Benefits of Foxtail Millet : தினம் ஒரு தானியம் அறிவோம்! நீரிழிவு நோய்க்கு எதிரி! திணையில் உள்ள நற்குணங்கள் என்ன?
Jan 02, 2024, 07:30 AM IST
Benefits of Foxtail Millet : தினம் ஒரு தானியம் அறிவோம்! நீரிழிவு நோய்க்கு எதிரி! திணையில் உள்ள நற்குணங்கள் என்ன?
100 கிராம் திணையில் 331 கலோரிகள் உள்ளது. இதில் புரதச்சத்து 12.3 கிராம், நார்ச்சத்து 8 கிராம், கொழுப்பு 4.3 கிராம், பாஸ்பரஸ் 290 மில்லி கிராம், பொட்டாசியம் 250 மில்லி கிராம், மெக்னீசியம் 81 மில்லி கிராம், வைட்டமின் ஏ 32 மில்லி கிராம், ஃபோலிக் ஆசிட் 15 மில்லி கிராம், சோடியம் 4.6 மில்லி கிராம், நியாசின் 3.2 மில்லி கிராம், இரும்புச்சத்து 2.8 மில்லி கிராம், துத்தநாகச்சத்து 2.4 மில்லி கிராம் இருந்தது.
திணையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. குளுக்கோஸை குறைக்கும் தன்மை உள்ளது. வாயுவை காக்கும் தன்மை உள்ளது. பூஞ்ஜை தொற்று தடுக்கும் தன்மைகள் நிறைந்தது.
நிரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் குறைவான கிளைசமிக் அளவுகள், கணைய செல்களை இன்சுலின் தயாரிக்க தூண்டுகிறது. இந்த ஹார்மோன் ரத்தச்சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.
ரத்த சர்க்கரை உயர்வதை குறைக்க உதவுகிறது. இன்சுலினுக்கு உடல் செல்களின் பங்களிப்பை அதிகரிக்கிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்சுலின்தான் ரத்த சர்க்கரை அளவை பராமரித்து, நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறது. இதனால் திணையை உட்கொள்வது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தத்துக்கு உதவுகிறது
உயர் ரத்த அழுத்தம்தான் பல்வேறு இதய நோய்களுக்கு காரணமாகிறது. ஏஸ்-இன்ஹிபிட்டர்ஸ் என்ற மருந்தின் மூலம் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஏஸ்-இன்ஹிபிட்டர் உட்பொருட்கள் திணையில் உள்ளது. இது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன.
பெருங்குடல் புற்றுநோயை தடுக்கிறது
செரிமான மண்டலத்தில் கீழே உள்ள பெருங்குடல், முழுதானியங்களை எடுத்துக்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திணையும் பெருங்குடல் புற்றுக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன.
பூஞ்ஜை தொற்று
திணையில் உள்ள பூஞ்ஜைக்கு எதிரான தன்மைகள் நமது உடலில் பூஞ்ஜை தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. போட்ரிரிடிஸ் சினெரியா மற்றும் ஆல்டர்நரியா ஆல்டர்னேட் ஆகிய பூஞ்ஜைகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இந்த பூஞ்ஜைகள் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி ஏற்படாமல் தடுக்கிறது. திணை இந்த பூஞ்ஜைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
ஊட்டச்சத்து குறைபாடு
ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்ய உதவுகிறது. அனைத்து சிறு தானியங்களும் உதவுகிறது. குறிப்பாக திணை அதிகளவில் உதவுகிறது. ஊட்டச்சத்துக்க தேவையான மெத்தியோனைன், கால்சியம், புரதம், துத்தநாதம் ஆகிய சத்துக்கள் திணையில் உள்ளது. இது ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்கிறது.
திணையில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உருவாக உதவுகிறது. இது இரும்பு பற்றாக்குறையை போக்கி, அனீமியாவை போக்குகிறது.
நார்ச்சத்து பித்தப்பை கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது. பித்தம் அதிகம் சுரப்பதையும் தடுக்கிறது. பித்த கொழுப்பையும் குறைக்கிறது.
குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.
டாபிக்ஸ்