Dengue Prevention : அச்சுறுத்தும் டெங்கு - அலட்சியமாக அரசு! தடுக்க என்ன செய்யலாம் – மருத்துவர் அறிவுரை!
Oct 03, 2023, 07:42 AM IST
Dengue Prevention : தமிழகத்தில் டெங்கு தொடர்ந்து அச்சுறுத்தி வரும் வேளையில் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என மருத்துவர்கள் மீண்டும், மீண்டும் அறிவுறுத்துவது என்ன?
டெங்கு காய்ச்சல் தமிழகம் மற்றும் சென்னையில் கட்டுக்குள் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறிவரும் வேளையில்,
சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு விரைவில் பணிக்குத் திரும்புவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
டெங்கு பாதிப்பு தடுப்பு குறித்து பேசி வரும் வேளையில் அரச அதிகாரிக்கே டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. தமிழக அரசு டெங்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறதா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அவரது வீட்டைச் சுற்றி மழைநீர் தேங்கியிருந்ததா? அங்கு டெங்கு கொசுக்கள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டதா? அவரது வீட்டைச் சுற்றி கொசுமருந்து தெளிக்கப்பட்டதா? காய்ச்சல் கண்டவுடன் அவர் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்குச் சென்றாரா? எங்கு டெங்கு பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது? எந்த பரிசோதனை மூலம் அவருக்கு டெங்கு பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டது? NS1 அல்லது Ig M பரிசோதனையா?
மேற்சொன்ன பரிசோதனைகள் செய்யும் வசதி அரசு மருத்துவமனைகளில் உள்ளதா? NS1 பரிசோதனையில் தான் முதல் வாரத்தில் முடிவுகள் நேர்மறையாக வரும். ஆனால் அந்த பரிசோதனை வசதி அரசு மருத்துவமனைகளில் இல்லை.
டெங்கு பரிசோதனைகள் வசதி அரசு மருத்துவமனைகளில் செய்ய ராதாகிருஷ்ணன் மேற்கொண்ட முயற்சிகள் என்ன? அவரின் வீட்டைச் சுற்றி மழைநீர் தேங்காமல் இருக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்ன? அதனால் பலன் கிடைத்ததா? எத்தகைய சிகிச்சை அவருக்கு வீட்டில் அளிக்கப்படுகிறது.
டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவருக்கே கொசுக்கடி அல்லத வைரஸ் பரவல் என்றால் சாதாராண மனிதர்களின் நிலை?
டெங்கு பாதிப்பை தடுக்க -
மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
முதல் வாரத்தில் டெங்குவை உறுதிபடுத்தும் NS1 பரிசோதனை வசதி எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத சூழலில் அதை உருவாக்க வேண்டும்.
டெங்கு கொசு விரைந்து வளர மற்றும் கொசுக்களின் இனப்பெருக்கம் விரைந்து நடக்க உதவும் புவிவெப்பமடைதலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் வேண்டும்.
இல்லாவிட்டல் டெங்கு பாதிப்பு கட்டுக்கடங்காமல் செல்லும். எனவே அரசு போதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
டாபிக்ஸ்