Capsicum Rice : குழந்தைகளுக்குப் பிடித்த குடை மிளகாய் சாதம் – இப்படி செஞ்சு பாருங்க
Sep 07, 2023, 11:00 AM IST
Capsicum Rice : குழந்தைகளுக்குப்பிடித்த குடை மிளகாய் சாதம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
குடை மிளகாய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்
வடித்த சாதம் - 2 கப்
சிறிய குடைமிளகாய் – 3
பெரிய வெங்காயம் – 1
கடுகு - 1/2 டீஸ்பூன்
வேர்க்கடலை - 3 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
மல்லி - 1 டீஸ்பூன்
ஆயில் - 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
செய்முறை
குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கித் தனித் தனியாக வைக்கவும்.
கடாயை சூடாக்கி அதில் மிளகு, வேர்க்கடலை, கடுகு, மல்லி, சீரகம் மற்றும் வர மிளகாய் அனைத்தையும் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் சேர்க்காமல் ட்ரை ரோஸ்ட் செய்துகொள்ள வேண்டும்.
நன்றாக ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் ஏற்கனவே வைத்துள்ள கரம் மசாலாவுடன் இந்தப்பொடியை கலந்து வைத்துக்கெர்ளள வேண்டும்.
பின் மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், முதலில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவேண்டும்.‘
பின்னர் குடை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் வறுத்து அரைத்த பொடிக் கலவையைப் போட்டு, 5 நிமிடம் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக வடித்து வைத்த சாதத்தை இதோடு நன்கு கலந்து இறக்கிவிட வேண்டும். சாதத்தில் இந்த மசலாக்கள் அனைத்தும் நன்றாக கலக்க வேண்டும். இறக்கிய பின்னர் 10 நிமிடங்கள் வரை மூடி வைக்க வேண்டும்.
திறக்கும்போது மல்லித் தழைகள் தூவி திறந்தால் மணமணக்கும் குடைமிளகாய் சாதம் சாப்பிட தயாராகிவிடும்.
வித்யாசமான, ருசியான குடைமிளகாய் சாதத்தை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த சாதத்தில் காரட், பட்டாணி, பீன்ஸ் போன்ற காய்களை வேக வைத்தும் இதோடு சேர்த்துக்கொள்ளலாம். (காய்கறிகளை வேகவைக்க இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமர் பயன்படுத்தும்போது, காய்கறிகளில் உள்ள சத்துக்கள் காக்கப்படும். தண்ணீரில் சேர்த்து வேக வைக்கும்போது, தண்ணீரை வடித்துவிட்டுத்தான் இதுபோன்ற சாதங்களில் சேர்க்க முடியும் என்பதால், அதில் சத்துக்கள் தண்ணீரில் சென்றுவிடும். எந்த ஒரு உணவுக்குமே காய்கறிகளை நீங்கள் தனியாக வேக வைக்க வேண்டுமெனில் தண்ணீரில் சேர்த்து வேக வைப்பதை தேர்ந்தெடுக்காதீர்கள்)
தயிர் பச்சடி, வடைகள், பருப்புத் துவையல் போன்றவை இதற்கு நல்ல காம்போவாக இருக்கும்.
வடகம், சிப்ஸ், வெஜ் குருமா, தக்காளி ஜாம், போன்றவையும் இதற்கு நல்ல சைட்டிஷ்களாகும்.
3 கலரில் உள்ள குடை மிளகாய்களையும் தலா ஒன்று என சமையலில் பயன்படுத்தினால் சாதம் கலர்ஃபுல்லாக இருக்கும்.
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.
டாபிக்ஸ்