Cauliflower Kofta : காளிஃப்ளவர் கோஃப்தா – மட்டன் டேஸ்டில் விருந்துகளில் தூள் கிளப்பும்!
Aug 30, 2023, 10:01 AM IST
Cauliflower Kofta : மட்டன் சுவையில், சப்பாத்தி, ரொட்டி, பூரிக்கு சிறப்பான காம்பினேஷன். விருந்துகளை கலக்கும் ஸ்பெஷல் ரெசிபி. எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
காளிஃப்ளவர் – அரை பூ
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
கொத்தமல்லித்தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கரம் மசாலா – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை மாவு – ஒரு கப்
ரவை – 3 டேபிள் ஸ்பூன்
முழு கரம் மசாலா – பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை
தேங்காய் பால் – 2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
முந்திரி – 8
இஞ்சி – பூண்டு விழுது – அரை டேபிள் ஸ்பூன்
சோம்பு – அரை ஸ்பூன்
செய்முறை
காளிப்ளவர், சிறிது மல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக ஒரு மிக்ஸியில் அடித்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன், சிறிதளவு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா, கடலை மாவு, ரவை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து சிறுசிறு உருண்டைகள் அல்லது உங்களுக்கு பிடித்த அளவில் உருட்டிக்கொள்ள வேண்டும்.
அவற்றை எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை தனியாக ஆறவிட வேண்டும்.
ஒரு மிக்ஸியில் வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லித்தூள் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, இஞ்சி-பூண்டு விழுது, ஏலக்காய் சேர்த்து பொரிந்தவுடன், அரைத்த விழுதை சேர்த்து மூடிவைத்து கொதிக்க விடவேண்டும்.
தேங்காயும், முந்திரியும் சேர்த்து பிழிந்த பாலை இறுதியாக சேர்க்க வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வந்தவுடன், இறக்கி, அதில் பொறித்து வைத்த உருண்டைகளை சேர்த்து கொத்தமல்லித்தழை சேர்த்து மூடி வைத்து விடவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால், மணமும், சுவையும் நிறைந்த காளிஃபிளவர் கோஃப்தா மட்டடன் சுவையிலே உங்களை மயக்கும்.
சப்பாத்தி, ரொட்டி, பூரி என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம். வித்யாசமான சுவையாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
டாபிக்ஸ்