தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Tips: கெளுத்தி மீனில் உள்ள அற்புதமான மருத்துவ பயன்கள்

Health Tips: கெளுத்தி மீனில் உள்ள அற்புதமான மருத்துவ பயன்கள்

I Jayachandran HT Tamil

Apr 04, 2023, 10:43 PM IST

google News
கெளுத்தி மீனில் அடங்கியிருக்கும் அற்புதமான மருத்துவ பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.
கெளுத்தி மீனில் அடங்கியிருக்கும் அற்புதமான மருத்துவ பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

கெளுத்தி மீனில் அடங்கியிருக்கும் அற்புதமான மருத்துவ பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

புரதச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள், பேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் உங்களுக்கு தேவையெனில் கெளுத்தி மீனை வாரத்துக்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

குறிப்பாக, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கெளுத்தி மீனை சாப்பிடலாம்.

கெளுத்தி மீனில் அடங்கியுள்ள சத்துக்கள்:

கெளுத்தி மீனில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சாச்சுரேட்டடு கொழுப்பு, பாலிஅன்சாச்சுரேட்டடு கொழுப்பு, மோனோசாச்சுரேட்டடு கொழுப்பு, சோடியம், பொட்டாசியம், கால்சியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் B12 ஆகியவை அடங்கியுள்ளன.

கெளுத்தி மீனில் குறைவான கலோரி அளவே உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இதனை சாப்பிடலாம்.

கெளுத்தி மீனை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஒமேகா 6 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இந்த இரு கொழுப்புச் சத்துக்களும் இதயம், அறிவு சார்ந்த குறைபாடு ளிலிருந்து காக்கிறது என அமெரிக்க இதய சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் உள்ள புரதச்சத்து, தசை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு செயல் திறனை மேம்படுத்துகிறது.

அது மட்டுமன்றி புரத்தச்சது, கார்போஹைட்ரேட் போன்றவவை உடலுக்கு நல்ல ஆற்றலை தருகின்றன.

நீங்கள் டயட்டில் இருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக வைட்டமின் பி12 தேவை. அப்படி வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள் இல்லாமல் நீங்கள் டயட்டில் இருந்தால், உங்கள் நரம்பு செயல்பாடு பாதிக்கப்படுகிறது, எனவே வைட்டமின் பி12 நிறைந்த கெளுத்தி மீனை சாப்பிடுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி