(7 / 11)6.வேர்க்கடலை பக்கோடா Peanut pakoda தேவையானவை: காய்ந்த, வறுக்காத வேர்க்கடலை – 200 கிராம், கடலை மாவு – 100 கிராம், அரிசி மாவு – 50 கிராம், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு. செய்முறை: வேர்க்கடலையுடன் வெண்ணெய், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாகப் பிசிறி, தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, அதில் கலவையில் சிறிது எடுத்து உதிர்த்தாற் போல் போட்டு, பொரித்து எடுக்கவும். குறிப்பு: எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் கழித்து கரண்டியால் கிளறினால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக நன்றாக வரும்.