தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beetroot Halwa : பீட்ரூட் அல்வா – ஆரோக்கியமும், சுவையும், நிறமும், மணமும் நிறைந்தது!

Beetroot Halwa : பீட்ரூட் அல்வா – ஆரோக்கியமும், சுவையும், நிறமும், மணமும் நிறைந்தது!

Priyadarshini R HT Tamil

Nov 29, 2023, 01:45 PM IST

google News
Beetroot Halwa : பீட்ரூட் அல்வா – ஆரோக்கியமும், சுவையும், நிறமும், மணமும் நிறைந்தது!
Beetroot Halwa : பீட்ரூட் அல்வா – ஆரோக்கியமும், சுவையும், நிறமும், மணமும் நிறைந்தது!

Beetroot Halwa : பீட்ரூட் அல்வா – ஆரோக்கியமும், சுவையும், நிறமும், மணமும் நிறைந்தது!

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 2 (சிறியது)

கார்ன் ஃப்ளோர் – அரை கப்

சர்க்கரை – ஒரு கப்

நெய் – 50 கிராம்

முந்திரி – ஒரு கைப்பிடி

ஏலக்காய்ப்பொடி – கால் ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, அதில் முந்திரி பருப்புக்களை சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.

பீட்ரூட்டை சுத்தம் செய்து நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சாறு பிழிந்து, அந்த சாற்றை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனுடன், கார்ன் ஃப்ளோர் மாவை சேர்த்து விஸ்க் வைத்து நன்றாக கரைக்க வேண்டும். பின்னர் பொடித்த சர்க்கரையையும் சேர்த்து அனைத்தையும் நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் அரை ஸ்பூன் நெய்யை சூடாக்கி, அதில் கரைத்து வைத்துள்ள பீட்ரூட் கலவையை சேர்க்க வேண்டும்.

பின்னர், தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். சுண்டி வரும் பதத்தில் வேகமாக கிளறவேண்டும். இல்லாவிட்டால், அடிபிடித்துவிடும்.

கடைசியாக அனைத்து நெய்யையும் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.

பின்னர், அதில் வறுத்த முந்திரியை சேர்த்து நன்றாக கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு சாப்பாட்டு தட்டில் நெய் தடவி, அதில் இந்த அல்வாவை சேர்த்து அரை மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு, சதுர துண்டுகளாக வெட்டி எடுத்தால், வாயில் வைத்தவுடன் வழுக்கிக்கொண்டு ஓடும் பீட்ரூட் அல்வா சாப்பிட தயார்.

இதில் கார்ன்ஃப்ளோர்க்கு பதில் கோதுமை மாவையும் சேர்த்துத்துக்கொள்ளலாம். வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்தும் செய்துகொள்ளலாம்.

குறிப்பாக பீட்ரூட்டின் இந்த நிறம் குழந்தைகளின் மனதை கவரும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான இது இருக்கும்.

பீட்ரூட்டின் நன்மைகள்

உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

ஏராளமான வைட்டமின்களும், தாதுக்களும் உள்ளன.

மறதியை குறைக்கும்.

பிறப்பு குறைபாடுகளின் ஆபத்து குறையும்.

எலும்புகளை வலுப்படுத்தும்

இரும்புச்சத்து குறைபாடு நீங்கும்.

குடல் மற்றும் செரிமானத்துக்கு நல்லது.

சரும ஆரோக்கியத்துக்கு நல்லது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி