Benefits of Jowar : தினம் ஒரு தானியம்! ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த சோளத்தின் நன்மைகள்!
Jan 09, 2024, 06:00 AM IST
Benefits of Jowar : சோளத்தில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது. அதன் சில நன்மைகளை இங்கு பார்க்கலாம்.
குளூட்டன் இல்லை
குளூட்டன் என்பது கோதுமை மற்றும் பார்லியில் உள்ள புரதச்சத்து. இது செரிமான கோளாறுகளை ஏற்படுத்திவிடும். இதனால் வயிறு உப்புசம், வலி மற்றும் பொருமல் ஆகியவை ஏற்படுகிறது. சோளம் குளூட்டன் இல்லாத முழுதானியம். குளூட்டன் ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இது சிறந்த மாற்றாக உள்ளது.
நார்ச்சத்துகள் நிறைந்தது
பார்லி அல்லது அரிசியைவிட சோளத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஒருமுறை இதை எடுத்துக்கொண்டால், இதில் 12 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது தினம் எடுக்கவேண்டிய நார்ச்சத்தில் பாதியளவு ஆகும். அதிக நார்ச்சத்து எடுத்துக்கொள்வதால், உடல் பருமன், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் செரிமான கோளாறுகள் ஆகியவை ஏற்படுவது குறைகிறது.
ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
சோளத்தில் நிறைய மாவுச்சத்தும் உள்ளது. அதனால் இது செரிக்க தாமதம் ஏற்படுகிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவு காக்கப்படுகிறது. அதனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. எடை குறைக்க வேண்டும் என்பவர்களுக்கு நல்ல தேர்வாகும்.
சோளத்தில் புரதச்சத்து நிறைந்துள்ளது
100 கிராம் சோளத்தில் 11 கிராம் புரதம் உள்ளது. அது உடலுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. செல்கள் புதிதாக தோன்ற உதவுகிறது.
இரும்புச்சத்து நிறைந்தது
ஒரு கப் சோளத்தில் 8.45 கிராம் இரும்புச்சத்து உள்ளது. இதில் உள்ள இரும்புச்சத்துடன் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்கள் உடலுக்கு அதிகப்படியான நன்மைகளை வழங்குகிறது.
எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
இதில் மெக்னீசியச்சத்து அதிகம் உள்ளது. உடலில் உள்ள கால்சிய அளவை பராமரிக்கிறது. (மெக்னீசிய சத்துக்கள் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரிக்கிறது)
வைட்டமின், மினரல்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது
வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளது. அது உடலை புதிய திசுக்கள் உருவாகவும், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் வழங்குகிறது. கூடுதலாக சோளத்தில் துத்தநாகம் உள்ளிட்ட 20 ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது
இதில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதிக நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் அடிக்கடி சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. இது உடல் எடை குறைப்பவர்களுக்கு சிறந்தது.
செரிமானத்துக்கு உதவுகிறது
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை அதிகரிக்கிறது. எளிதாக மலம் கழிக்கவும் உதவுகிறது. செரிமான மண்டல ஆரோக்கியத்தை காக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிறு உப்புசம் மலச்சிக்கல் ஆகியவற்றிக்கு சிகிச்சையளிக்கிறது.
சோளம் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
சோத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இது மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, இதயத்தின் அனைத்து பாகங்களிலும் கிருமித்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மெக்னீசியம், இரும்பு, வைட்டமின் பி மற்றும் இ போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளதால், பல்வேறு இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இது பிளாஸ்மாவை சரிசெய்து உடலுக்கு நன்மை அளிக்கிறது.
சோளம் சக்தியை அதிகரிக்கிறது
சோளத்தில் உள்ள வைட்டமின் பி3 உடலில் சக்தியை அதிகரிக்கிறது. அது நாள் முழுவதும் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. சோளத்தில் உள்ள 28 சதவீதம் வைட்டமின் பி3 உள்ளது.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
சோளத்தில் உள்ள இரும்புச்சத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த செல்களை அதிகரிப்பதில் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. அனீமியா ஏற்படுவதை தடுக்கிறது.
100 கிராம் சோளத்தில் 349 கலோரிகள் உள்ளது. புரதச்சத்து 10.4 கிராம், கார்போஹைட்ரேட் 72.6 கிராம், கொழுப்பு 1.9 கிராம், நார்ச்சத்து 9.7 கிராம் உள்ளது.
டாபிக்ஸ்