தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Raw Papaya : நாம் திரும்பிக்கூட பார்க்காத காய்! அதில் எத்தனை நன்மைகள் உள்ளதென பாருங்கள்!

Benefits of Raw Papaya : நாம் திரும்பிக்கூட பார்க்காத காய்! அதில் எத்தனை நன்மைகள் உள்ளதென பாருங்கள்!

Priyadarshini R HT Tamil

May 08, 2024, 07:30 AM IST

google News
Benefits of Raw Papaya : இதை எப்படி சாப்பிட்டாலும் சரிவிகித உணவுடன் மிதமான அளவு சாப்பிடவேண்டும். இதை சாப்பிடுவது சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகும். எனவே அவர்கள் கவனமுடன் இதை எடுத்துக்கொள்ளவேண்டும்.
Benefits of Raw Papaya : இதை எப்படி சாப்பிட்டாலும் சரிவிகித உணவுடன் மிதமான அளவு சாப்பிடவேண்டும். இதை சாப்பிடுவது சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகும். எனவே அவர்கள் கவனமுடன் இதை எடுத்துக்கொள்ளவேண்டும்.

Benefits of Raw Papaya : இதை எப்படி சாப்பிட்டாலும் சரிவிகித உணவுடன் மிதமான அளவு சாப்பிடவேண்டும். இதை சாப்பிடுவது சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகும். எனவே அவர்கள் கவனமுடன் இதை எடுத்துக்கொள்ளவேண்டும்.

பெரும்பாலும் நாம் பப்பாளிக்காயை பரவலாகப் பயன்படுத்துவதில்லை. ஆனால், அதில் பல்வேறு நன்மைகள் உள்ளன. அவற்றை நாம் சமையலுக்கு பயன்படுத்த முடியும்.

பப்பாளியின் நன்மைகள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

பப்பாளியில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. அவை, வைட்டமின் சி, ஏ, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகும்.

உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

பப்பாளிக்காயில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. தொற்றுக்களின் ஆபத்துக்களை குறைக்கிறது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

செரிமான ஆரோக்கியம்

பப்பாளிக்காயில், பப்பைன் என்ற எண்சைம் உள்ளது. இது செரிமானத்துக்கு உதவுகிறது, செரிமானம், மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளையும் குறைக்க உதவுகிறது.

வீக்கத்துக்கு எதிரான குணங்கள்

பப்பாளிக்காயில் உள்ள பல்வேறு ஃபைட்டோ கெமிக்கல்கள் வீக்கத்துக்கு எதிரான நற்குணங்களைக் கொண்டது. உடலில் வீக்கம் எங்கு ஏற்பட்டாலும் குறைக்கிறது. நாள்பட்ட நோய்களை தடுக்கிறது.

எடை மேலாண்மை

பப்பாளிக்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது, நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள எண்சைம்கள், செரிமானம் மற்றும் வளர்சிதையை அதிகரிக்கிறது. பப்பாளிக்காயை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடல் எடையை பராமரிப்பதில் உதவுகிறது.

சரும ஆரோக்கியம்

பப்பாளி காயில் வைட்டமின் சி மற்றும் ஏ ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வயோதிகத்தை குறைக்கிறது. ஃப்ரீராடிக்கல்களால் ஏற்படும் சரும சேதத்தை தடுக்கிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

பப்பாளிக்காயில் பொட்டாசியச் சத்து உள்ளது. ரத்த அழுத்தத்தை குறைக்கவும், முறைப்படுத்தவும் உதவுகிறது. இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் நார்ச்சத்துக்கள், உடலில் ஆரோக்கிய கொழுப்பு அளவுகளை அதிகரிக்கிறது.

புற்றுநோயை தடுக்கிறது

பப்பாளிக்காயில் ஐஸ்சோதியோசையனேட்கள் மற்றும் ஃப்ளேவனாய்ட்கள் புற்றுநோய்க்கு எதிரான உட்பொருட்கள் கொண்டது. இது குடல், புராஸ்டேட் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.

மாதவிடாய் வலி நிவாரணம்

பப்பாளிக்காயை சாப்பிடுவது அல்லது பப்பாளி இலையில் தேநீர் தயாரித்து பருகும்போது, மாதவிடாய் வலிகளை குறைக்க உதவுகிறது.

கண் ஆரோக்கியம்

பப்பாளிக்காயில் உள்ள அதிக வைட்டமின் ஏ, நல்ல கண் பார்வை மற்றும் வயோதிகம் தொடர்பான பார்வை குறைவை தடுக்க உதவுகிறது.

பப்பாளிக்காயை எப்படி சாப்பிட வேண்டும்?

பப்பாளிக்காயின் தோலை பீலர் வைத்து நீக்கவேண்டும்.

பப்பாளிக்காயை இரண்டாக வெட்டி இடையில் உள்ள விதைகளை நீக்கிவிடவேண்டும்.

இதை துருவி அல்லது நறுக்கி உங்கள் ரெசிபிக்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதில் சட்னி, ஊறுகாய், டூட்டி ஃப்ரூட்டி, சாலட், கிரேவி என எதுவேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.

இது வெள்ளரியை சுவைப்போன்று ருசியாக இருக்கும்.

இதை எப்படி சாப்பிட்டாலும் சரிவிகித உணவுடன் மிதமான அளவு சாப்பிடவேண்டும். இதை சாப்பிடுவது சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகும். எனவே அவர்கள் கவனமுடன் இதை எடுத்துக்கொள்ளவேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி