Aloe Vera Oil : பளபள சில்கி கூந்தல் வேண்டுமா? மூன்றே பொருளை வைத்து வீட்டிலேயே காய்ச்சலாம் எண்ணெய்!
Sep 06, 2023, 11:00 AM IST
Aloe Vera Oil : பளபள சில்கி கூந்தல் வேண்டுமா? மூன்றே பொருளை வைத்து வீட்டிலேயே காய்ச்சலாம் கற்றாழை எண்ணெய். முயற்சித்து பாருங்ளேன். இதோ வழிமுறை!
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 100 மில்லி லிட்டர்
கற்றாழை – 2 – 5
மிளகு – ஒரு ஸ்பூன்
செய்முறை
முதலில் கற்றாழையை நன்றாக கழுவி சுத்தம் செய்து, அதில் உள்ள முள் பகுதிகளை நீக்கிவிட்டு தோலுடன் நடு, சதைப்பகுதியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
நன்றாக ஒரு பாத்திரத்தில்போட்டு ஸ்மாஷ் செய்துகொள்ள வேண்டும். அதை ஸ்மாஷர் வைத்தும் செய்யலாம் அல்லது டம்பளரின் திறந்த பாகத்தை வைத்து அடித்தும் எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு கடாயில் 100 மில்லி லிட்டர் எண்ணெயை சூடாக்கி அதில் இந்த கற்றாழையை சேர்க்க வேண்டும். கற்றாழை பிசுபிசுவென்று வரும்.
மிதமான தீயில் நன்றாக காய்ச்ச வேண்டும்.
கற்றாழை நிறம் மாறி தனித்தனியாக பிரிந்து வரும் வரை எண்ணெயில் சேர்த்து சூடேற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
அப்போதுதான் அதன் சாறு முற்றிலும் எண்ணெயில் இறங்கும். பின்னர் அந்த எண்ணெயை வடிகட்டி, ஆறியபின், வேறு ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த எண்ணெயை நீங்கள் வழக்கமாக தேய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கு பதில் அன்றாடம் பயன்படுத்தி வர கூந்தல் பளபளப்பாகும்.
நல்ல பலனுக்கு செக்கில் அரைத்த தேங்காய் எண்ணெயை உபயோகிக்கலாம். அது கிடைக்காதவர்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஏதேனும் ஒரு எண்ணெய் பயன்படுத்திக்கொள்ளலாம்.
முடிக்கு தேவையான பொலிவு மற்றும் ஆரோக்கியம் இரண்டையும். இந்த கத்தாழை எண்ணெயே வழங்கிவிடுவதால் உங்களுக்கு இது கூடுதல் பலனளிக்கும். தேவைக்கு ஏற்ப அளவுகளில் செய்து வைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள்.
கற்றாழையின் நன்மைகள்
கற்றாழை ஒரு காயகற்ப மூலிகை. கற்றாழை பொடியை முறையாக சாப்பிட்டு வர எப்போதும் இளமையாகவும், உடல் வன்மையோடும் வாழலாம். பொதுவா கற்றாழை உடல் சூட்டை தணித்து, உடலுக்கு வலிமை தரும்.
கற்றாழைச் சாறு அல்லது கற்றாழைப்பொடியை முறையாக சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு, சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், நீர்கட்டி, மாதவிடாய் கோளாறுகள், குழந்தைப்பேறு இல்லாமை போன்ற நோய்கள் குணமாகும் வாய்ப்புண்டு.
கற்றாழை சாறெடுத்து வெண்ணெய் (அ) கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் (30 மிலி) நீர்ச்சுருக்கு (சிறுநீர் குறைந்து மஞ்சள் நிறத்தில் வெளிப்படல்) நீங்கும். உடல் வெப்பம், உடலரிப்பு நீங்கும்.
கற்றாழையின் சோற்றை எடுத்து பலமுறை கழுவி, இதில் சிறிது படிகாரம் சேர்த்து, சிறு துணியில் முடிந்து தொங்கவிட, அதிலிருந்து நீர் வடியும். அந்நீரை கண்களில் விட கண் சிவப்பு, கண் நோய்கள் நீங்கும்.
டாபிக்ஸ்