‘வடி பிரியாணி’ செய்யலாமா? முகத்தில் அடிக்க வாய்ப்பே இல்லை.. அண்டாவை திறந்தாலே ‘கொண்டாலே’ என்பார்கள்!
Nov 08, 2024, 11:21 AM IST
கம கமக்கும் ‘வடி பிரியாணி’ செய்யும் முறை இதோ இங்குபாய் வீட்டு கல்யாண பிரியாணி என்றும் இதனை அழைப்பதுண்டுதிகட்டாத பிரியாணியாக இது இருக்கும் என்பதால், ருசி அலாதியானதுசிக்கன், மட்டன் என இரண்டிலும் இதை தயாரிக்கலாம்
கமகம பாய் வீட்டு வடி பிரியாணி செய்வது எப்படி? திகட்டாத இந்த பிரியாணி, உங்கள் வீட்டில் உள்ள குட்டீஸ் முதல், பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடலாம். இதோ வடி பிரியாணி செய்முறையும், அதற்கு தேவையான பொருட்களையும் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் இதோ:
பிரிஞ்சி இலை - 1 கிராம்
ஏலக்காய்- 1 கிராம்
பட்டை- 1 கிராம்
கிராம்பு- 1 கிராம்
அண்ணாசி பூ - 2
பெரிய ஏலக்காய் -2
பெரிய வெங்காயம் - 400 கிராம்
இஞ்சி பேஸ்ட்- 100 கிராம்
பூண்டு பேஸ்ட் - 75 கிராம்
தக்காளி -250 கிராம்
எலுமிச்சை - 1
கொத்து மல்லி- ஒரு கை பிடி
புதினா - ஒரு கை பிடி
ப.மிளகாய் - 4
தயிர் - 100 மி.லி
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் பொடி- 10 கிராம்
எண்ணெய் - 200 கிராம்
உப்பு- தேவைக்கு
சிக்கன் - 1 கிலோ
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
ஒரே நேரத்தில் இரு அடுப்பு வேண்டும்
வடி பிரியாணியை பொருத்தவரை, இரு பிரிவாக சமையல் நடக்க வேண்டும். ஒன்று, அரிசியை உலை வைத்து தனியாக வடித்து எடுப்பது, மற்றொன்று, பிரியாணிக்கான மசாலா தயாரிப்பது. இது இரண்டும், தனித்தனியாக நடக்க வேண்டும்.
பிரியாணி மசாலா தயாரிக்கும் முறை
பிரியாணி மசாலா தாயாரிக்க, அதற்கான பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றவும். சூடானதும், பிரிஞ்சி இலையை அதனுள் போடவும். கிராம்பு, ஏலக்காய், பெரிய ஏலக்காய், அண்ணாசி பூ, பட்டை போட்டு சிறிது நேரத்தில், நறுக்கி வைத்த வெங்காயத்தை போடவும். வெங்காயம் நன்கு வதக்கவும். பொன்னிறமாக வரும் வரை காத்திருக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். மிளகாய் தூள் போட்டு, சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள் போட்டு சேர்த்து கரண்டியால் கிண்டவும். மசாலா எண்ணெய் கக்கி வரும் போது, நறுக்கிய தக்காளியை போடவும். சிறிது நேரத்தில் நறுக்கிய மிளகாய், கொத்து மல்லி, புதினா போட்டு சேர்த்து கிண்டவும். இப்போது அலசிய சிக்கனை, அந்த மசாலாவில் சேர்த்து கிண்டவும். சிக்கன் நிறம் மாறும் வரை தீயை அதிகரிக்கவும். பின்னர் சிக்கனுக்கு தேவையான உப்பு போடவும். 5 நிமிடம் உயர் தீயில் வேக வேண்டும். அவ்வப்போது கிண்டி விடவும். சிறிது நேரம் கழித்து, எலுமிச்சை சாறு ஊற்றவும். தயிரை ஊற்றி கிண்டவும்.
அரிசி வடிப்பது எப்படி?
அரிசியை உலை வைக்க, ஒரு கிலோவுக்கு 4 லிட்டர் தண்ணீர் ஊற்றி உலை வைக்க வேண்டும். ஏலக்காய், கிராம்பு, பட்டை, பெரிய ஏலக்காய், பிரிஞ்சி இலை சிறிது போட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கம் வரை மூடி போடவும். நீர் கொதித்த பின், லேசாக கொத்து மல்லி, புதினா போடவும். சாதம் சாப்ட் ஆக வருவதற்காக கொஞ்சம் எண்ணெய் ஊற்றலாம். பின்னர், எலுமிச்சை சாறு ஊற்றவும். தேவையான உப்பு போடவும். உலை கொதித்ததும், அரிசியை போடவும்.
தம் போட்டால்.. பிரியாணி ரெடி
இரண்டும் தயாரான பின், தோசை கல்லியில் தம் போடலாம். உப்பு, காரம் பார்த்த பின், பிரியாணி மசாலாவில் வெந்த அரிசியை கொட்டவும். பின்னர் வெளியே புகை போகாதபடி மூடி, 5 நிமிடம் ஹை ஸ்பீடு, 15 நிமிடம் லோ ஸ்பீடு வைத்து தம் போடவும். அதன் பின் பாத்திரத்தை இறக்கி, பக்குவாக கிளறினால், சுடச்சுட வடி பிரியாணி ரெடி.
டாபிக்ஸ்