Fever Alert : தற்போது வரும் ஃப்ளுவில் 4 வாரம் வரை படுத்தும் இருமல்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!
Nov 18, 2023, 07:00 AM IST
Fever Alert : தற்போது வரும் ஃப்ளுவில் 4 வாரம் வரை இருமல் படுத்தி எடுக்கும் என்றும், அதற்கு உரிய சிகிச்சைகளை மக்கள் எடுத்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
தமிழகத்தில் விட்டு, விட்டு பெய்யும் மழை காரணமாக, மழை நீர் முறையாக வழிந்தோட வசதியில்லாமல் ஆங்காங்கே தேங்கியிருப்பதால் டெங்கு கொசுக்கள் அதிகம் வளர்ந்து, தமிழகத்தில் கணிசமாக டெங்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இந்தாண்டு (2023) முதல் டெங்கு பாதிப்பு 6,000 பேரை கடந்துள்ளது. சென்னையிலும் இதுவரை டெங்கு பாதிப்பு 50 பேரை கடந்துள்ளது. இந்நிலையில் டெங்குவை ஆரம்பத்தில் கண்டறிவது மிக, மிக அவசியம்.
டெங்குவை பொறுத்தமட்டில் முதல் வாரத்தில் டெங்கு பாதிப்பை உறுதிபடுத்த NS1 protein பரிசோதனை மட்டுமே நேர்மறை முடிவுகளைக் காட்டும். Ig M, Ig G, 1 முதல் 2 வாரத்திலும், 2 வாரங்களுக்குப்பின்னர், முறையே அவை நேர்மறை முடிவுகளைக் காட்டும் என்பது அறிவியல் விதி.
முதல் வாரத்தில் டெங்குவைக் கண்டறிய, NS1 பரிசோதனையால் மட்டுமே முடியும். ஆனால், சென்னை மாநகராட்சியோ NS1 நேர்மறை முடிவுகளை ஏற்காமல், அது பாசிடிவ்வாக இருந்தால், "டெங்கு சந்தேகம்" என்றே குறித்துக்கொள்கிறது. IgM, IgG நேர்மறை முடிவுகள் இருந்தால் மட்டுமே டெங்கு சென்னை மாநகராட்சியால் உறுதிபடுத்தப்படுகிறது.
தொற்றுநோய் நிபுணர் சுப்ரமணியன் கூறுகையில்,"டெங்குவை ஆரம்ப நிலையில் கண்டறிய NS1 பரிசோதனை முக்கியம் என்றும், அதன் நேர்மறை முடிவுகள் இருப்பதை வைத்து டெங்குவை உறுதிபடுத்த முடியும் என்றும், அரசின் போக்கான IgM, IgG நேர்மறை முடிவுகளை வைத்தே டெங்குவை உறுதிபடுத்தமுடியும் எனக் கூறுவது டெங்கு பாதிப்பு கண்டறியப்படாமல், பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்கும் " என்றும் தெளிவாகக் கூறுகிறார்.
2015ம் ஆண்டு PLOS மருத்துவ ஆய்வுக் கட்டுரையில் சென்னையில் டெங்குவின் பாதிப்பு 93 சதவீதம் பேருக்கு இருந்தது பரிசோதனைகள் மூலம் உறுதிசெய்யப்பட்டது. மதுரையில் செய்த மற்றொரு டெங்கு ஆய்வில், டெங்கு பாதிப்பு தமிழகத்தில் 282 மடங்கு குறைத்து காண்பிக்கப்படுவதாகக் கூறுகிறது.
தமிழகத்தில் NS1 பரிசோதனையை எந்த அரசு மருத்துவமனைகளிலும் செய்யும் வசதி இல்லை.
மக்களும் தற்போது பாதிப்பை ஏற்படுத்தும் டெங்கு, புளூ காய்ச்சல் வைரஸ்களை கட்டுப்படுத்த மருந்துகள் இல்லை என்பதை உணர்ந்து, இருமல் குறை ய 1 முதல் 4 வாரங்கள் வரை தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும்.
ஆய்வுகளில் தற்போதைய புளூ (H1N1, H3N2) இருமல் 15 முதல் 20 சதவீதம் பேருக்கு 1 முதல் 4 வாரங்கள் உறுதிபடுத்தியுள்ளதால், மக்களும்,
மருத்துவர் இருமலைக் குறைக்க சரியான சிகிச்சைஅளிக்கவில்லை என புகார் கூறாமல் 1 முதல் 4 வாரங்கள் இருமலைக் குறைக்க தொடர் சிகிச்சை மேற்கொள்ள முன்வர வேண்டும். அதைச் செய்யாமல் தேவையற்ற பரிசோதனைகள் அல்லது மருந்துகள் அல்லது ஊசிகள் எடுத்துக் கொள்வது, பலனளிக்காது என்று மருத்துவர் புகழேந்தி எச்சரிக்கிறார்.
டாபிக்ஸ்