Causes of Excessive Fiber : நார்ச்சத்துக்கள் உடலுக்கு நல்லதுதான்? ஆனால் அளவுக்கு மிஞ்சும்போது என்னவாகும்?
- உங்கள் உடலுக்கு நார்ச்சத்துக்கள் தேவைதான். ஆனால் நீங்கள் அதை கவனமான எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமானால், அவை ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் என்னவென்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
- உங்கள் உடலுக்கு நார்ச்சத்துக்கள் தேவைதான். ஆனால் நீங்கள் அதை கவனமான எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமானால், அவை ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் என்னவென்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
(1 / 7)
அனீமியா, ரத்தத்தில் உள்ள ஆரோக்கியமான சிவப்பணுக்கள் குறைந்து, ரத்தசோகையை ஏற்படுத்தும். இதனால் உங்கள் உடலில் சோர்வு ஏற்படும். அதிக நார்ச்சத்துக்கள் இரும்பு உறிஞ்சுவதில் தடையை ஏற்படுத்தி அனீமியாவுக்கு வழிவகுக்கும்.
(2 / 7)

(3 / 7)
நீங்கள் திடீரென, அதிகப்படியான நார்ச்சத்துக்கள் எடுத்துக்கொண்டால், அது உடலில் வாயுவை அதிகரித்து, வயிறு உப்பிக்கொள்ள வழிவகுக்கும். இது குடலில் உள்ள பாக்டீரியாக்கள், செரிக்காமல் உள்ள நார்ச்சத்துக்களை புளிக்கச் செய்வதால் ஏற்படுகிறது.
(4 / 7)
அதிகளவில் நார்ச்சத்துக்கள் எடுக்குபோது, அது உடலுக்கு தேவையான மினரல்களை உடல் உறிஞ்சுவதை தடுக்கும், இதனால் உடலுக்கு தேவையான இரும்பு, கால்சியம், சிங்க் கிடைக்காமல் செய்துவிடும். எனவே உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.
(5 / 7)
செரிக்க முடியாத நார்ச்சத்துக்களை எடுத்துக்கொண்டு போதியஅளவு தண்ணீரை பருகவில்லையென்றால், அது உங்கள் உடலில் மலத்தை இறுகச்செய்து, ஆசனவாயில் மூலத்தை ஏற்படுத்திவிடும்.
(6 / 7)
அதிக நார்ச்சத்துக்கள், குறைவான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது, மலம் கழிப்பதை கடினமாக்குகிறது. இதனால் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இதனால் ஒருவர் வாரத்தில் மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிக்கும் நிலை ஏற்படும்.
மற்ற கேலரிக்கள்