தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Herbal Medicine: நாள்பட்ட நோய்களை தீர்க்கும் குப்பைமேனி மூலிகை இலை

Herbal Medicine: நாள்பட்ட நோய்களை தீர்க்கும் குப்பைமேனி மூலிகை இலை

I Jayachandran HT Tamil

Jun 16, 2023, 08:15 PM IST

google News
நாள்பட்ட நோய்களை தீர்க்கும் குப்பைமேனி மூலிகை இலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நாள்பட்ட நோய்களை தீர்க்கும் குப்பைமேனி மூலிகை இலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நாள்பட்ட நோய்களை தீர்க்கும் குப்பைமேனி மூலிகை இலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நாள்பட்ட பல்வேறு நோய்களை தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்ட மூலிகைகளில் குப்பைமேனி இலை சிறந்ததாகும்.

எல்லா வகையான புண்களுக்கும் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும். பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் குப்பைமேனி இலைச் சாறு குடல் புழுக்களிலிருந்து விடுபட பயன்படுத்தப்படுகிறது.

வயிற்றில் இருக்கும் குடற்பூச்சிகளை நீக்கும் தன்மை உடையது. தோல் நோய் நீக்கும். உடல் வலிக்கு குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்து வந்தால் உடல் வலி நீங்கும்.

நெஞ்சுக்கோழையை நீக்கும். மார்புச்சளி, கீல்வாதத்தை போக்கும். இருமலை கட்டுப்படுத்தும். குப்பைமேனி இலையை அரைத்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து காயமடைந்த இடங்களில் தடவினால் காயம் விரைவில் குணமாகும்.

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாகும். மூலநோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை அரைத்து துவையல் போல சாப்பிட்டு வந்தால் மூலநோய் விரைவில் குணமாகும்.

குப்பைமேனி பூச்சிகளினால் ஏற்படும் விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி, தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்தும்.

நோய்வாய்ப்பட்டு நீண்ட நாட்களாகப் படுக்கையில் இருந்தவர்களுக்கு படுக்கை புண் வரும். அப்படி படுக்கை புண் வந்தவர்களுக்கு, குப்பைமேனி இலையை உலர்த்தி பொடி செய்து புண் இருக்கும் இடத்தில் கட்டுப்போட, புண்கள் ஆறும். குப்பைமேனி இலையைப் நீரில் கொதிக்கவைத்து, கஷாயமாகச் செய்து, அதனுடன் உப்பு சேர்த்துக் குடித்துவந்தால், மலம் இளகும்.

இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும். இலைச் சூரணத்தைப் பொடிபோல் நசியமிட தலைவலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்து குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி