Dengue Fever: அதிகரிக்கும் மழை! அச்சுறுத்தும் டெங்கு! அதிர்ச்சி தரும் ஆய்வு! அசால்டாக அரசு! அறிவுறுத்தும் மருத்துவர்கள்!
Sep 18, 2023, 02:35 PM IST
Dengue Fever : தமிழகத்தில் டெங்கு பாதிப்பு, உயிரிழப்பு கட்டுக்கள் இருப்பதாகவும், தக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
சென்னை கார்ப்பரேஷன் சிறப்பு காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிறது. 3,390 சிறப்பு காய்ச்சல் முகாம் வாயிலாக 1,13,489 பேர் பயன் அடைந்துள்ளதாகவும் நாளொன்றுக்கு 50 தெருக்கள் என மழைக் காலம் முடியும் வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் இந்தாண்டு 297 டெங்கு பாதிப்பு மட்டுமே உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும், செப்டம்பரில் வெறும் 27 டெங்கு பாதிப்புகள் மட்டுமே உள்ளதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.
டெங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள நிலையில், அவை எந்தளவுக்கு எடுக்கப்பட்டு வருகின்றன என்ற தகவல் இல்லை.
செப்டம்பர் 16ம் தேதிப்படி, சென்னையில் கடந்தாண்டைவிட டெங்கு பாதிப்பு கூடுதலாக உள்ளது.
2022-259 பேர்
2023-297 பேர் டெங்குவால் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடையார், தேனாம்பேட்டை, தொண்டியார் பேட்டை, அண்ணாநகர் பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. அடிக்கடி, விட்டுவிட்டு மழை பெய்வதும், கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருக்கும் பகுதிகளில் நீர் தேங்கியிருப்பதும் கொசுக்கள் வளர ஏதுவாகி, டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களில் செய்த ஆய்வில்,
71 வணிக கட்டுமான இடங்கள்,
33 வீட்டுமனை கட்டுமான இடங்கள்
687 பொது கட்டுமான இடங்கள் போன்றவற்றில் டெங்கு கொசுக்கள் வளரும் சூழல் அதிகமிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
டெங்குவை தடுக்கும் வழிகள்
புவிவெப்பமடைதல் காரணமாக கொசுக்களின் இனப்பெருக்க நேரம் குறைந்து, கொசுக்களில் வைரஸ் அதிகம் பெருகும் வாய்ப்பும் உருவாவதால், புவிவெப்பமடைதலை கட்டுக்குள் கொண்டுவராமல் டெங்குவை கட்டுப்பாட்டிற்குள் வைப்பது சாத்தியமில்லாதது.
நீர்தேங்கலை (Source Reduction) ஒழிக்காமல் டெங்குவை கட்டுப்படுத்த முடியாது.
அரசின் அலட்சியம்
சென்னையில் 2015ல் செய்த ஆய்வில் – PLOS – 93 சதவீதம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வின்படி சென்னையில் மட்டும் ஆண்டிற்கு 2,280,00 பேர் டெங்குவால் பாதிக்கப்படுவர் என்பதும், இறப்பு விகிதம் 1 சதவீதம் என எடுத்துக்கொண்டால் ஆண்டிற்கு 2,200 பேர் சென்னையில் டெங்குவால் இறப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சென்னையில் இந்த ஆண்டில் ஒருவர் மட்டுமே இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு செய்ய வேண்டியது
அண்மையில் திருவாரூரில் 22 வயது பயிற்சி மருத்துவர் சிந்து, திருச்சியில் 33 வயதான கனகவள்ளி இறந்தது டெங்குவால் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
தமிழகத்தில் முதல் வாரத்தில் டெங்கு பாதிப்பை உறுதிபடுத்த NS1 பரிசோதனையால் மட்டுமே முடியும். எனவே அந்த வசதியை அனைத்து தமிழக அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டும்.
கொசு மருந்து டெங்கு லார்வாக்களை கொல்லாது. டெங்கு லார்வாக்களை நீர்நிலைகளில் அழிக்க கம்பூசியா, பிசில்லா வகை மீன்களை வளர்க்க அரசு முன்வர வேண்டும்.
நொச்சி,வேப்ப இலைகள் கொசு விரட்டிகளாக பயன்படும். அரசு அதை ஊக்குவிக்க வேண்டும்.
எனவே அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கைவிடுத்துள்ளார்.