தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Broccoli Poriyal: ப்ராக்கோலி பொரியலும் அதன் சத்துக்களும்!

Broccoli Poriyal: ப்ராக்கோலி பொரியலும் அதன் சத்துக்களும்!

I Jayachandran HT Tamil

Jun 04, 2023, 06:28 PM IST

google News
ப்ராக்கோலி பொரியலும் அதன் சத்துக்களும் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
ப்ராக்கோலி பொரியலும் அதன் சத்துக்களும் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ப்ராக்கோலி பொரியலும் அதன் சத்துக்களும் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாக சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது.

இதயத்தை ஆரோக்கியமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைச் சரிசெய்யும். இளநரை வருவதைத் தடுக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கும். மூளையின் திறனை அதிகரிக்கும்.

ப்ரோக்கோலியில் மக்னீசியம் நிறைந்துள்ளது, இது நினைவாற்றலைத் தக்கவைப்பதில் உதவுகிறது. இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி, உடலில் உடலில் ரத்த ஓட்டத்தில் தடையின்றிச் சுற்றிவரும் தேவையற்ற பொருள்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தையும் போக்க உதவுகிறது.

ப்ராக்கோலி பொரியல் செய்யத் தேவையான பொருட்கள்:

ப்ராக்கோலி - 1 (சிறியது)

வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1

துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

வரமிளகாய் - 2

உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

ப்ராக்கோலி பொரியல் செய்முறை:

முதலில் ப்ராக்கோலியை நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர், ஒரு வாணிலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில், ப்ராக்கோலி மற்றும் உப்பு சேர்த்து 3&5 நிமிடம் நன்கு வதக்கி, ப்ராக்கோலி நன்கு அடர் நிறத்தில் மாறும்போது, அதில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ப்ராக்கோலி பொரியல் தயார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை