Herbal Remedies: கண் பிரச்னைகளுக்கு அருமருந்தான நேத்திரப் பூண்டின் மருத்துவப் பயன்கள்
Jun 17, 2023, 03:19 PM IST
கண் பிரச்னைகளுக்கு அருமருந்தான நேத்திரப் பூண்டின் மருத்துவப் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மூலிகைகளில் அபூர்வமானது இந்த நேத்திரப் பூண்டு. எல்லா இடங்களிலும் இது வளராது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். நேத்திரப் பூண்டு இலையாகவும், தைலமாகவும் விற்கப்படுகிறது.
நேத்திரப் பூண்டு நான்கு நான்கு இலைகளாக இருக்கும். மழை வளம், தண்ணீர் வளத்தை பொருத்து இது நன்கு உயரமாக வளரும்.சென்னைக்கு அருகே திருக்கழுக்குன்றத்தில் தேற்றான் மரங்களுக்கு நடுவில் பெரிய பெரிய இலைகளைக் கொண்டு வளர்வதை பார்க்கலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதை ‘அற்றலை பொருத்தி’ என்று பேச்சு வழக்கில் கூறுகின்றனர்.
நேத்திர பூண்டு, சோம நேத்ர புஷ்ப குழி, நேத்ர மூலி, நேத்திரஞ்சிமிட்டி மற்றும் ஒட்டி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
இதன் தண்டை ஒடித்து விட்டு மீண்டும் பொருத்தினீர்கள் என்றால் பொருந்திக் கொள்ளும். அதனால் ஆற்றலைப் பொருத்தி என்ற பெயர் வந்துள்ளது. இதிலுள்ள பசைச் சத்தே இதற்கு காரணம். ஆனால் உண்மையான பெயர் ‘அருந்தலை பொருத்தி’. இதன் பெயரிலேயே இதன் பயன் உள்ளது. நேத்திரம்= கண். நேத்திரப் பூண்டு தைலம் கண் நோய்களுக்கு மட்டுமல்ல வயிற்றுப்புண், ஒற்றைத் தலைவலி, செரிமானக்கோளாறு, கிராணி போன்ற நோய்களுக்கு வழங்கலாம்.
நேத்திரப் பூண்டு தைலம் செய்முறை...
நல்லெண்ணெய்- 1 லிட்டர்
நேத்திரப்பூண்டு- அரை கிலோ
தும்பை- 100 கிராம்
கரிசாலை- 100 கிராம்
பொன்னாங்காணி- 100 கிராம்
கற்றாழை- 100 கிராம்
மேலே கூறிய மூலிகைகளிலிருந்து சாறெடுத்து நல்லெண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி மணல் பதம் வந்தவுடன் இறக்கி மேற்கூறிய நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.
தயாரித்த நேத்திர பூண்டு தைலத்தை தினமும் காலை, மாலை 2 சொட்டுக்கள் வீதம் விட்டுவர கண் பார்வை மங்கள், கண் எரிச்சல், கண்சிவப்பு, பீளை கட்டுதல், வெள்ளெழுத்து, கண்ணில் பூவிழுதல், கண்ணில் சதை வளருதல், கண் புரை, பார்வை குறைவால் ஏற்படும் ஒற்றை தலைவலி ஆகியவை குணமாகும்.
மொத்தத்தில் கண் தொடர்பான அனைத்து உபாதைகளுக்கு இந்த நேத்திரப் பூண்டு அருமருந்தாக விளங்குகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்