Election results: குஜராத்தில் மீண்டும் பாஜக! இமாச்சலில் காங்கிரஸ்
Dec 08, 2022, 04:13 PM IST
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 151 தொகுதிகளில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க தேவையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது
மக்களின் தீர்ப்பை மதிக்கிறேன் - இமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்
மக்களின் தீர்ப்பை மதிக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் ஆதரவாக இருந்த பிரதமர் மற்றும் பிற தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசியல் பார்க்காமல் மாநிலத்தின் வளர்ச்சிக்காக எப்போது துணை நிற்போம். எங்களின் குறைகளை ஆராய்ந்து சரி செய்து அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று இமாச்சலில் முதல்வராக இருந்து வரும் ஜெய்ராம் தாக்கூர் கூறியுள்ளார்
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை இழக்கும் பாஜக
இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது
குஜராத்தில் 7வது முறையாக பாஜக ஆட்சி
குஜராத்தில் தொடர்ச்சியாக 7வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 151 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 21, ஆம் ஆத்மி 6, சமாஜ்வாதி கட்சி 1, மற்றவர்கள் 3 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர்
இமாச்சலில் முன்னிலை பெறாத ஆம் ஆத்மி
குஜாராத்தில் 10 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி, இமாச்சல பிரதேசத்தில் ஒரு தொகுதிகளிலும் முன்னிலை பெறவில்லை
குஜராத்தில் மெஜாரிட்டியை கடந்த பாஜக
குஜராத்தில் தனிப்பெரும் மெஜாட்டியை பெற்ற பாஜக 123 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 10 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது
இம்ச்சால பிரதேச தேர்தல் தொடரும் போட்டி
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக தலா 32 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர்
குஜராத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை அள்ளிய பாஜக
குஜராத்தில் பாஜக 52.8% வாக்குகளையும், காங்கிரஸ் 26.8% வாக்குகளும், புதிய கட்சியான ஆம் ஆத்மி 14% வாக்குகளையும் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
மோர்பி தொகுதியில் பாஜக முன்னிலை
மோர்பி தொகுதியில் பாஜக வேட்பாளர் காந்தி அம்ருதியா 400 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்
ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் முன்னிலை
குஜராத்தில் உள்ள கம்பாலியா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் இசுதன் காந்த்வி முன்னிலை பெற்றுள்ளார்
இமாச்சலில் காங்கிரஸ் பின்னடைவு
இமாச்சல பிரதேசத்தில் பாஜக 4 தொகுதிகளும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது
குஜராத்தில் பாஜக முன்னிலை
குஜராத்தில் ஆரம்பத்திலேயே பாஜக 17 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 5 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது
சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை
குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை, உத்தர பிரதேச மாநில நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.