தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Healthy Tips: வெள்ளை அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் 9 ஆரோக்கிய நன்மைகள்

Healthy Tips: வெள்ளை அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் 9 ஆரோக்கிய நன்மைகள்

I Jayachandran HT Tamil

Jun 08, 2023, 11:41 AM IST

google News
வெள்ளை அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் 9 ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
வெள்ளை அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் 9 ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

வெள்ளை அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் 9 ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

வெள்ளை அரிசி ஒரு சத்தான, ஆரோக்கியமான உணவாகும். இது சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக மிதமாக உட்கொள்ளும் போது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்க முடியும்.

வெள்ளை அரிசி நீங்கள் நினைப்பது போல் ஆரோக்கியமற்றது அல்ல; வெள்ளை அரிசி சாப்பிடுவதால் 9 ஆரோக்கிய நன்மைகள்கிடைக்கும்.

மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது வெள்ளை அரிசியில் கலோரிகள் குறைவாகவே உள்ளது

பல நூற்றாண்டுகளாக பல கலாசாரங்களில் வெள்ளை அரிசி பிரதான உணவாக இருந்து வருகிறது. இது உலகளவில் பொதுவாக உட்கொள்ளப்படும் அரிசி வகையாகும். இதில் கார்போஹைட்ரேட் , ஃபோலேட், வைட்டமின் பி1 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், அதன் உயர் கிளைசெமிக் குறியீடு மற்றும் குறைந்த ஊட்டச்சத்து உள்ளடக்கத்தால் பல ஆண்டுகளாக மோசமான கருத்துகளையே பெற்றுள்ளது. ஆனால் வெள்ளை அரிசி முன்பு நம்பப்பட்டது போல் ஆரோக்கியமற்றதாக இருக்காது என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.

உண்மையில், இது ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இது ஆரோக்கியமான செல் செயல்பாடு, ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல், இதய நோய் தடுப்பு ஆகியவற்றுக்கு முக்கியமானதாக விளங்குகிறது. வெள்ளை அரிசியில் கொழுப்பு, சோடியம் குறைவாக உள்ளதால் உடல் பருமன் மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்க உதவுகிறது.

இருப்பினும், வெள்ளை அரிசியில் சுத்திகரிக்கப்படாத முழு தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லை என்பதை மறுக்க முடியாது. எனவே, வெள்ளை அரிசியை மிதமாக உட்கொள்வதோடு காய்கறிகள், மெலிந்த புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுமாறு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

வெள்ளை அரிசி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் 9 வழிகள்:

1. ஆற்றலை வழங்குகிறது

வெள்ளை அரிசியை உண்பதால், நமது உடலுக்கு ஆற்றலை வழங்கும் முதன்மையான கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், உடனடி ஆற்றலைப் பெறலாம்.

2. பசையம் இல்லாதது

வெள்ளை அரிசி பசையம் இல்லாதது. பசையம் ஒரு பிரச்னை இல்லை என்பவர்களுக்கு இது கார்போஹைட்ரேட்டின் நல்ல மூலமாகும்.

3. ஜீரணிக்க எளிதானது

வெள்ளை அரிசி ஜீரணிக்க எளிதானது. செரிமான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும். சளி, இருமல் அல்லது பிற பருவகால நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படும் போது சாதுவான உணவுகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.

4. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

வெள்ளை அரிசியை சாப்பிடுவது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இது இதய நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

5. ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் நிறைந்தது

வெள்ளை அரிசியில் ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் உள்ளன. இது செல்கள், டிஎன்ஏ மற்றும் புரதங்களுக்கு சேதம் விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

6. எடை இழப்பை ஊக்குவிக்கிறது

வெள்ளை அரிசியில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. இது எடை இழப்பு உணவுக்கு கூடுதல் மெனுவாகும்.

7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

வெள்ளை அரிசியில் வைட்டமின் டி, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

8. நாள்பட்ட நோய்களைத் தடுக்கிறது

வெள்ளை அரிசியை சாப்பிடுவதால் நீரிழிவு, உடல் பருமன், புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கலாம். வெள்ளை அரிசியில் உள்ள ஆன்டிஆக்ஸிடெண்ட்கள், நோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்க உதவும்.

9. கலோரிகள் குறைவு

மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது வெள்ளை அரிசியில் கலோரிகள் குறைவாக உள்ளது. ஒரு கப் சமைத்த வெள்ளை அரிசியில் 200 கலோரிகள் மட்டுமே உள்ளது, அதே சமயம் பழுப்பு அரிசியில் 215 கலோரிகள் உள்ளன. உடல் எடையை குறைக்க அல்லது ஆரோக்கியமான எடையை பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த வெள்ளை அரிசி ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.

இறுதியாக, வெள்ளை அரிசி முன்பு நினைத்தது போல் ஆரோக்கியமற்றதாக இருக்கலாம். மிதமான மற்றும் பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுடன் உட்கொள்ளும்போது இது ஆரோக்கியமான மற்றும் சீரான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம். இருப்பினும், பழுப்பு அல்லது காட்டு அரிசி போன்ற முழு தானியங்களுக்கு மாறுவது கூடுதல் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி