September 12 Tamil News Updates: பாதையின் குறுக்கே மரம் விழுந்ததால் ரயில் ரத்து!
Sep 12, 2022, 12:55 PM IST
நீலகிரி மலை ரயில் பாதையில் குறுக்கே மரம் விழுந்ததால் அவ்வழியாக செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் சேவை ரத்து- சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு
அதிகளவில் மழை பொழிந்து வருகிற காரணத்தால் நீலகிரி மலை ரயில் பாதையில் கெட்டி லவ்டேல் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாதையின் குறுக்கே மரம் விழுந்துள்ளது. அதனால் அவ்வழியாக செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் கடல் திடீரென உள் வாங்கியது
கன்னியாகுமரியில் கடல் திடீரென என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன.
உச்ச நீதிமன்றத்தில் 220 பொதுநல மனுக்கள் விசாரணை
உச்ச நீதிமன்றத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் மனு உட்பட, 220 பொதுநல மனுக்கள் இன்று(செப்.,12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று 220 பொதுநல மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாக்டோ - ஜியோ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும், ஜாக்டோ - ஜியோவின் 'வாழ்வாதார நம்பிக்கை மாநாடு' இன்று சென்னையில் நடக்கிறது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
பொங்கல் பண்டிகை ரயில் சேவை முன்பதிவு தொடக்கம்
பொங்கல் பண்டிகைக்கான ரயில் சேவை முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 10ஆம் தேதிக்கான டிக்கெட்டுகளை இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடக்கம்
சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏ.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி வரும் செப் 18ஆம் தேதி வரை நடக்கிறது.
கால்நடை மருத்துவம் விண்ணப்பம் தொடக்கம்
தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் செயல்படும் கல்லுாரிகளில், ஐந்தரை ஆண்டு கால மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பான பி.வி.எஸ்சி., மற்றும் ஏ.ஹெச்., படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இங்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இன்று காலை 10 மணி முதல் வரும் 26ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அதிமுக தலைமை அலுவலக சாவி வழக்கு விசாரணை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக சாவி தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.