promotionBanner
தமிழ் செய்திகள்  /  latest news  /  November 05 Tamil News Updates:200 இடங்களில் இலவச மருத்துவ முகாம்!
பருவமழையால் மழைக் காரணமாக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக அனைத்து வார்டுகளிலும் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

November 05 Tamil News Updates:200 இடங்களில் இலவச மருத்துவ முகாம்!

Nov 05, 2022, 05:32 PM IST

பருவமழையால் மழைக் காரணமாக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக அனைத்து வார்டுகளிலும் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Nov 05, 2022, 05:30 PM IST

சென்னையில் அனைத்து வார்டுகளிலும் மருத்துவ முகாம்!

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக அனைத்து வார்டுகளிலும் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 

Nov 05, 2022, 05:24 PM IST

மின்துறை ஓய்வு பெற்ற பணியாளர்கள் அகவிலைப்படி உயர்வு!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, அகவிலைப்படி 31%-ல் இருந்து 34%- ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Nov 05, 2022, 05:22 PM IST

சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்கவும், தூய்மைப் பணி செய்யவும், வடிகால் அடைப்பு பணியை சீர் செய்யவும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது

Nov 05, 2022, 03:49 PM IST

நிறுத்தப்பட்டிருந்த சென்னை-அந்தமான் விமான சேவை மீண்டும் தொடக்கம்!

சென்னை-அந்தமானுக்கு இடையே கடந்த 4 நாட்களாக மோசமான வானிலை மற்றும் விமான நிலைய பராமரிப்பு பணி காரணமாக சேவை நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் அந்தமானுக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது.

Nov 05, 2022, 02:45 PM IST

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் தேர்வு!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். செயலாளராக பழனியும், பொருளாளராக சீனிவாசராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எதிர்த்து போட்டியிட்ட பிரபு தலைமையிலான குழுவினர் அனைவரும் வாபஸ் பெற்றதால் அனைத்து உறுப்பினர்களும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Nov 05, 2022, 11:44 AM IST

தங்கத்தின் விலை உச்சம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 53 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4770.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 424 உயர்ந்து ரூபாய் 38160.00 என விற்பனையாகி வருகிறது

Nov 05, 2022, 10:09 AM IST

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்த அனுமதி!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை இன்று நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து இருக்கிறது.

Nov 05, 2022, 10:07 AM IST

ரஜினிகாந்த் இரண்டு படங்களில் இன்று முக்கிய அறிவிப்பு

ரஜினிகாந்த் லைகா நிறுவனத்தின் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்பு இன்று காலை வெளியாகிறது. அதில் ஒரு படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும், இன்னொரு படத்தை சிபி சக்ரவர்த்தியும் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Nov 05, 2022, 10:04 AM IST

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Nov 05, 2022, 10:01 AM IST

இலங்கை - இங்கிலாந்து இன்று மோதல்

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்று இங்கிலாந்து அணியை இலங்கை அணி எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்ற நிலையில் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

Nov 05, 2022, 10:01 AM IST

ரஞ்சிதமே... ரஞ்சிதமே...முழுப்பாடல் இன்று வெளியீடு!

வாரிசு' படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே... ரஞ்சிதமே... பாடலின் ப்ரோமோ படக்குழுவால் கடந்த 3-ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 30 விநாடி அளவில் இந்த ப்ரோமோ பாடல் வெளியாகியது. இந்த நிலையில், தற்போது இதன் முழுப்பாடல் இன்று வெளியாக உள்ளது.

 

 

    பகிர்வு கட்டுரை