தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Coriander Seeds Benefit: கொத்தமல்லி விதைகளை சாப்பிட்டு வந்தால் கோடையில் இவ்வளவு நன்மையா?

Coriander Seeds Benefit: கொத்தமல்லி விதைகளை சாப்பிட்டு வந்தால் கோடையில் இவ்வளவு நன்மையா?

I Jayachandran HT Tamil

Jun 05, 2023, 05:10 PM IST

google News
கோடையில் உடல் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் கொத்தமல்லி விதைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
கோடையில் உடல் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் கொத்தமல்லி விதைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

கோடையில் உடல் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் கொத்தமல்லி விதைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

கோடை சீசனில் வெளியே செல்வது உடலுக்குப் பலவித தீங்குகளை ஏற்படுத்துகிறது. மதியம் 12 மணி முதல் மாலை 4 மிணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது, இதனால் உடல் மிகவும் சோர்வடைகிறது. நாள் முழுவதும் உடலுக்குப் புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் தரும் ஏதாவது ஒரு பானத்தை நாம் காலையில் குடித்தால், அது நன்றாக இருக்கும். ஆயுர்வேதத்தில் இதுபோன்ற பல பானங்கள் உள்ளன அவற்றை நாம் தினமும் உட்கொள்ளலாம். இந்த பானங்கள் தயாரிக்க உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்கள் மட்டுமே போதுமானவை.

ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா பவ்சர் கோடைக்காலத்தில் அருந்தக்கூடிய கொத்தமல்லி பானம் பற்றி சில விவரங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதிகாலையில் சர்க்கரை மிட்டாய் சேர்த்து கொத்தமல்லித் தண்ணீரைக் குடித்து வந்தால் உடலின் ஏற்படும் உஷ்ணத்தை குறைகிறது என்கிறார்கள். அதாவது உங்களுக்கு சூடு, சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு, கை கால்களில் எரியும் உணர்வு, அமிலத்தன்மை பிரச்னை, வயிற்றில் எரியும் உணர்வு போன்றவை இருந்தால் அனைத்தையும் சரிசெய்யும் என்கிறார். அதிக தாகம் பிரச்னை மற்றும் உடல் நீரிழப்பு இருந்தால் உங்களுக்கு இந்த பானம் மிகவும் அவசியம்.

இந்த ஆயுர்வேத குளிர்பானம் செய்யும் முறை-

1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை எடுத்துக் கொண்டு அவற்றை சிறிது நசுக்கி கொள்ளவும்.

அதில் சுமார் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.

இரவு முழுவதும் ஊற விடவும்.

மறுநாள் காலையில் சிறிது சர்க்கரை மிட்டாய் சேர்த்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.

பானத்தை எடுத்துக்கொள்ளும் முறை-

இது உங்கள் உடலின் செரிமான பண்புகளை மேம்படுத்துகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 40-50 மில்லி அளவு கூடிக்காலம். சர்க்கரை மிட்டாய் சேர்த்துக்கொள்வது அவரவர் விருப்பம். நீங்கள் ஒரு நாளைக்கு 2-3 முறை இந்த பானத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் , குடிக்கும் போது 10 முதல் 30 மில்லி மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். நாள் முழுவதும் மருந்தின் அளவு 50 மில்லிக்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு முறை குடிப்பதற்குப் பதிலாக சிறிது சிறிதாக கூடிக்காலம். இந்த பானத்தை தொடர்ந்து 6 முதல் 8 வாரங்களுக்கு குடிக்கலாம்

கொத்தமல்லி பானத்தின் பயன்கள்-

கொத்தமல்லி நீர் நீரிழப்புக்கு மிகவும் நல்லது, இதனுடன் தீக்காயங்கள், பித்த பிரச்னைகள், அஜீரண பிரச்சனைகள், வயிற்று வலி பிரச்னைகள், காய்ச்சல், வயிற்றுப் புழுக்கள், கர்ப்பம் தொடர்பான கோளாறுகள் போன்றவற்றுக்கு இது நன்மை பயக்கும்.

நிபுணர் ஆலோசனையின்றி உணவை மாற்ற வேண்டாம். இதுபோன்ற ஆயுர்வேத வைத்தியங்கள் எல்லாவற்றுக்கும் நன்மை பயக்கும் என்றாலும் வீட்டு வைத்தியம் உங்களுக்கு பொருந்தவில்லை என்றால் முதலில் மருத்துவரை அணுகவும். அனைவரின் உடலும் ஒரே மாதிரியாக இருக்காது மற்றும் உடல்நிலை மிகவும் வித்தியாசமானது. எனவே உங்கள் உணவில் ஏதேனும் பெரிய மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரிடம் யோசனை கேட்பது நல்லது. நீங்கள் ஆரம்பத்தில் 10 மில்லியுடன் தொடங்கி, படிப்படியாக அதன் அளவை அதிகரிக்கலாம், இதனால் உங்கள் உடல் அதை எற்றுக்கொள்ளும்.

இதை குடித்த பிறகு வயிற்றுப்போக்கு, சளி-இருமல், வயிற்றுவலி அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதை எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகவும்.

அடுத்த செய்தி