தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Herbal Remedies: இதயத்தை காக்கும் ஆம்பல் மலரின் மருத்துவப் பயன்கள்

Herbal Remedies: இதயத்தை காக்கும் ஆம்பல் மலரின் மருத்துவப் பயன்கள்

I Jayachandran HT Tamil

Jun 12, 2023, 08:57 PM IST

இதயத்தை காக்கும் ஆம்பல் மலரின் பல்வேறு மருத்துவப் பயன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
இதயத்தை காக்கும் ஆம்பல் மலரின் பல்வேறு மருத்துவப் பயன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

இதயத்தை காக்கும் ஆம்பல் மலரின் பல்வேறு மருத்துவப் பயன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

நீரில் மிதக்கும் அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி ஆம்பல். இதன் மலர்கள் நீர்மேல் மிதந்து கொண்டிருக்கும். வெள்ளை நிற மலர்களையுடையது வெள்ளையல்லியெனவும் செந்நிற மலர்களையுடையது செவ்வல்லியெனவும் வழங்கப் பெறும். இது குளம் குட்டைகளில் வளர்கின்றன. இதன் இலை, பூ, விதை, கிழங்கு ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

ட்ரெண்டிங் செய்திகள்

Benefits of Nannari : குளுகுளு கோடைக்கு உறுதுணை மட்டுமல்ல நன்னாரி உடலுக்கு வழங்கும் நன்மைகள் எத்தனை தெரியுமா?

Climate Change : சுட்டெரிக்கும் வெயில்; கருகும் பயிர்கள்! பருவநிலை மாற்ற பாதிப்புகளைக் குறைக்க என்ன செய்வது?

Parenting Tips : குழந்தைகள் திரையிலே மூழ்கிக்கிடக்கிறார்களா? அவர்களை விளையாட அழைத்துச் செல்வது எப்படி?

Pain Reliver Oil : ஒரே ஒரு எண்ணெய் போதும்! உடலின் மொத்த வலியையும் அடித்து விரட்டும்!

அழகான பூக்களை ரசித்தால் மனம் புத்துணர்வடையும். இது அனைவரும் அறிந்த உண்மை. பூக்கள் நறுமணத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும் தன்மை கொண்டவை. இந்த பூக்களில் அபூர்வமான மருத்துவக் குணங்களும் நிறைந்து காணப்படுகின்றன.

பெண்களில் முகத்தை தாமரைக்கும், அல்லிக்கும் ஒப்பாக குறிப்பிடுகின்றனர் சங்ககால புலவர்கள். அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம்.

அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும்.

எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

இந்த இதழில் அல்லி மலரின் மருத்துவக் குணத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். தாமரையைப் போல் நீரில் பூக்கும் பூ தான் அல்லி. இந்த மலர் இறைவனுக்கு படைக்கும் மலராகும். மாலைப் பொழுதில் தான் அல்லி மலர் மலரும். அல்லிக்கு ஆல்பம், குமுதம், கைவரம் என்ற பெயர்களும் உண்டு.

ஆம்பல் மலரின் மருத்துவப் பயன்கள்

ஆம்பல் இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும்.

200 கிராம் உலர்ந்த வெள்ளை இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து வடித்த நீரை 30 மி.லி. யாகக் காலை மாலை குடித்து வர சிறுநீரில் இரத்தம், சிறுநீர்ப்பாதைப்புண், சிறுநீர் மிகுதியாகக் கழிதல், தாகம், உட்காய்ச்சல் ஆகியவை தீரும்.

ஆம்பல் கிழங்கை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகச் சாப்பிட்டு வர குடல்புண், வயிற்றுப்போக்கு, மூலம் ஆகியவை குணமாகும்.

ஆம்பல்பூ 50 கிராம் 250 மி.லி. நீரிலிட்டு 125 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டியதில் 30 கிராம் சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி காலை மாலை 15 மி.லி யாகச் சாப்பிட்டு வர மூளைக்கொதிப்பு தணியும். கண் குளிர்ச்சியடையும். இதயப்படபடப்பைத் தணிக்கும்.

ஆம்பல் மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், ரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை தணியும்.

ஆம்பல் பூ‌வி‌ற்கு நீரிழிவை ‌சீரா‌க்கு‌ம் குண‌ம் உ‌ள்ளது. இது புண்களை ஆற்றும். வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீ‌ர்‌க்கும். அ‌ல்‌லி‌ப் பூவை அரை‌த்து சர்பத் செய்து சாப்பிடலாம்.

கோடை காலத்தில் வெப்பத்தில் குழந்தைகளுக்கு சூடு கட்டி வரும். அல்லி இலையையும், அவுரி இலையையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்து குணமடையும்.

சிவப்பு ஆம்பல் இதழ்களுடன், செம்பருத்தி பூ இதழையும் சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடித்து வந்தால் இதயம் பலமடையும், இதய படபடப்பு வராது, உடலில் ரத்தம் பெருகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி