மற்றும் சாக்கெட் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அங்கு மேல் கை எலும்பு (ஹியூமரஸ்) கிலெனாய்டு (ஸ்காபுலா) உடன் இருக்கிறது. இது மென்மையான மற்றும் வலியற்ற இயக்கத்தை செயல்படுத்துகிறது.
தோள்பட்டையில் ஏற்படும் ரத்த உறைவுக்கான அறிகுறிகள்:
டாக்டர் ஆஷிஸ் ஆச்சார்யா, தோள்பட்டையில் ஏற்படும் ரத்த உறைவுக்கான அறிகுறிகளை பின்வருமாறு எடுத்துரைத்தார்
- விறைப்பு: தோள்பட்டையில் ஏற்படும் ரத்த உறைவு, பொதுவாக விறைப்புடன் தொடங்குகிறது. இது காலப்போக்கில் மோசமடைகிறது. பாதிக்கப்பட்ட தோள்பட்டை படிப்படியாக அதன் இயக்கத்தைக் குறைத்துக் கொள்கிறது.
- வலி: தோள்பட்டையில் ரத்த உறைவு இருப்பவர்கள், குறிப்பாக கையை நகர்த்த முயற்சிக்கும்போது தொடர்ச்சியான, மந்தமான மற்றும் மிகுந்த வலியை அனுபவிக்கிறார்கள்.
- வரையறுக்கப்பட்ட இயக்க வரம்பு: தோள்பட்டையில் ஏற்படும் ரத்த உறைவு என்பது மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று. இது தோள்பட்டை மூட்டின் இயக்கத்தைக் குறைக்கிறது. அன்றாட நடவடிக்கைகளைச் செய்வது மிகவும் கடினமாகிறது.
- படிப்படியான தொடக்கம்: இந்த நிலை பொதுவாக முழுமையாக உருவாக இரண்டு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். மேலும் வலி படிப்படியாக அதிகரிக்கும்.
டெல்லியின் வசந்த் குஞ்சில் உள்ள இந்திய முதுகெலும்பு காயங்கள் மையத்தின் மூத்த ஆலோசகர் வலி மருத்துவர் டாக்டர் விவேக் லும்பா, தோள்பட்டை வலியின் இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம் என்று வலியுறுத்துகிறார்.
- தொடர்ச்சியான வலி: தோள்பட்டை வலியினால் உண்டாகும் அரிப்பு, தோள்பட்டை இயக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும். இது சில பகுதிகளுக்கு தொடர்ச்சியான வலியைத் தரலாம்.
- விறைப்பு: தோள்பட்டை வலியின் அடிக்கடி அறிகுறி என்பது உடல் உறுப்பு இயக்கங்களின் கட்டுப்படுத்தப்பட்ட வரம்பு ஆகும். இதனால் முதுகுக்குப் பின்புறமுள்ள பணிகள், கைகளை உயர்த்துவது சவாலானதாக இருக்கும்.
- நீண்டகால பலவீனம்: தோள்பட்டை வலியினால் பாதிக்கப்பட்ட பகுதி வலிமையை இழக்கக்கூடும். இதனால் பொருட்களை தூக்குவது மிகவும் கடினமான சூழலை உருவாக்கும்.
- அதிகரித்த உறுதியற்ற தன்மை: தோள்பட்டை வலியால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதாவது தங்கள் தோள்பட்டை மூட்டுகள் தளர்வாக இருப்பதைப் போலோ அல்லது வெளியே வருவது போன்ற உணர்வையோ கொண்டிருக்கலாம்.
- வீக்கமடைந்த பகுதி: தோள்பட்டை மூட்டில் ஏற்படும் அழற்சி பகுதியில் புண், வீக்கம் ஏற்படலாம்.
- ஒலி: தோள்பட்டையை நகர்த்தும்போது, கேட்கக்கூடிய கிளிக் ஒலி மூட்டுகளில் இருக்கும் சிக்கலைக் குறிக்கிறது.
காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள்:
தோள்பட்டையில் ஏற்படும் ரத்த உறைவுக்கான துல்லியமான காரணம் தெரியவில்லை என்றாலும், வீக்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது என்று டாக்டர் ஆஷிஸ் ஆச்சார்யா கூறினார். அறியப்பட்ட சில ஆபத்து காரணிகள் பின்வருமாறு
- காயம், அறுவை சிகிச்சை அல்லது நோய் காரணமாக தோள்பட்டை நீண்ட காலத்திற்கு அசையாமல் இருந்தால் தோள்பட்டையில் ரத்த உறைவு பெரும்பாலும் ஏற்படலாம்.
- அதிகப்படியான காயங்கள்: தோள்பட்டையில் இருக்கும் காயங்கள் அதில் ரத்தம் உறையக் காரணம் ஆகலாம்.
- அடிப்படை நிலைமைகள்: தைராய்டு கோளாறுகள் அல்லது நீரிழிவு அல்லது பார்கின்சன் நோய் போன்ற சில மருத்துவ நிலைமைகள் தோள்பட்டையில் ரத்த உறைவினை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
நோயறிதல் மற்றும் மதிப்பீடு:
டாக்டர் ஆஷிஸ் ஆச்சார்யா கூறுகையில், உங்களுக்கு தோள்பட்டையில் ரத்த உறைவு இருப்பதாக சந்தேகித்தால், எக்ஸ்ரே அல்லது எம்ஆர்ஐ போன்ற கண்டறியும் சோதனைகளை பரிந்துரைக்கலாம்.
சிகிச்சை:
டாக்டர் ஆஷிஸ் ஆச்சார்யாவின் கூற்றுப்படி, தோள்பட்டையில் ஏற்படும் ரத்த உறைவு சிகிச்சை இரண்டு முதன்மை குறிக்கோள்களில் கவனம் செலுத்துகிறது: வலிக்கான நிவாரணம் மற்றும் சாதாரண தோள்பட்டை செயல்பாட்டை மீட்டெடுத்தல்.
அப்படி செய்யப்படும் சிகிச்சை பின்வருமாறு:
- அழற்சி எதிர்ப்பு மருந்துகள்: இவை வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க பரிந்துரைக்கப்படுகின்றன. பொதுவான மருந்துகளில் ஆஸ்பிரின், இப்யூபுரூஃபன் அல்லது பிற மருந்துகள் அடங்கும்.
- கார்டிகோஸ்டீராய்டு ஊசி: இந்த ஊசிகள் தோள்பட்டை மூட்டுக்களில் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
- உடல் பயிற்சி: உடல் பயிற்சி பெரும்பாலும் சிகிச்சையின் அடித்தளமாகும். ஒரு உடல் பயிற்சியாளர், இந்த பயிற்சிகள் மூலம் உங்களுக்கு வழிகாட்ட முடியும்.
- வீட்டிலேயே பயிற்சிகள்: தொழில்முறை உடல் சிகிச்சை பயிற்சியாளர்கள், வீட்டிலேயே பயிற்சிகளைச் செய்ய ஊக்குவிக்கிறார்கள்.
- அறுவை சிகிச்சை: அறுவைசிகிச்சை அல்லாத நுட்பங்கள் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தாதபோது, அறுவை சிகிச்சை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தோள்பட்டை வலி சிகிச்சைக்கு டாக்டர் விவேக் லும்பா வலியுறுத்திய பின்வரும் படிகள்:
- ஓய்வு மற்றும் செயல்பாட்டு மாற்றம்: போதுமான ஓய்வு தோள்பட்டை சரியாக குணமடைய அனுமதிக்கிறது.
- உடல் சிகிச்சை: ஒரு உடல் பயிற்சியாளரால் சொல்லித்தரப்படும் பயிற்சிகள் தோள்பட்டையின் இயக்கம், மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்தலாம்.
- ஒத்தடம்: பாதிக்கப்பட்ட தோள்பட்டைக்கு வெப்பம் அல்லது குளிர் பொதிகளைப் பயன்படுத்தி ஒத்தடம் வைப்பது வீக்கத்தைக் குறைக்க உதவும்.
கூடுதலாக, தோள்பட்டை வலி பிரச்சினைகளைத் தடுக்கக்கூடிய சில உதவிக்குறிப்புகளை அவர் பரிந்துரைத்தார்:
- சரியான தோரணையை பராமரிப்பது தோள்பட்டை வலியைக் குறைக்க உதவுகிறது.
- மீண்டும் மீண்டும் கைகளை மேலே உயர்த்தி செய்யப்படும் பணிகளைத் தவிர்க்க வேண்டும்.
- உங்கள் தோள்களை வலுவாகவும் நெகிழ்வாகவும் வைத்திருக்க, அடிக்கடி உடற்பயிற்சி செய்யுங்கள்.
- உங்கள் தோள்களில் அதிக அழுத்தம் கொடுப்பதைத் தடுக்க பொருட்களை சரியாக தூக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தோள்பட்டை ரத்த உறைவில் இருந்து மீள்வது எப்படி?
"தோள்பட்டை ரத்த உறைவில் இருந்து மீள்வது என்பது ஒரு படிப்படியான செயல்முறையாகும். இது பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை எடுக்கும்.
பரிந்துரைக்கப்பட்ட பயிற்சிகளை விடாமுயற்சியுடன் கடைபிடிப்பதன் மூலம், பெரும்பாலான நபர்கள் அறுவை சிகிச்சை தலையீடுயில்லாமல் அவ்வலியில் இருந்து தப்புகிறார்கள். நீங்கள் சிரமங்களை எதிர்கொண்டால் எலும்பியல் மருத்துவ நிபுணரை அணுகுவது நல்லது’’ என்று டாக்டர் ஆஷிஸ் ஆச்சார்யா முடித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்