Butter vs Cheese: வெண்ணெய் vs பாலாடைக்கட்டி ஆகியவற்றில் எது பெஸ்ட்? இதோ நிபுணர்களின் பகிர்வு
Jan 05, 2024, 01:57 PM IST
வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி (சீஸ்) என இரண்டும் பாலில் இருந்துதான் தயார் செய்யப்படுகின்றன. இவை இரண்டிலும் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் மிதமான அளவில் நிரம்பியிருப்பதால் ஊட்டச்சத்து நிபுணர்கள் இரண்டையும் எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள்.
உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்ற பால் சார்ந்த பொருள்களை தவிர்க்கிறார்கள். இவற்றை சாப்பிட்டால் எடை அதிகரிக்கலாம் என்றும் சிலர் அச்சம் அடைகிறார்கள். ஆனால் உண்மையில் பால் சார்ந்த பொருள்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் எடை குறைவது, ரத்த அழுத்தம் குறைவது, பக்காவாதம் பாதிப்பு தடுக்கப்படுவது, எலும்புப்புரை பாதிப்பு குறைவது போன்றவையே நிகழ்வதா ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஆரோக்கிய நன்மைகளை கருத்தில் கொண்டு உங்களது உணவில், வெண்ணெய் அல்லது பாலாடைக்கட்டி ஆகியவற்றை சேர்க்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பலரும் அறிவுறுத்துகிறார்கள். பாலாடைக்கட்டியில் அதிக அளவில் புரதம் நிறைந்துள்ளது. அதேபோல் வெண்ணெய்யில் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ளதால் அவை எலும்புகளை வலுப்படுத்துவதோடு, பார்வை திறனையும் மேம்படுத்துகிறது.
நாள்தோறும் பாலாடைக்கட்டி சாப்பிடக்கூடியவருக்கு ஆறு வார முடிவில் உடலிலுள்ள எல்டிஎல் (குறைந்த அடர்த்தி லிப்போ புரதம்) அல்லது மோசமான கொலஸ்ட்ரால் குறைவதாகவும், வெண்ணெய் சாப்பிடுபவருக்கு அதில் எந்தவொரு பெரிய மாற்றமும் நிகழவில்லை எனவும் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் பன்னீரை விட பாலாடைக்கட்டியில் அதிக அளவிலான புரதமும், கணிசமான அளவு கால்சீயமும் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வெண்ணெய்யில் முழுவதுமாக கொழுப்புச் சத்து நிறைந்துள்ளது.
பெரும்பாலான பாலாடைக்கட்டிகளில், கொழுப்புச்சத்தை ஒப்பிடுகையில் குறைந்தது ⅔ கிராம் அளவில் புரதம் நிறைந்திருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேசமயம் பாலாடைக்கட்டியில் அதிகளவு சோடியம் உள்ளடக்கம் இல்லாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும். அத்துடன் பதப்படுத்தப்படாமல், குறைவான சேர்மானங்களுடன் இருப்பதையும் தேர்வு செய்து சாப்பிடுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
டாபிக்ஸ்