Christmas Special Cake : இட்லி பாத்திரத்திலே சூப்பரான கேக்! இந்த கிறிஸ்துமஸ்க்கு செஞ்சு அசத்துங்க!
Dec 18, 2023, 09:41 AM IST
Christmas Special Cake : இட்லி பாத்திரத்திலே சூப்பரான கேக்! இந்த கிறிஸ்துமஸ்க்கு செஞ்சு அசத்துங்க!
தேவையான பொருட்கள்
ஆரஞ்சு பழம் – 2
(விதைகைளை நீக்கிவிட்டு, மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்றிரண்டாக அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வடிகட்டியில் சேர்த்து நன்றாக பிழிந்து சாறு எடுத்துக்கொள் வேண்டும்)
கருப்பு உலர் திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை உலர் திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்
டூட்டி ப்ரூட்டி 3 நிறங்களில் – 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
பாதாம் – 2 டேபிள் ஸ்பூன்
செரி – 2 டேபிள் ஸ்பூன்
(இதுமட்டுமின்றி உங்களுக்கு பிடித்த அனைத்து உலர் பழங்களும் சேர்த்துக்கொள்ளலாம். உலர் பழங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது, கேக் மிகவும் சுவை நிறைந்ததாகிறது)
ஆரஞ்சு பழச்சாறில் அனைத்தையும் ஊறவைக்க வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு ஒன்றும் செய்யாமல் ஊறவைத்துவிடவேண்டும்.
சர்க்கரை – ஒரு கப்
பட்டை – 2
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
அடுப்பில் ஒரு கடாயை சூடாக்கி, அதில் கால் கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கேரமலைஸ் செய்துகொள்ள வேண்டும். தேன் நிறம் வர வேண்டும். கேரமலைஸ் செய்து, அதில் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். சுகர் சிரப் செய்துகொள்ள வேண்டும். இதுதான் இந்த பிலம் கேக்குக்கு சுவை கொடுக்கும்.
ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும்.
வெண்ணெய் – 75 கிராம்
முட்டை – 2
மைதா – ஒரு கப்
பேக்கிங் பவுடர் – ஒரு ஸ்பூன்
பேக்கிங் சோடா – கால் ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் – ஒரு ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், முட்டை, பொடித்த சர்க்கரை என அனைத்தும் சேர்த்து நன்றாக விஸ்க் வைத்து அடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் ஊறவைத்த சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, வெண்ணிலா எசன்ஸ் என அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
தயார் செய்து வைத்துள்ள சுகர் சிரப் என அனைத்தையும் சேர்த்து ஒரே புறமாக மட்டுமே கலக்க வேண்டும். நல்ல மிதமாக, மென்மையாக நன்றாக கலக்க வேண்டும்.
ஒரு கேக் டின்னில், வெண்ணெய் சேர்த்துவிட்டு, அதில் மைதா மாவு சிறிதளவு டஸ்ட் செய்துகொள்ள வேண்டும்.
அதில் கலந்து வைத்துள்ள மாவை நன்றாக சேர்த்து தட்டிக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் பயன்படுத்தாத தோசை தவாவை வைத்து அதிக தீயில் சூடாக்க வேண்டும். அது சூடானவுடன், அதன்மேல் இட்லி பாத்திரத்தை, வைத்து, அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து கேக் டின்னை வைத்து மூடிவிடவேண்டும்.
இதை ஒரு மணி நேரம் முதல் ஒன்னேகால் மணி நேரம் வரை வேக வைக்க வேண்டும்.
முக்கால் மணி நேரத்தில், முக்கால் பதம் வெந்த பின்னர் ஒருமுறை திறந்து பார்க்க வேண்டும். அப்போது கொஞ்சம் உலர் பழங்களை கேக்கின் மேலே வைக்க வேண்டும். முக்கால் பதத்தில் இருக்கும்போதுதான் வைக்க வேண்டும். முன்னதாகவே வைத்தால், பழங்கள் கேக்குக்கு உள்ளே சென்றுவிடும்.
பின்னர் மூடிவைத்து நன்றாக வேகவிடவேண்டும். பின்னர் ஒரு டூத் பிக் வைத்து குத்தி பார்த்து, வெந்துவிட்டதா என்பதை சரிபார்த்து வெளியே எடுத்துவிடவேண்டும்.
பின்னர் ஆறியவுடன் எடுத்தால், சுவையான பிலம் கேக், அவன் இல்லாமல் தயாராகிவிட்டது. இதை வைத்து இந்த கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள்.
டாபிக்ஸ்