தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ayurvedic Tips: நீண்டகாலம் இளமையாக இருக்க ஆயுர்வேதத்தின் 10 விதிகளை பாலோ பண்ணுங்க!

Ayurvedic Tips: நீண்டகாலம் இளமையாக இருக்க ஆயுர்வேதத்தின் 10 விதிகளை பாலோ பண்ணுங்க!

I Jayachandran HT Tamil

Jun 03, 2023, 02:38 PM IST

நீங்கள் நீண்ட காலம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க சில வழிகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நீண்ட காலம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க சில வழிகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் நீண்ட காலம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க சில வழிகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் சிறப்பு வாய்ந்தவை. இதில் தரப்படும் சிகிச்சைகளுக்கு பக்க விளைவுகள் கிடையாது. நீண்ட ஆயுளுக்கான வாழ்க்கை முறை மாற்றங்கள் அடங்கியது ஆயுர்வேதம். அதிலுள்ள சில குறிப்புகளைப் பின்பற்றினால் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளைப் பெறலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Late Night Eating Problems : நட்டநடு ராத்திரியில் உணவு சாப்பிடுபவரா? அச்சச்சோ அதனால் ஏற்படும் பாதிப்புகளை பாருங்கள்!

Mango Aviyal : மாங்காயில் வித்யாசமான அவியல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!

Benefits of Gulkand : தினமும் ஒரு ஸ்பூன் ரோஜா குல்கந்து! ஆற்றல், அமைதி, பாலியல் உணர்வு அதிகரிப்பு என எத்தனை நன்மைகள்!

Dry Fruits Laddu : தினமும் இதை மட்டும் ஒரு உருண்டை சாப்பிடுங்க! 15 நாளில் முடி உதிர்வது முற்றிலும் சரியாகும்!

குழந்தை, சிறியவர்கள், கர்ப்பிணிப் பெண் முதல் முதியவர்கள் வரை அனைவரின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் ஆற்றல் ஆயுர்வேதத்துக்கு உண்டு. இதன் மூலம் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

ஆயுர்வேத நிபுணரும் ஓஹியா ஆயுர்வேதத்தின் நிறுவனருமான ரஜ்னி ஓஹ்ரி சில ஆயுர்வேத வைத்தியங்களை உங்களுக்காக வழங்கியுள்ளார். இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த குறிப்புகளை பின்பற்றினால் நீங்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

உங்களை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் 10 ஆயுர்வேத குறிப்புகள்

1. ஆயுர்வேதத்தின் படி, 'பிரம்ம முகூர்த்தத்தின்' போது, அதாவது அதிகாலை 4-5.30 மணிக்குள் எழுந்திருப்பது சிறந்தது.

2. நீங்கள் அதிகாலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இருப்பினும், தண்ணீர் அறை வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இரவில் ஒரு தூய பிளாஸ்கில் தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்

3. கண்களை தினமும் இளநீர் அல்லது திரிபலா நீரினை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

4. பற்கள், ஈறுகள், தாடைகளை வலுவாக வைத்திருக்க நல்லெண்ணெய்யில் வாயை கொப்பளிக்கவும். இது உங்கள் குரலை மேம்படுத்தி கன்னங்களில் உள்ள சுருக்கங்களை நீக்கும். வெதுவெதுப்பான நல்ல எண்ணெய்யில் ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்.

5. தினமும் உங்கள் உடல் முழுவதும் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது அவசியம். நீங்கள் இதைச் செய்ய முடியாவிட்டால், குறைந்தது மூன்று முக்கியமான உறுப்புகளை மசாஜ் செய்ய வேண்டும். ஆம், உங்கள் காதுகள், தலை மற்றும் கால்களை மசாஜ் செய்வதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தலைவலி, வழுக்கை, முடி நரைத்தல் ஆகியவற்றை இது குணப்படுத்துகிறது. நல்ல தூக்கத்தைத் தூண்டுகிறது. சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும்.

6. தினமும் உடற்பயிற்சி முக்கியம் குறிப்பாக யோகா ஆரோக்கியத்துக்கு அவசியம். இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது, உடலின் ரசாயனங்களை சுத்தப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது உடல் உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கிறது, பசி மற்றும் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. உடல் பருமனை தடுக்கிறது.

7. நெற்றி, அக்குள், முதுகுத்தண்டில் வியர்க்கத் தொடங்கும் வரை உங்கள் திறனுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும்.

8. இரவும் தூங்குவதற்கு முன் உங்கள் பாதங்களைக் கழுவ வேண்டும், இது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது.முடிந்தால் உங்கள் கால்களை உப்பு நீரில் நனைத்து 5 நிமிடங்கள் இருகாலம்.

9. பிராணனை உங்கள் உடல் முழுவதும் ஆரோக்கியமான முறையில் பாய அனுமதிக்க எப்போதும் நேராக உட்காருங்கள். பிராணன் என்பது மனித உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்கும் அண்ட முக்கிய சக்தியின் சிறப்பு செயல்பாடு ஆகும். அதன் ஆற்றல் நாசி வழியாக இதய மட்டத்துக்கு பாய்கிறது.

10. தினமும் மாலை 7 நிமிடங்களுக்கு, தீபத்தின் சுடரைப் பார்த்து த்ரதக் கிரியா செய்யுங்கள். இது கண்பார்வை, நினைவாற்றலை மேம்படுத்துகிறது. சிந்தனையின் அற்புதமான தெளிவை அளிக்கிறது.

நீங்களும் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க விரும்பினால், இன்றிலிருந்து இந்த குறிப்புகளை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி