Vitamins for Men : 30 வயதை கடந்துவிட்டீர்களா? உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் இவைதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vitamins For Men : 30 வயதை கடந்துவிட்டீர்களா? உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் இவைதான்!

Vitamins for Men : 30 வயதை கடந்துவிட்டீர்களா? உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Apr 21, 2024 05:00 PM IST

Vitamin Needs for Men : 30 வயதை கடந்த ஆண்களுக்கு தேவையான வைட்டமின்கள் என்ன?

Vitamins for Men : 30 வயதை கடந்துவிட்டீர்களா? உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் இவைதான்!
Vitamins for Men : 30 வயதை கடந்துவிட்டீர்களா? உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் இவைதான்!

உங்கள் உடலுக்கு தேவையான முக்கிய வைட்டமின்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். 30 வயதை கடந்த ஆண்களுக்கு தேவையான வைட்டமின்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

வைட்டமின் டி

30 வயதைக் கடந்த ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையத் துவங்கிவிடும். இது உங்கள் உடலில் தசைகளில் உள்ள சத்துக்களை பாதிக்கிறது. வைட்டமின் டி டெஸ்டோஸ்டிரோனை அதிகரித்து, கால்சியம் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. 

இது கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து எலும்புகளை வலுப்படுத்துகிறது. இது இதய நோய்களுக்கு எதிரான கவசம் அமைத்து, இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. சில புற்றுநோய்களையும் குணப்படுத்துகிறது.

வைட்டமின் பி12

ஆரோக்கியமான ரத்த சிவப்பணுக்களை பராமரிக்கிறது. நரம்பு மண்டலத்துக்கு மிகவும் முக்கியம். வைட்டமின் பி12, விலங்கு உணவுகளில் அதிகம் காணப்படுகிறது. இது நரம்பு இயக்கத்துக்கும், ஆற்றல் அளவையும் அதிகரிக்கிறது. சைவ உணவு மட்டுமே உண்பவர்களுக்கு இந்த உணவு தேவை.

வைட்டமின் பி 6

ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. வைட்டமின் பி 6 உங்கள் உடலில் பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இது மீன், கோழி மற்றும் முழுதானியங்களிலும் அதிகம் உள்ளது. 

இது புரத வளர்சிதையையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது. பாதாம், சூரியகாந்தி விதைகள் போன்ற விதைகள் மற்றும் நட்ஸ்களில் வைட்டமின் பி6 உள்ளது.

மெக்னீசியம்

இதயம் மற்றும் தசை ஆரோக்கியத்துக்கு மெக்னீசியம் மிகவும் தேவையான ஒன்று. மெக்னீசியம், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துவதிலும், சர்க்கரை அளவை அதிகரிப்பதிலும் தவிர்க்க முடியாத ஒன்று. 

இது தரமான உறக்கத்தையும் கொடுக்கிறது. மனஅழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 30 வயதுக்கு பின்னர் எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தை குறைக்கிறது.

சிங்க்

டெஸ்ரோஸ்டின் அளவுகளையும், ஹார்மோன் சமநிலைக்கும் சிங்க் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. எனவே ஆண்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது டெஸ்டோஸ்ரோன் ஈஸ்ட்ரோஜெனாக மாறுவதை தடுத்து, ஆண்களின் விறைப்பு குறைபாடுகளை சரிசெய்கிறது. பரங்கிக்காய் விதைகள் மற்றும் சிப்பிகளில் அதிகளவில் சிங்க் சத்துக்கள் உள்ளன.

ஒமேகா 3

இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், ஒமேகா 3 ஆகியவை இதயத்திற்கு கவசமாக உள்ளது. இதயம், மூளை மற்றும் ரத்த நாளங்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. இது இதய நோய் ஆபத்துக்களை குறைக்கிறது. புராஸ்டேட் புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது. இது மீன் உணவுகள் மற்றும் மீன் மாத்திரைகளில் அதிகம் உள்ளது.

ஃபோலேட்

டிஎன்ஏவை சரிசெய்ய ஃபோலேட்கள் மிகவும் முக்கியம். ஃபோலேட்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கீரைகள், உடலில் செல் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலில் ஏற்படும் வழக்கத்துக்கு மாறான மாற்றங்களை தடுக்கிறது.

வைட்டமின் கே

எலும்பு ஆரோக்கியம் மற்றும் ரத்தம் உறைதலுக்கு வைட்டமின் கே மிகவும் அவசியம். இது எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஆறுவதற்கு மிகவும் அவசியம். இது நினைவாற்றல் திறனை அதிகரிக்கிறது. இது மறதிநோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

வயதான ஆண்களுக்கு இது பல்வேறு வகைகளில் உதவுகிறது. கீரைகள், பழங்கள் மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகள் முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியவையாக உள்ளன.

வைட்டமின் ஏ

கண் பார்வை, சருமம், நோய் எதிர்ப்பாற்றல் என அனைத்தும் வைட்டமின் ஏயில் உள்ளது. முக்கியமாக இது ஆண் இனப்பெருக்கத்துக்கு உதவுகிறது. இது விந்தணுக்களின் அளவை அதிகரிக்கிறது. ப்ராஸ்டேட்டின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் பால் பொருட்களில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது.

இரும்பு

இது ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜன் கடத்துவதற்கு உதவுகிறது. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு மிகவும் முக்கியம். உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. 30 வயதைக் கடந்த ஆண்களுக்கு ஏற்படும் சோர்வை இரும்புச்சத்து போக்குகிறது.

வைட்டமின்கள் ஏன் முக்கியம்?

உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு மிகவும் முக்கியமானது வைட்டமின்கள், இது உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்கிறது. உடல் நலனுக்கு உதவுகிறது. இது உடலுக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு, ஃப்ரி ராடிக்கல்களால் ஏற்படும் செல்களின் சேதத்தை தடுக்கிறது. ஆக்ஸிடேட்டிவ் அழுத்த்தை குறைக்கிறது. நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.