தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cabbage Pulao: ருசியான முட்டைக்கோஸ் புலாவ்.. இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க! சத்தானதும் கூட

Cabbage Pulao: ருசியான முட்டைக்கோஸ் புலாவ்.. இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க! சத்தானதும் கூட

Feb 07, 2024, 03:36 PM IST

google News
உங்கள் குழந்தைகளுக்கு முட்டைகோஸ் பொரியல் சாப்பிட பிடிக்கவில்லை என்றால் கூட பராவில்லை இப்படி ஒருமுறை முட்டைகோஸ் புலாவ் செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள் அதனுடன் பாசுமதி அரிசியும் சேர்த்தால், அதன் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். இப்போது அதை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு தினமும் என்ன செய்வது என யோசித்து கொண்டே இருப்பவரா நீங்கள். இது மிகவும் சுவையானது. உங்கள் குழந்தைகளுக்கு முட்டைகோஸ் பொரியல் சாப்பிட பிடிக்கவில்லை என்றால் கூட பராவில்லை இப்படி ஒருமுறை முட்டைகோஸ் புலாவ் செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள் அதனுடன் பாசுமதி அரிசியும் சேர்த்தால், அதன் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். இப்போது அதை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

முட்டைக்கோஸ் புலாவ் செய்முறைக்கு தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - ஒரு கப்

முட்டைகோஸ் - ஒரு கப்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

மிளகாய் - இரண்டு

எண்ணெய் - இரண்டு ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

கிராம்பு - மூன்று

ஏலக்காய் - இரண்டு

இலவங்கப்பட்டை - சிறிய துண்டு

பிரியாணி இலை - இரண்டு

தண்ணீர் - போதுமானது

கொத்தமல்லி - ஒரு கொத்து

உப்பு - தேவைக்கு ஏற்ப

முட்டைக்கோஸ் புலாவ் செய்முறை

1. பாஸ்மதி அரிசியைக் கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

2. முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும்.

3. இப்போது பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும்.

4. சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலைகளை சேர்த்து வதக்கவும்.

5.வாசணை பொருட்கள் நன்றாக மணம் வர ஆரம்பிக்கும்.

6. அந்த நேரத்தில், பொடியாக நறுக்கிய வெங்காயம், செங்குத்தாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

7. வெங்காயத்தை நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

8. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

9. பின்னர் தக்காளியை பொடியாக நறுக்ககி சேர்த்து அவை மென்மையாகும் வரை குறைந்த தீயில் சமைக்க வேண்டும்.

10. பிறகு முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு சேர்ப்பது முட்டைக்கோஸை விரைவாக மென்மையாக்கும்.

11. முட்டைக்கோஸ் நன்றாக நறுக்குவது அது விரைவில் வேக உதவியாக இருக்கும்.

12. மூடி வைத்து முட்டைக்கோஸ் மென்மையாகும் வரை வைக்கவும்.

13. பின் ஊறவைத்த அரிசியைச் சேர்த்து, அரிசியை வேகவைக்க தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

14. இப்போது உப்பை சரிபார்த்து தேவை என்றால் சேர்க்க வேண்டும். அதன் மேல் கொத்தமல்லி இலையை தூவி விட வேண்டும்.

15. குக்கரை மூடி, விசில் வரும் வரை சமைக்கவும்.

16. 10 நிமிடம் கழித்து குக்கரின் மூடியை கழற்றினால் சுவையான முட்டைகோஸ் புலாவ் தயார். மேலே சிறிது நெய்யைத் தூவி ஒரு முறை கலந்து சாப்பிட்டால் சுவை அமோகமாக இருக்கும். லஞ்ச் பாக்ஸுக்கு சிறந்த ஆப்ஷன் என்று சொல்லலாம்.

முட்டைகோஸை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை வழங்கும். இதில் வைட்டமின் ஏ, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமான செயல்முறை சீராக நடக்கிறது. மேலும், முட்டைக்கோஸ் சாப்பிடுவது இதயத்தைப் பாதுகாக்கிறது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனால் முட்டைக்கோஸ் புலாவ் போன்றவற்றை அவ்வப்போது சமைத்து சாப்பிடுவது இந்த ஊட்டச்சத்துக்களை முழு உடலுக்கு கிடைக்க வழி வகுக்கிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி