தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  22 Years Of Samuthiram : ‘இதுபோல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறோம்’ சகோதர பாசம் உணர்த்திய சமுத்திரம் படம்!

22 Years of Samuthiram : ‘இதுபோல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறோம்’ சகோதர பாசம் உணர்த்திய சமுத்திரம் படம்!

Priyadarshini R HT Tamil

Aug 31, 2023, 06:43 AM IST

google News
22 Years of Samuthiram : குடும்ப பாசத்தை உணர்த்திய திரைப்படம் சமுத்திரம். உறவுகள், அண்ணன் - தங்கை பாசம், குடும்பம் என இந்தப்படம் பல்வேறு உணர்வுகளை உணர்த்திய படம்.
22 Years of Samuthiram : குடும்ப பாசத்தை உணர்த்திய திரைப்படம் சமுத்திரம். உறவுகள், அண்ணன் - தங்கை பாசம், குடும்பம் என இந்தப்படம் பல்வேறு உணர்வுகளை உணர்த்திய படம்.

22 Years of Samuthiram : குடும்ப பாசத்தை உணர்த்திய திரைப்படம் சமுத்திரம். உறவுகள், அண்ணன் - தங்கை பாசம், குடும்பம் என இந்தப்படம் பல்வேறு உணர்வுகளை உணர்த்திய படம்.

வழக்கமான கே.எஸ். ரவிக்குமார் பாணி குடும்ப படம். சரத்குமார், முரளி, மனோஜ் பாரதிராஜா மூன்று பேரும் சகோதரர்கள். இவர்களின் ஒரே தங்கை காவேரி. உறவினராக கவுண்டமணி, வீட்டின் உதவியாளரா செந்தில், மஞ்சுளா, அபிராமி, சிந்து மேனன், மோனல், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மூன்று சகோதரர்களின் ஒரே தங்கை என்பதால் காவேரி பாசமாக வளர்க்கப்படுகிறார். ஊரில் கோயிலுக்கு மரியாதை வழக்கமாக சரத்குமாருக்கு கிடைக்கும். அதை வில்லனின் தந்தை தட்டிப்பறிக்க முயல்கிறார். ஆனால் ஊர்மக்கள் அதை சரத்குமாருக்கு கொடுக்க, ஆத்திரமடைந்த தந்தை சரத்குமாரை பழிவாங்க விரும்புகிறார்.

இதனால் தனது மகனுக்கு காவேரியை திருமணம் செய்துகொண்டு சென்று கொடுமை செய்கிறார். அவர்களை ஏமாற்றி அவர்களின் சொத்து மொத்தத்தையும் அபகரித்துக்கொள்கிறார். இதற்கிடையில் சரத்குமாருக்கும், அபிராமிக்கும் திருமணம் நடைபெறுகிறது. இவற்றையெல்லாம் பொருத்துக்கொள்ளும் பெண்ணாக அபிராமி இருக்கிறார்.

முரளிக்கும், சிந்து மேனனுக்கும் திருமணம் நடக்கிறது. சிந்து மேனன் அவர்களின் அத்தை மஞ்சுளாவின் மகள். ஆனால் அவர் குடும்பத்துடன் ஒத்துப்போக மாட்டேன் என்கிறார். கூட்டு குடும்பத்தில் அனைவரும் வசிக்கிறார்கள். சண்டை சச்சரவுடன் குடும்பம் நடக்கிறது. கல்லூரியில் படிக்கும் மனோஜ், அரசியல்வாதி மகள் மோனலை திருமணம் காதலிக்கிறார். அவர்களின் குடும்ப பிரச்னைகள் எப்படி தீர்க்கப்படுகிறது என்பது ஒருபுறம் சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் கருவுறும் காவேரிக்கு வளைகாப்பு நடத்துகிறார் அவரது மாமனார் வில்லன். அதற்கு அவரின் அண்ணன்களை அழைத்து அவமானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், அவர்கள் அவமானப்பட வேண்டாம் என்று நினைத்த காவேரி அவர்களை திட்டி அனுப்பிவிடுகிறார். ஆனால் தனியாக சகோதரர்களை சந்தித்து அவர்களின் சாப்பாட்டை சாப்பிட்டு மகிழ்ச்கிறார்.

இந்நிலையில் பல்வேறு தடைகளை கடந்த வெற்றிபெறப்போகும் மனோஜ்-மோனல் திருமணத்திற்கு தங்கையை வரவிடாமல் தடுக்கும் வில்லன். கர்ப்பிணியான காவேரியை அடித்து துன்புறுத்தும் அவரிடம் இருந்து காவேரி தப்பித்தாரா என்பதுதான் கதை

குடும்பம், அண்ணன்-தங்கை பாசம், கவுண்டமணி – செந்தில் காமெடி என படத்தில் அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருக்கும். சுபாஷ் முரளியின் இசையில் அனைத்து பாடல்களுமே ஹிட். அழகான சின்ன தேவதை, அவள்தானே எங்கள் புன்னகை, காவிட்ட காவிட்ட, கண்டுபுடி, கண்டுபுடி கள்வனை கண்டுபுடி, விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம், பைனாப்பிள் வண்ணத்தோடு ஆகிய அனைத்து பாடல்களுமே ஹிட். இந்தப்படம் 22 ஆண்டுகளுக்கு முன், 2001ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வெளியானது. இந்தப்படத்தை சிறந்த குடும்ப படமாக பத்திரிக்கைகள் கொண்டாடின. இந்தப்படம் சரத்குமாருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

இந்தப்படத்தை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார், வழக்கமாக தான் இயக்கும் படங்களில் கௌரவதோற்றத்தில் வருவார், அதேபோல் இந்தப்படத்திலும் நடித்துள்ளார். அனைவரின் சிறப்பான நடிப்பிலும், தமிழ் மக்களிடம் பொதுவாகவே வரவேற்பை பெறும் குடும்ப படங்கள் பட்டியலில் இடம்பெற்றதால் இந்தப்படம் வெற்றி பெற்றது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி