தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Egg Semiya Kuzhipaniyaram : முட்டை - சேமியா குழிப்பணியாரமா? – வித்யாசமா இருக்கே! குழந்தைகளுக்கு பிடிக்கும்!

Egg Semiya Kuzhipaniyaram : முட்டை - சேமியா குழிப்பணியாரமா? – வித்யாசமா இருக்கே! குழந்தைகளுக்கு பிடிக்கும்!

Priyadarshini R HT Tamil

Oct 01, 2023, 07:00 AM IST

google News
Egg Semiya Kuzhipaniyaram : முட்டை மற்றும் சேமியாவில் செய்யப்படம் குழிப்பணியாரம். வித்யாசமா இருக்கும். நூடுல்ஸ் வைத்தும் செய்யலாம். குழந்தைகளுக்கும் பிடிக்கும்!
Egg Semiya Kuzhipaniyaram : முட்டை மற்றும் சேமியாவில் செய்யப்படம் குழிப்பணியாரம். வித்யாசமா இருக்கும். நூடுல்ஸ் வைத்தும் செய்யலாம். குழந்தைகளுக்கும் பிடிக்கும்!

Egg Semiya Kuzhipaniyaram : முட்டை மற்றும் சேமியாவில் செய்யப்படம் குழிப்பணியாரம். வித்யாசமா இருக்கும். நூடுல்ஸ் வைத்தும் செய்யலாம். குழந்தைகளுக்கும் பிடிக்கும்!

தேவையான பொருட்கள்

சேமியா – அரை கப்

(கெட்டியான பாயாசத்துக்கு உபயோகப்படுத்தும் சேமியா எடுத்துக்கொள்ளுங்கள். கிச்சடி செய்ய பயன்படத்தும் சேமியாவும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் வேகவைக்கும்போது கெட்டியாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)

தண்ணீர் – ஒரு கப்

முட்டை – 2

சின்ன வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1

கொத்தமல்லித்தழை – சிறிது

சில்லி ஃப்ளேக்ஸ் – கால் ஸ்பூன்

ஓரிகேனோ – கால் ஸ்பூன்

(சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் ஓரிகேனோ இரண்டுமே தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்வது மட்டுமே இல்லாவிட்டால் தவிர்த்து விடலாம்)

மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

உப்புத்தூள் – அரை ஸ்பூன்

செய்முறை

அரை கப் சேமியாவுக்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து நன்றாக தண்ணீர் வற்றும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சேமியா குழைந்துவிடக்கூடாது.

ஒரு பவுலில் முட்டையை சேர்த்து லேசாக அடித்தவிட்டு, பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, சில்லி ஃப்ளேக்ஸ், ஓரிகேனோ, மிளகாய் தூள், உப்பு சேர்த்து மெதுவாக கலந்துகொள்ள வேண்டும்.

(உங்களுக்கு தேவைப்பட்டால் சீஸ் துருவி சேர்த்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய வெவ்வேறு காய்கறிகள் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது பொடியாக நறுக்கிய சிக்கன் கூட சேர்த்துக்கொள்ளலாம்)

இந்த கலவையை, குழிப்பணியார சட்டியில் சேர்த்து சிறுசிறு பணியாரங்களாக வார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ஆகும். சேமியாவுக்கு பதில் நூடுல்ஸ் சேர்த்தும் செய்யலாம்.

இதில் மைதா அல்லது கோதுமை சேர்த்து தோசைக்கல்லில் அடைகளாகவும் வார்த்து எடுக்கலாம்.

இதை காலை உணவாகவும் செய்யலாம் அல்லது மாலை சிற்றண்டிக்கும் செய்த சாப்பிடலாம்.

எனவே சேமியா சேர்த்து ஒருமுறை, நூடுல்ஸ் சேர்த்து ஒரு முறை செய்து பாருங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி