Dengue Fever : பற்றிப்பரவும் டெங்கு மற்றும் ஃப்ளூ காய்ச்சல்கள்; அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
Dec 02, 2023, 07:00 AM IST
Dengue Fever : பற்றிப்பரவும் டெங்கு மற்றும் ஃப்ளூ காய்ச்சல்கள்; அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
மழை பெய்து கொண்டிருக்கும் தமிழகத்தில் நோய் தடுப்பில் அரசின் செயல்பாடுகளும், கள உண்மையும் எப்படி இருக்கிறது.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கும் வேளையில் தமிழக அரசு காய்ச்சல் முகாம்களை நடத்தி சரியான நோய்தடுப்பு முறைகளையும் பின்பற்றி வருவதாகவும், மழை மற்றும் நோய்களை எதிர்கொள்ளும் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை தமிழகத்தில் கடைபிடித்து வருவதாகவும் தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை பேசிவரும் சூழலில், மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலி உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் தான் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் டெங்குவால் இறந்தார். அதுவும் அதிர உதிரப்போக்கால் ஏற்பட்ட உயிரிழப்பு என கூறப்பட்டது.
எனவே, மழை பெய்துவரும் சூழலில், கொசுக்கள் இனப்பெருக்கத்திற்கான வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில், தமிழக அரசு காய்ச்சல் முகாம்களை மட்டும் நடத்தி, மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே மதுரையிர் 2006 முதல் 12 வரை டெங்கு பாதிப்புகளை ஆய்வு செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், மதுரை கிளை, பிற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்திய ஆய்வில், மதுரையில் டெங்கு பாதிப்பு 282 குறைத்து காண்பிக்கப்படுவதாக அறிக்கை வாயிலாக தெரியப்படுத்தியது.
தமிழகத்தில் டெங்கு உயிரிழப்பு 2012, 2017 ஆகிய ஆண்டுகளில் அதிகம் இருந்தபோதே டெங்கு இறப்புகள் தமிழகத்தில் 2 – 3 மடங்கு குறைத்து காண்பிக்கப்படுவதாக, நோய் தடுப்புத்துறை நிபுணர் மருத்துவர் இளங்கோ பதிவிட்டார்.
ஆனால் இதுவரையில் கூட, தமிழக அரசு மருத்துவமனைகளில் டெங்குவை முதல் வாரத்தில் கண்டறிந்து உறுதிபடுத்தும் பரிசோதனைகள் (என்எஸ் 1 பரிசோதனை) தமிழக அரசு மருத்துவமனைகளில் இல்லாதிருப்பது அரசின் தவறாக போக்காக உள்ளது.
கொசு உற்பத்தியை குறைக்க புவிவெப்பமடைதலை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். (இல்லையேல் வெப்ப உயர்வு காரணமாக கொசுக்களின் இனப்பெருக்கம் கூடி கொசுவால் ஏற்படும் நோய் பாதிப்ப மற்றும் இறப்பு அதிகமாகும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது)
புவிவெப்பமடைதல் காரணமாக கொசுக்களால் ஏற்படும் டெங்கு பாதிப்பு காலம் 12 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மிக முக்கியமாக, மழை பெய்யும்போது நீர் தேங்காவண்ணம் (Source Reduction) -அதன் மூலம் கொசு உற்பத்தியை குறைப்பதுமே சிறந்த தடுப்பு நடவடிக்கையாக இருக்க, அதில் துளியும் அக்கறை காட்டாமல் அரசு வெறும் காய்ச்சல் முகாம்களை நடத்துவது டெங்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்பை எப்படி கட்டுப்படுத்தும்.?
2020ல் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் செய்த ஆய்வில் GIS (Geographic Information System) வைத்து டெங்கு பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து, தக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே டெங்கு மற்றும் பற்றிப்பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
டாபிக்ஸ்