HBD SP Jananathan : சமூகத்தின் அவலம் மற்றும் ஏற்றதாழ்வுகளை காட்சிப்படுத்திய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பிறந்த நாள்!
HBD SP Jananathan : ஆனால் மக்களிடம் நல்ல வரவேற்பையும், பத்திரிகைகளில் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. அடுத்து வந்த பேராண்மை படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்து.
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பிறந்த தினம் இன்று. இந்நாளில் அவர் குறித்த சில நினைவுகளை பகிர்ந்துகொள்கிறது ஹெச்.டி தமிழ்.
இவரது படைப்புகள் சமூகத்தின் அவலங்கள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசியிருக்கும். அந்த வகையில் நடிகர் ஜீவா, பசுபதி மற்றும் நயன்தாரா நடித்த ஈ படம், இரண்டாம் உலக நாட்டு மக்களை வளர்ந்த நாடுகள் எப்படி சோதனை எலிகள் போல் பயன்படுத்துகின்றன என்பதை மருத்துவத்துறையின் அவலங்கள் மூலம் சுட்டிக்காட்டியிருப்பார். இந்தப்படம் தமிழ் சினிமாவின் ஒரு மிகச்சிறந்த திரைப்படமாக இன்றளவும் பேசப்படுகிறது.
தமிழ் சினிமாவில் அவ்வப்போது மட்டுமே தனித்தன்மையாக இயக்குனர்கள் தோன்றுவார்கள். அவர்களுக்கு முக்கியமானவரும், கொண்டாடப்படவேண்டியவருமானவர் எஸ்.பி. ஜனநாதன். இவர், இவரைப்போன்ற தனித்தன்மையான இயக்குனர் லெனின் பாரதி, வின்சென்ட் செல்வா மற்றும் கேயார் ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.
இவர் புறம்போக்கு திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். பூலோகம் என்ற படத்திற்கு வசனங்கள் எழுதியுள்ளார். இவர் இயக்குனர் மட்டுமல்ல, தர்மா மற்றும் கும்பகோணம் படங்களின், விஷ்வல் எபெஃக்ட்ஸ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இதனால், இவர் இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, விஷ்வல் எபெஃக்ட்ஸ் இயக்குனர் என திரைத்துறையில் பல்வேறு முகங்களைக் கொண்டவர்.
இவர் இயக்கிய படத்தில் மற்றொரு முக்கியமான படமாக பேராண்மை உள்ளது. அந்தப்படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் மலைவாழ் மக்கள் முன்னேற்றம், அந்நிய நாடுகள் வளரும் நாடுகள் மீது நடத்தும் மறைமுகப்போர்கள் குறித்து பேசியிருப்பார். இந்தப்படமும் மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம்பெற்ற படமாக உள்ளது.
இவரது முதல் படம் இயற்கை, இந்தப்படம் காதல் கதையை மையமாகக்கொண்ட திரைப்படமாகும். ஆனால் இந்தப்படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. ஆனால் இது ஒரு வித்யாசமான முக்கோண காதல் கதையம்சம் கொண்ட படமாகும்.
இந்தப்படம் கடலோரத்தை கதைகளமாகக்கொண்ட திரைப்படம். அதனால் கடலின் அழகு, கடலோடிகளின் வாழ்வு என நீளும். இந்தப்படத்துக்கு 2004ம் ஆண்டு சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து இவர் இயக்கிய ஈ படமும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.
ஆனால் மக்களிடம் நல்ல வரவேற்பையும், பத்திரிகைகளில் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. அடுத்து வந்த பேராண்மை படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்து.
இவர் தொடர்ந்து ஆர்யா, ஷாம் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர்களை வைத்து புறம்போக்கு என்கிற பொதுவுடைமைவாதி என்ற திரைப்படத்தை முதல் முறையாக தயாரித்து இயக்கினார். இவரது கடைசிப்படம் லாபம். இதை விஜய்சேதுபதியை வைத்து இயக்கியிருந்தார்.
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று கருதப்பட்ட எஸ். பி. ஜனநாதன், தனது 61வது வயதில், 2021ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி மாரடைப்பை தொடர்ந்த கோமா நிலைக்குப்பின்னர் இறந்தார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.ஜனநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது, தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
எஸ்.பி.ஜனநாதன் பிறந்த நாளில் ஹெச்.டி தமிழ் அவர் குறித்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறது. மேலும் எஸ்.பி.ஜனநாதன் போன்ற தனித்தன்மையான இயக்குனர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும் தமிழ் திரையுலகையும் போற்றுகிறது.