Deepavali Special Sweet : கலாகண்ட் – பேரே வித்யாசமா இருக்கே? இது எப்டி இருக்கும்? தீபாவளிய ஐமாய்ங்க!
Oct 25, 2023, 07:30 AM IST
Deepavali Special Sweet : கலாகண்ட், பேரே வித்யாசமா இருக்கே? இது எப்டி இருக்கும்? இதோ ரெசிபி இருக்கு இந்த தீபாவளிக்கு செஞ்சு அசத்திடுங்க.
தீபாவளி நெருங்கி வருகிறது. இந்த தீபாவளிக்கு வித்யாசமா என்ன ஸ்வீட் செய்யலாம் என்ற குழப்பத்தில் இருக்கும்போது, இதுபோன்ற புதிய ஸ்வீட்களை முயற்சித்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
ஏலக்காய் – 4 (விதை நீக்கியது)
சர்க்கரை – 1 ஸ்பூன்
பன்னீர் – 200 கிராம் (துருவியது)
கண்டன்ஸ்ட் மில்க் – 400 கிராம்
சமையல் ரோஸ் எசன்ஸ் – சில துளிகள்
பிஸ்தா – 4 டேபிள் ஸ்பூன் (பொடித்தது)
செய்முறை
முதலில் சர்க்கரையுடன் சேர்த்து ஏலக்காயை பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அடிக்கனமான பாத்திரத்தில், துருவிய பன்னீர் மற்றும் பால் சேர்த்து நன்றாக கிளறவேண்டும். அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
கொதிக்கத்துவங்கியவுடன், அடுப்பை குறைத்துவிட்டு, அடிபிடித்துவிடாமல் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். 5 முதல் 7 நிமிடத்தில் இந்தக்கலவை கெட்டியாகி வரும். ஓரங்களில் விடுபட துவங்கும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
மிருதுவான, மணல் மணலாக திரண்டு வரவேண்டும். கரண்டியில் மோளும் பதத்தில் இருக்க வேண்டும்.
தீயை குறைத்து, ரோஸ் வாட்டரை சேர்க்க வேண்டும். கடாயிலே ஆறவைத்து கெட்டியாகவிடவேண்டும்.
ஒரு பேக்கிங் ட்ரேயில் பார்ச்மென்ட் பேப்பரை வைத்து, ஆறிய கலாகண்டை பரப்பிவிடவேண்டும். 2 சென்டிமீட்டர் உயரத்தில், செவ்வக வடிவில் வெட்டி எடுக்க வேண்டும்.
அதில் பொடித்த பிஸ்தாக்களை மேலே தூவி விடவேண்டும். பின்னர் ஃபிரிட்ஜில் வைத்து குளுமையாக்க வேண்டும்.
நன்றாக கெட்டியானவுடன் வெளியே எடுத்து ஆறவைத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவேண்டும்.
இந்த துண்டுகளை தனித்தனியாக எடுத்து 4 முதல் 5 நாட்கள் வரை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்