தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Foods To Boost Productivity: ஆபிஸில் உற்சாகமாக இருக்க நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய 5 உணவுகள்

Foods To Boost Productivity: ஆபிஸில் உற்சாகமாக இருக்க நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய 5 உணவுகள்

Marimuthu M HT Tamil

Feb 09, 2024, 04:39 PM IST

google News
ஆபிஸில் உற்சாகமாக இருக்க நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய 5 உணவுகள் குறித்துப் பார்ப்போம். (Freepik)
ஆபிஸில் உற்சாகமாக இருக்க நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய 5 உணவுகள் குறித்துப் பார்ப்போம்.

ஆபிஸில் உற்சாகமாக இருக்க நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய 5 உணவுகள் குறித்துப் பார்ப்போம்.

பணியில் அதிக உற்பத்தித்திறனைப் பராமரிப்பது என்பது மிக முக்கியம். அது ஒரு நாளில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சுலபமாக தயாரிக்கக்கூடிய மற்றும் ஆரோக்கியமான தின்பண்டங்கள் பணியிடங்களில் சிறந்த பணியிட சிற்றுண்டிகளாகப் பயன்படுகின்றன. 

மேலும், புரோபயாடிக்குகள், புரதம், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை உடலுக்கு முக்கியமான ஒன்றாகும். 

"நம் அலுவலகத்தில் பிஸியான 9 மணி முதல் 5 மணி வரையிலான வாழ்க்கை முறையை சமநிலைப்படுத்துவதில் பெரும்பாலும் உணவு புறக்கணிக்கப்படுகிறது. அதிகபட்ச உற்பத்தித்திறனுக்கான சரியான உணவுடன், உங்கள் நாளைத் தொடங்குங்கள். மோர் முதல் வாழைப்பழங்கள் வரை, நாம் எடுத்துக்கொள்ளும், சத்தான உணவுகள் உங்கள் வேலை நாளை உற்சாகமாக மாற்றும் "என்று ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் எழுதியிருந்தார். 

பசி ஏற்படும்போது நீங்கள் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலை, ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா பகிர்ந்து கொள்ளார்.

1. மோர்

எப்போது குடிக்க வேண்டும்: காலை, 10-11 மணியளவில் குடிக்க வேண்டும்.

நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்: மோர், புரதம் நிறைந்த ஒரு இயற்கை புரோபயாடிக் ஆகும். மோர், நமது உடலில் ஆற்றலை உயர்ந்ததாகவும் நிலையானதாகவும் வைத்திருக்கும். பசியைப் பூர்த்தி செய்கிறது. உடலுக்குத் தேவையான நீரேற்றத்தை ஊக்குவிக்கிறது.

எவ்வாறு வேலை செய்கிறது: பிஸியான வேலை நேரங்களில் பெரும்பாலும் ஏற்படும் நீரிழப்பை எதிர்கொள்ள மோர் உதவுகிறது

2. புதினா தேநீர்

எப்போது குடிக்க வேண்டும்: மதிய உணவுக்குப் பிறகு, பிற்பகலுக்குப் பின் குடிக்க வேண்டும்.

நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்: புதினா தேநீர் செரிமானத்திற்கு உதவுகிறது. உடலில் அமிலத்தன்மையை எதிர்த்துப் போராட உதவுகிறது.

எவ்வாறு வேலை செய்கிறது: புதினா தேநீர் ஒரு புத்துணர்ச்சியூட்டும் நீர் ஆகாரம் ஆகும். குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. நம் உடலில் சுறுசுறுப்பினைப் பராமரிப்பதற்கும் வயிற்றில் இருக்கும் மந்தத்தைத் தடுப்பதற்கும் உதவுகிறது. 

3. வாழைப்பழம்

எப்போது குடிக்க வேண்டும்?: காலை அல்லது பிற்பகல் சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்.

நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்: வாழைப்பழம் மன விழிப்புணர்வு மற்றும் உடல் ஆற்றலை பராமரிக்கிறது. இது பொட்டாசியம் மற்றும் இயற்கை சர்க்கரைகளைக் கொண்டது.

எவ்வாறு வேலை செய்கிறது?: உடலில் விரைவான, சத்தான ஆற்றலைப் பெறத்துடிக்கிறது. நீடித்த செயல்திறனை ஆதரிக்கிறது

4. வறுத்த கொண்டைக்கடலை

எப்போது சாப்பிட வேண்டும்?: மதியம் அல்லது மதிய உணவுக்கு முன்பு, சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம். 

நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்: நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவை வறுத்த கொண்டைக் கடலையில் அதிகம். வறுத்த கொண்டைக் கடலை நம் உடலுக்குத்தேவையான நீடித்த ஆற்றல் மட்டங்களையும் மனநிறைவையும் தருகிறது. 

எவ்வாறு வேலை செய்கிறது?: ரத்த சர்க்கரையை உறுதிப்படுத்த உதவுகிறது. 

5. பிஸ்தா

எப்போது சாப்பிட வேண்டும்?: பிற்பகல் சிற்றுண்டிக்கு ஏற்றது.

நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்: ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் ஏற்றப்பட்ட, பிஸ்தாக்கள் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கின்றன.

எவ்வாறு வேலை செய்கிறது?: நீண்டகால ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. உங்கள் பசியை திருப்திப்படுத்தும் குற்ற உணர்வு இல்லாத விருந்தாகிறது.

ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக இந்த உணவுகளை உங்கள் வாழ்க்கை முறையில், பணிநேரத்தின் காலை 9 மணி முதல் 5 மணி வரை வாழ்க்கை முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை குறிப்பிடத்தக்க நன்மைகளுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’’ என பத்ரா மேலும் கூறுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி