தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Baking Soda Benefits : பேக்கிங் சோடாவை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்.. முகப்பொலிவு முதல் செரிமானம் வரை!

Baking Soda benefits : பேக்கிங் சோடாவை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்.. முகப்பொலிவு முதல் செரிமானம் வரை!

Jul 09, 2024, 01:49 PM IST

google News
Baking Soda benefits : பேக்கிங் சோடாவை அளவோடு பயன்படுத்தினால் பலன் கிடைக்கும். பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன. பருக்களைப் போக்க பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துங்கள். பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து பருக்கள் மீது தடவலாம்.
Baking Soda benefits : பேக்கிங் சோடாவை அளவோடு பயன்படுத்தினால் பலன் கிடைக்கும். பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன. பருக்களைப் போக்க பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துங்கள். பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து பருக்கள் மீது தடவலாம்.

Baking Soda benefits : பேக்கிங் சோடாவை அளவோடு பயன்படுத்தினால் பலன் கிடைக்கும். பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன. பருக்களைப் போக்க பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துங்கள். பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து பருக்கள் மீது தடவலாம்.

Baking Soda benefits : இன்றைய சமையல் குறிப்புகளில் பேக்கிங் சோடாவின் பயன்பாடு வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. பேக்கிங் சோடா ஆரோக்கியத்திற்கு நல்லதா? அல்லது பேக்கிங் கோடா பயன்படுத்துவதால் உடல் நலச்சிக்கல்கள் ஏற்படுமா என்ற சந்தேகம் பலருக்கு வரும். பேக்கிங் சோடா குறிப்பாக பக்கோடா,, பஜ்ஜி உள்ளிட்ட உணவுகளில் சேர்க்கப்படுகிறது. மேலும் சிலர் இட்லி மாவில் சேர்க்கிறார்கள். இதனால் இட்லி மிருதுவாகும். ஆனால் பேக்கிங் சோடாவை அடிக்கடி பயன்படுத்துவது ஆரோக்கியமானதா? என்று பலருக்கும் அச்சசம் உள்ளது.

பேக்கிங் சோடாவை யார் தவிர்க்க வேண்டும்

பேக்கிங் சோடா சோடியம் கார்பனேட் என்று அழைக்கப்படுகிறது. இதில் சோடியம் உள்ளது. இதை அதிகமாக உட்கொள்வதால் வாய்வு பிரச்சனை அதிகரிக்கும். கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் பேக்கிங் சோடாவை தவிர்க்க வேண்டும். பேக்கிங் சோடாவை அதிகமாகப் பயன்படுத்தினால் நெஞ்செரிச்சல் ஏற்படும். குறிப்பாக அஜீரணம்.

பேக்கிங் சோடாவை அடிக்கடி உட்கொள்வது பல் எனாமலை சேதப்படுத்தும். பேக்கிங் சோடாவில் சோடியம் அதிகம் உள்ளது. இதை அதிகமாக உட்கொள்வதால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். பேக்கிங் சோடாவை அதிகமாக சாப்பிடுவது சிறுநீரக செயலிழப்பை அதிகரிக்கும். இது நிறைய வாயுவை உற்பத்தி செய்கிறது. பலர் பேக்கிங் சோடாவால் பல் துலக்குகிறார்கள். ஆனால் இது நல்ல நடைமுறை அல்ல.

பேக்கிங் சோடா பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்

பேக்கிங் சோடாவை அதிகமாக பயன்படுத்தினால் மட்டுமே மோசமான விளைவுகள் காணப்படுகின்றன. ஆனால் பேக்கிங் சோடாவை அளவோடு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன. பருக்களைப் போக்க பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துங்கள். ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து பருக்கள் மீது தடவலாம். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவினால் பருக்கள் நீங்கும்.

பேக்கிங் சோடாவை மென்மையான முடிக்கு பயன்படுத்தலாம். எண்ணெய் பசையால் அவதிப்படுபவர்கள், பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பயன்படுத்தினால், தலைமுடியை சுத்தம் செய்து பளபளப்பாக வைத்திருக்கலாம். நீங்கள் எவ்வளவு குறைவாக சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு சிறந்தது.

பேக்கிங் சோடாவை சருமத்தின் பொலிவை அதிகரிக்க பயன்படுத்தலாம். ரோஸ் வாட்டரில் பேக்கிங் சோடாவை சேர்த்து பேஸ்ட் செய்யவும். கலவையை முகத்தில் தடவவும். ஐந்து நிமிடம் வைத்திருந்து பின் தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்கள் நீங்கும்.

நகங்களை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். நகங்களில் உள்ள கறைகள் மற்றும் அழுக்குகளை அகற்ற இது பயனுள்ளதாக இருக்கும். பேக்கிங் சோடாவுடன் நகங்களை தண்ணீரில் ஊறவைத்து சிறிது நேரம் வைக்கவும். இப்படி வைத்துக் கொண்டால் நகங்கள் சுத்தமாகும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி