தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குளிர்காலத்தில் முடி பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா.. ஆரஞ்சு தோல் இருந்தா போதும்.. எப்படி பயன்படுத்தணும் பாருங்க

குளிர்காலத்தில் முடி பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா.. ஆரஞ்சு தோல் இருந்தா போதும்.. எப்படி பயன்படுத்தணும் பாருங்க

Nov 11, 2024, 05:45 AM IST

google News
குளிர்காலம் தொடங்கி சில நாட்கள் கடந்துவிட்டன. பொதுவாக இந்த நேரத்தில் முடிகள் வறச்சியாக மாறுவதோடு பொலிவு இழப்பது பெரும் பிரச்சனையாக மாறலாம். இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஆரஞ்சு தோலில் உள்ளது. குளிர்காலத்தில் கூந்தல் பராமரிப்புக்கு ஆரஞ்சு தோலை எப்படி பயன்படுத்தலாம் என்று பாருங்கள். (PC: Canva)
குளிர்காலம் தொடங்கி சில நாட்கள் கடந்துவிட்டன. பொதுவாக இந்த நேரத்தில் முடிகள் வறச்சியாக மாறுவதோடு பொலிவு இழப்பது பெரும் பிரச்சனையாக மாறலாம். இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஆரஞ்சு தோலில் உள்ளது. குளிர்காலத்தில் கூந்தல் பராமரிப்புக்கு ஆரஞ்சு தோலை எப்படி பயன்படுத்தலாம் என்று பாருங்கள்.

குளிர்காலம் தொடங்கி சில நாட்கள் கடந்துவிட்டன. பொதுவாக இந்த நேரத்தில் முடிகள் வறச்சியாக மாறுவதோடு பொலிவு இழப்பது பெரும் பிரச்சனையாக மாறலாம். இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஆரஞ்சு தோலில் உள்ளது. குளிர்காலத்தில் கூந்தல் பராமரிப்புக்கு ஆரஞ்சு தோலை எப்படி பயன்படுத்தலாம் என்று பாருங்கள்.

ஆரஞ்சு பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி, ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. எனவே ஆரஞ்சு பழங்களை அதிகம் சாப்பிடுங்கள், இப்போது சந்தையில் ஆரஞ்சுக்கு பஞ்சமில்லை என்கிறார்கள். நீங்கள் சாப்பிட விரும்பும் ஆரஞ்சு பழதோலை கீழே வீசி விடுவீர்கள் என்றால் இனி அந்த தவறை செய்ய வேண்டாம். தோலை சேகரித்து வைக்க வேண்டும். பழத்தைப் போலவே தோலும் நன்மை பயக்கும். பொதுவாக இப்போது முடி பிரச்சினை என்பது பலருக்கும் உள்ளது. குளிர்காலத்தில் முடி உதிரிவு அதிகரிக்கிறது. சிலருக்கு முடியில் அதிக அளவில் வறட்சி ஏற்படுகிறது. இந்த பிரச்சனை இருந்தால் ஆரஞ்சு தோல் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் பலவிதமான முடி பிரச்சனைகளை பொருத்தமட்டில் மருந்து போல் செயலாற்றும.

ஆரஞ்சு பழத்தோல் முடியை வளர்க்கும் என்பது உண்மைதான். ஆனால் முடி பராமரிப்புக்கு அதை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பதை நாம் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். எனவே முடி பராமரிப்புக்கு ஆரஞ்சு தோலை எப்படி பயன்படுத்தலாம் என்று பாருங்கள். அதைப் பயன்படுத்திய பிறகு முடிவுகளைப் பார்த்தால் நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள்.

ஆரஞ்சு தோல் மற்றும் எலுமிச்சை சாறு

சிறிது ஆரஞ்சு தோலை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும். அதனுடன் அரை எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். pH அளவை மேம்படுத்தவும், இயற்கையான வாசனைக்காகவும் இந்த நீரில் முடியைக் கழுவவும்.

ஆரஞ்சு மற்றும் தயிர் முடி மாஸ்க்

ஆரஞ்சு தோலை நன்கு காயவைத்து அரைக்க வேண்டும். இந்தப் பொடியுடன் தயிர் சேர்த்துக் கலக்க வேண்டும். இதை உங்கள் தலைமுடியில் ஹேர் மாஸ்க் போல் தடவி, அரை மணி நேரம் விட்டு, குளிர்ந்த நீரில் தலையை அலசவும். இது முடியை மென்மையாக்குகிறது மற்றும் வேரில் இருந்து முடியை வலுப்படுத்துகிறது.

ஆரஞ்சு தோல் தேன் முடி கண்டிஷனர்

உலர்ந்த ஆரஞ்சு தோல் பொடியை ஒரு ஸ்பூன் தேனுடன் கலக்க வேண்டும். இது ஒரு ஹேர் கண்டிஷனராக பயன்படுத்தப்படலாம். மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்க ஹேர் கண்டிஷனராக பயன்படுத்தவும்.

ஆரஞ்சு தோல் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் உலர்ந்த ஆரஞ்சு தோலைக் கொதிக்க வைத்து எண்ணெயைத் தயாரிக்கவும். குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் கூந்தலில் தடவி, பிறகு குளித்தால் முடி மற்றும் உச்சந்தலை வறண்டு போகாமல் தடுக்கவும்.

ஆரஞ்சு தோல், கற்றாழை சீரம்

தோல் தூள், ஆரஞ்சு சாறு மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இயற்கையான பிரகாசத்தைப் பெற உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும். இது முடி சீரம் போல வேலை செய்கிறது.

ஆரஞ்சு பழத்தோலில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை உலர்ந்த முடியின் வேர்க்கால்களை வளர்க்கின்றன. ஆனால் முடியில் ஆரஞ்சு தோலைப் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள். உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை