தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kids Food: குழந்தைகளுக்கான பாஸ்தாக்களை ஆரோக்கியமானதாக செய்வது எப்படி?

Kids Food: குழந்தைகளுக்கான பாஸ்தாக்களை ஆரோக்கியமானதாக செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil

Jun 08, 2023, 04:34 PM IST

google News
குழந்தைகளுக்கான பாஸ்தாக்களை ஆரோக்கியமானதாக செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கான பாஸ்தாக்களை ஆரோக்கியமானதாக செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கான பாஸ்தாக்களை ஆரோக்கியமானதாக செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் எளிதாகச் செய்யமுடியும் என்பதாலேயே சீன உணவுகள் பிரபலமாகிவிட்டன. தற்போது அந்த வரிசையில் இத்தாலிய உணவான பாஸ்தாவும் இடம் பெற்று விட்டது. பெரியவர்கள் இதை சாப்பிட்டாலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாக பாஸ்தா மாறிவிட்டது. ஆனால் பாஸ்தாவில் குழந்தைகளுக்கு கெடுதல் செய்யும் விஷயங்கள் மிக அதிகம். எனவே குழந்தைகளுக்கு செய்யும்போது பாஸ்தாவை ஆரோக்கியமான உணவாக மாற்றும் சூத்திரம் தாய்மாரிடம் உள்ளது.

பாஸ்தாவில் சுவையை அதிகரிக்க அதிக கொழுப்புள்ள பொருட்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். உங்கள் எடை இழப்பு உணவுக்கு ஏற்ற, சுவையான, ஆரோக்கியமான பாஸ்தாவை வீட்டிலேயே செய்ய 5 எளிய தந்திரங்கள் இங்கே உள்ளன.

நிறைய காய்கறிகளைச் சேர்க்கவும்-

காய்கறிகள் இல்லாமல் எளிய பாஸ்தாவை சாப்பிடுவது கார்போஹைட்ரேட்டுகளை உடலில் ஏற்றுவதாகும். அதற்கு பதிலாக, சோளம், ப்ரோக்கோலி, சீமை சுரைக்காய், பெல் பெப்பர்ஸ், வெங்காயம், ஆலிவ், ஜாலபீனோஸ் போன்ற வதக்கிய காய்கறிகளை உங்கள் பாஸ்தாவில் சேர்க்கவும். இது கார்போஹைட்ரேட் நிறைந்த பாஸ்தாவின் ஒட்டுமொத்த நுகர்வையும் குறைக்கும். உணவில் நார்ச்சத்தும் அதிகரிக்கும்.

முழு தானியங்கள் அல்லது தினை பாஸ்தா-

மைதா அல்லது சுத்திகரிக்கப்பட்ட மாவில் செய்யப்பட்ட பாஸ்தாவை தேர்வு செய்ய வேண்டாம். கோதுமை, கம்பு, சோளம், கேப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட தினை அடிப்படையிலான முழு தானியங்களுடன் கூடிய பாஸ்தாவைத் தேர்ந்தெடுக்கவும். சுத்திகரிக்கப்பட்ட மாவில் அதிக கலோரிகள் உள்ளன, ஜீரணிக்க கடினமாக இருக்கும். முழு தானிய பாஸ்தாவுடன் ஒப்பிடும்போது மைதாவில் குறைவான ஊட்டச்சத்து உள்ளது.

பிங்க் சாஸ் பாஸ்தாவை தவிர்க்கவும்-

பிங்க் சாஸ் என்பது தக்காளி பியூரியுடன் பால் சேர்ப்பது. இப்படி தக்காளியை பாலுடன் கலப்பது ஆரோக்கியமான தேர்வாக இருக்காது. ஏனெனில், தக்காளியில் உள்ள சிட்ரிக் அமிலம், பால் பொருட்களில் உள்ள லாக்டிக் அமிலத்துடன் சரியாக வேலை செய்யாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது செரிக்கப்படாத வளர்சிதை மாற்றக் கழிவுகளுக்கு வழிவகுக்கும், இது உங்கள் குடலில் மணிக்கணக்கில் இருக்கும். எனவே ஒரு நேரத்தில் ஒரே ஒரு சாஸ் தேர்வு செய்வது சிறந்தது.

தாராளமாக எண்ணெய் பயன்படுத்தவும்-

உங்கள் பாஸ்தாவில் குறைந்த அளவு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமான தேர்வு செய்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். அது உண்மையல்ல. ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதில் தாராளமாக இருங்கள், "இது உங்கள் ஜி.ஐ. பாதையை உயவூட்டுவதற்கும், செரிமானமான உணவுகளை சீராக நகர்த்துவதற்கும் உதவுகிறது. இதனால் பாஸ்தா உங்கள் குடலில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதைத் தடுக்கிறது" என்று இன்ஸ்டாகிராமில் ஆயுர்வேதம் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளர் டாக்டர் டிம்பிள் ஜங்தா விளக்குகிறார். .

புரதத்தை மறந்துவிடாதீர்கள்-

காய்கறிகளுடன், உங்கள் பாஸ்தாவில் புரதத்தின் மூலங்களைச் சேர்க்க மறக்காதீர்கள். உங்கள் பாஸ்தா தட்டு அல்லது கிண்ணத்தில் கால் பங்கு புரதம் நிரப்பப்பட வேண்டும். உங்கள் பாஸ்தாவில் கொழுப்பு குறைந்த கோழி இறைச்சி அல்லது சால்மன் போன்ற புதிய மீன்களைச் சேர்க்கலாம். நீங்கள் சைவ பாஸ்தா தயாரிப்பதாக இருந்தால், வெள்ளை பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளைச் சேர்க்கவும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி