தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tamil Nadu Picnic Places: குடும்பத்துடன் பிக்னிக் செல்ல தமிழ்நாட்டில் இருக்கும் சிறந்த இடங்கள்!

Tamil Nadu Picnic Places: குடும்பத்துடன் பிக்னிக் செல்ல தமிழ்நாட்டில் இருக்கும் சிறந்த இடங்கள்!

I Jayachandran HT Tamil

Jun 05, 2023, 05:33 PM IST

google News
பிக்னிக் செல்ல தமிழ்நாட்டில் இருக்கும் சிறந்த இடங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
பிக்னிக் செல்ல தமிழ்நாட்டில் இருக்கும் சிறந்த இடங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

பிக்னிக் செல்ல தமிழ்நாட்டில் இருக்கும் சிறந்த இடங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

மிகப் பெரிய சுற்றுலா தலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழகத்தை சுற்றி பார்க்க வருகை தருகின்றனர். அந்த வகையில் குடும்பத்துடன் பிக்னிக் செல்ல தமிழ்நாட்டில் இருக்கும் இடங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.இயற்கையான இடங்கள் முதல் சாகச இடங்கள் வரை தமிழ்நாட்டில் எல்லாவகையான சுற்றுலா ஸ்பாட்டுகளும் மிகவும் பிரபலமானவை.

ஊட்டி-

ஊட்டியின் உதகமண்டலம் தமிழ்நாட்டின் மிகவும் வசீகரமான மலை வாசஸ்தலமாகும். இங்குள்ள மலைத்தொடர்கள், பசுமையான தோட்டங்கள் மற்றும் இதமான வானிலை ஆகியவை ஊட்டியை தென்னிந்தியாவின் மிகவும் விரும்பப்படும் இடமாக மாற்றுகிறது.

கொடைக்கானல்-

கொடைக்கானல் அதன் அசத்தலான அழகுக்காக 'மலைவாசஸ்தலங்களின் இளவரசி' என அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் தேனிலவு செல்ல ஏற்ற இடமாகவும் கொடைக்கானல் உள்ளது.

சென்னை-

மாநிலத்தின் தலைநகரம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சிறந்த பிக்னிக் ஸ்பாட்களில் ஒன்றாகும். சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகும். இங்கு கோயில் தொடங்கி கடற்கரை, தீம் பார்க்க என சுற்றி பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளன.

ஏற்காடு-

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். நகரத்தின் சலசலப்பில் இருந்து விலகி இருக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த இடம். 'ஏழைகளின் ஊட்டி' என்று பிரபலமாக அறியப்படும் ஏற்காட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பல உள்ளன.

கன்னியாகுமரி-

இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலின் சங்கமமாக விளங்கும் கன்னியாகுமரி, விடியற்காலை மற்றும் சாயங்காலத்தின் போது கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்கிறது.

மதுரை-

மதுரை தமிழ்நாட்டின் சிறந்த பிக்னிக் ஸ்பாட்களில் ஒன்றாக விளங்குகிறது. மதுரையில் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலைத் தவிர, பல கோயில்களும் மற்ற இடங்களும் உள்ளன.

ஏலகிரி-

ஏலகிரி இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலமாகும். இந்த மலைகளுக்குச் சென்று, இங்கு சாகசப் பயணம் மேற்கொள்ளும்போது அழகை ரசிக்கவும். ஏலகிரியின் சில முக்கிய சுற்றுலாத்தலங்கள் இங்கே உள்ளன.

ராமேஸ்வரம்-

ராமேஸ்வரம் தமிழ்நாட்டின் சிறந்த பிக்னிக் ஸ்பாட்களில் ஒன்றாகும், ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில், பாம்பன் பாலம் மற்றும் தனுஷ்கோடி ஆகியவை இந்த இடத்தின் முக்கிய இடங்களாகும்.

முதுமலை-

மலைவாசஸ்தலங்களுக்கு மட்டும் பெயர் பெற்றதல்ல. வனவிலங்குகளுக்கு பெயர் பெற்ற இடம் உள்ளது. தென்னிந்தியாவின் வனவிலங்கு சரணாலயங்களில் முதுமலையும் ஒன்று.

வேளாங்கண்ணி -

வேளாங்கண்ணி புனித தலமாக கருதப்படுகிறது. வேளாங்கண்ணி தேவாலயம், கடற்கரை ஆகியவை வேளாங்கண்ணியில் உள்ள சுற்றுலா தலங்களாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி