Prasava legiyum: பிரசவ லேகியம்! தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பது முதல் மலச்சிக்கல் வரை..!
Oct 20, 2023, 12:17 PM IST
பாட்டி வைத்திய முறையில பிரசவமான பெண்களுக்கு கொடுக்கக்கூடிய லேகியத்தை எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.
பாட்டி வைத்திய முறையில் பிரசவ லேகியம்! தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பது முதல் ஏராளமான நன்மை தரும். பாட்டி வைத்திய முறையில பிரசவமான பெண்களுக்கு கொடுக்கக்கூடிய லேகியத்தை எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.
ஓமம் - 50 கிராம்
கடுகு - 25 கிராம்
அதிமதுரம் - 25 கிராம்
வாய்விளங்கம் - 25 கிராம்
திப்பிலி - 10 கிராம்
வால் மிளகு -10 கிராம்
சுக்கு - 25 கிராம்
சித்தரத்தை - 25 கிராம்
மா விளங்கபட்டை - 5
மஞ்சள் - 25 கிராம்
கருஞ்சீரகம் - 25 கிராம்
சாளியல் - 50 கிராம்
ஜாதிக்காய் - 1
மாசிக்காய் - 1
கடுக்காய் - 1
சதக்குப்பை - 25 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
லவங்க பட்டை - 5
சீரகம் - 10 கிராம்
சிறுநாகப்பூ - 25 கிராம்
அக்கரா - 10 கிராம்
நறுக்கு மூலம் - 25
சாரண வேர் - 25 கிராம்
மல்லி - 10 கிராம்
மிளகு - 25 கிராம்
பெருங்காயம் -15 கிராம்.
கருப்பட்டி
நல்லெண்ணெய்
நெய்
தேன்
செய்முறை
ஓமம், கடுகு, அதிமதுரம்,வாய்விளங்கம், திப்பிலி, வால் மிளகு, சுக்கு, சித்தரத்தை, மாவிளங்கபட்டை, மஞ்சள், கருஞ்சீரகம், சாளியல்,
ஜாதிக்காய் , மாசிக்காய், கடுக்காய், சதக்குப்பை , ஏலக்காய், லவங்க பட்டை, சீரகம், சிறுநாகப்பூ, அக்கரா, நறுக்கு மூலம், சாரண வேர், மல்லி, மிளகு, பெருங்காயம் ஆகிய பொருட்களை மேலே குறிப்பிட்ட அளவில் வாங்கி கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில்தான் கிடைக்கும். இந்த பொருட்களை நன்றாக காய்ந்த பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். அவற்றை 4 நாட்கள் வரை சூரிய வெளிச்சத்தில் வைத்து காய வைக்க வேண்டும். இந்த மருந்து பொருட்கள் நன்றாக காய்ந்த பிறகு ஒரு இரும்பு கடாயில் சேர்த்து கையில் சூடு பொறுக்கும் அளவிற்கு வறுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஆறி பொருட்களை உரலில் போட்டு இடிக்க வேண்டும். இடித்து எடுத்த பொருட்களை நன்றாக சளித்து கொள்ள வேண்டும். உரலில் இடித்து பழக்கம் இல்லாதவர்கள் இதில் கடிமான பொருட்களை இடி கல்லில் சேர்த்து குத்தி எடுத்து பின்னர் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளலாம். அரைத்த பொருட்களை ஒரு சல்லடையில் சலித்து கொள்ள வேண்டும். சல்லடையில் தங்கிய பொருட்களை மீண்டும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்து சலித்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் பிரசவ லேகியத்திற்கு தேவையான பொடி ரெடி
இந்த பொடியை ஒரு உலர்ந்த பாட்டிலில் போட்டு நன்றாக மூடி வைத்து கொள்ள வேண்டும். தேவை என்ற போது நாம் லேகியத்தை கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்து கொள்ளலாம்.
அதற்கு அரை கிலோ அளவிற்கு சுத்தமான கருப்பட்டியை எடுத்து கொள்ள வேண்டும். கருப்பட்டியை லேசாக தட்டி அதை கருப்பட்டி கரையும் அளவிற்கு பாகு காய்ச்சி கொள்ள வேண்டும். பின்னர் இரும்பு சட்டியில் பாகை வடி கட்டி ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
கருப்பட்டி பால் கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் 3 லிருந்து 4 ஸ்பூன் வரை அரைத்து வைத்த பொடியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக கிளறி விடும் போது லேகியம் கெட்டி பட ஆரம்பிக்கும். அப்போது அதில் 50மில்லி நெய்யை விட்டு கிளற வேண்டும். மேலும் 50 மில்லி நல்லெண்ணையையும் சேர்த்து கிளற வேண்டும். லேகியம் எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விட வேண்டும். லேகியம் ஆறி வரும் போது அதில் 100மில்லி அளவு தேன் சேர்த்து கிளற வேண்டும். லேகியம் அதிகமாக கெட்டியாகுவது போல் தெரிந்தால் அல்லது காரம் அதிகமாக இருப்பது போல் தெரிந்தால் அதில் தேவையான அளவு தேனை மீண்டும் சேர்த்து கிளறி கொள்ளலாம்.
இந்த லேகியத்தை குழந்தை பெற்ற பெண்கள் காலை மாலை இரண்டு வேலையும் சிறிய ஆரஞ்சு பல அளவு எடுத்துக் கொள்ளலாம். இது பிரசவமான பெண்களின் உடலில் எலும்புகள் உறுதிப்பட உதவும். மேலும் சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானம் ஆக உதவும். அதேபோல் நன்றாக பால் சுரப்பையும் ஏற்படுத்தும். குழந்தை பெற்ற பெண்கள் மட்டும் அல்ல யார் வேண்டுமானாலும் இந்த லேகியத்தை எடுத்து கொள்ளலாம். உடலுக்கும் மிகவும் நல்லது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்