Heart Attack: சுண்டு விரல் வலி முதல் வாந்தி வரை.. மாரடைப்பு ஏற்படுத்தும் 7 அறிகுறிகள்!
Feb 16, 2024, 12:04 PM IST
மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளை இங்கு பார்க்கலாம்.
இதய மாரடைப்பின் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மாரடைப்பு ஏற்பட்ட அடுத்த ஒரு மணி நேரம் என்பது மிக மிக முக்கியமானது. அதனை தங்க நேரம் என்று அழைக்கிறார்கள். அந்த ஒரு மணி நேரத்திற்குள் மாரடைப்பு ஏற்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, அவர்களை காப்பாற்ற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இதயமானது மற்ற உறுப்புகளுக்கு இரத்தத்தை அனுப்பும். அப்படி செயல்படக்கூடிய இதயத்திற்கும் இரத்தம் தேவைப்படும்.
அப்படி இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்வதற்கு அங்கே இரத்த குழாய்கள் இருக்கும். இந்த குழாய்களில் அடைப்பு ஏற்படும் பட்சத்தில் மாரடைப்பு ஏற்படும்.
மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகளை பார்க்கலாம்.
முதலில் நெஞ்சுவலி. ஒரு யானை உங்களின் இதயத்தின் மீது கால் வைத்து அழுத்தினால் எப்படி வலிக்குமோ, அப்படி வலிக்கும்.
இடது கை மரத்துப்போகும். இதயத்தில் ஏற்படக்கூடிய வலியானது சுண்டு விரல் வரை கூட செல்லும். சில சமயங்களில் வலது கையில் கூட வலி ஏற்படும்.
இன்னும் சிலருக்கு வயிற்றில் கூட வலி ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு மாரடைப்பு அறிகுறியாக வயிறு அதிகமாக வலிக்கும்.
இதில் ஏற்படக்கூடிய வலியானது நம் முதுகிற்கும் பரவும். தாடை பகுதிக்கும் இந்த வலியானது பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது
உடல் குளிர்ந்து வியர்க்க ஆரம்பிக்கும்
வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும்
மூச்சு விடுவதற்கு கூட சிரமப்படுவர். காரணம் இதயத்திற்கு போதுமான அளவு ஆக்சிஜன கிடைக்கவில்லை. இதனால் நுரையீரலிலும் ஆக்சிஜன் சப்ளையானது குறையும். இதனால்தான் அவர்கள் மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்படுகிறது
இதயம் அளவுக்கதிகமாக துடிக்க ஆரம்பித்தலும், மாரடைப்பிற்கான அறிகுறியாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல ஒரு விதமான மயக்க நிலையும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கும்.
டாபிக்ஸ்