தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Fenugreek : வயிறு உப்புசம்? சிறுநீரக கல்? நீரிழிவு நோயா? – வெந்தயமே போதும்! எப்படி உதவும்?

Benefits of Fenugreek : வயிறு உப்புசம்? சிறுநீரக கல்? நீரிழிவு நோயா? – வெந்தயமே போதும்! எப்படி உதவும்?

Priyadarshini R HT Tamil

Aug 30, 2023, 02:01 PM IST

google News
Benefits of Fenugreek : வெந்தயம், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு மசாலாப்பொருள். இது பெரும்பாலும் தாளிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதை முளைக்கட்டி சாப்பிடுவது அல்லது அதை ஊறவைத்த தண்ணீரை பருகுவது உடலுக்கு நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதனால் அதில் உள்ள நன்மைகள் தூண்டப்பட்டு, அதிகபட்ச நன்மையை உடலுக்கு அளிப்பதாக கூறுகிறார்கள்.

வெந்தய தண்ணீர் தயாரிப்பது எப்படி?

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் தண்ணீரில் அறை வெப்ப நிலையில் ஓரிவு ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள், அதை வடித்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இதில் உள்ள பாக்டீரியாக்களுக்கு எதிரான பொருட்கள், வாயுவை குறைத்து, வயிறு உப்புசத்தை தடுத்து ஜீரணத்துக்கு உதவுகிறது.

கொழுப்பை குறைக்கிறது. வெந்தயத்தில் ஸ்டிராய்டல் சப்போனின்கள் அதிகம் உள்ளது. அவை, வயிற்றில் கொழுப்பை உறிஞ்சுவதை கட்டுப்படுத்தி, மொத்த கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகிறது. அது ரத்தத்தில் ட்ரைகிளிசிரைட் அளவை குறைக்கிறது.

வெந்தயத்தில் அதிகம் காலாக்டோமன்னான் உள்ளது. அது அஜிரணக்கோளாறை குறைக்கிறது. மலச்சிக்கல் மற்றும் வேறு எந்த வயிறு தொடர்பான பிரச்னைகளும் வராமல் இருக்க உதவுகிறது.

நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. வெந்தய தண்ணீரில் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவி, நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ரத்தம் உறைதலை தடுக்க உதவுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீரை குடிப்பது, உடற்சூட்டை அதிகரிக்கு எடை குறைத்து, பராமரிப்பதில் உதவுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆய்வுகளின்படி, வெந்தய தண்ணீரை குடிப்பது தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதுடன், தலைமுடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது. தலையில் பொடுகு தொற்று ஏற்படாமலும் தடுக்கிறது.

சிறுநீரகத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகிறது. வெந்தய தண்ணீரில் பாலிபிஃனாலிக் ஃபிளேவனாய்ட்கள் உள்ளது. அது சிறுநீரகத்தின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. சிறுநீரகத்தில் கற்கள் வராமல் இருக்க உதவுகிறது.

வெந்தய தண்ணீரில் வைட்டமின் கே மற்றும் சி உள்ளது. அது சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. முகப்பரு, சுருக்கம், கரும்புள்ளிகள் மற்றும் கோடு ஆகியவைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

நிபுணர்களைப்பொறுத்தவரை, வெந்தயத்தில் ஃப்யூரோடானோலிக் சாப்போனின்கள் அதிகம் உள்ளது. அது டெஸ்ட்ஸ்ரோன் அதிகரிக்கவும், ஸ்பெர்ம் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீர்ச்சத்துடன் இருக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீரை குடிப்பதன் மூலம், மயக்கம், சோர்வு, காலை நேர சோர்வு மற்றும் தலைவலி ஆகிய அனைத்தையும் குறைக்க உதவுகிறது.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை