தமிழ் செய்திகள்  /  latest news  /  Erode East Bypoll: என்னாது நாங்க சின்ன கட்சியா? செய்தியாளரிடம் சீரிய தேவநாதன் யாதவ்

Erode East Bypoll: என்னாது நாங்க சின்ன கட்சியா? செய்தியாளரிடம் சீரிய தேவநாதன் யாதவ்

Kathiravan V HT Tamil

Jan 22, 2023, 02:38 PM IST

google News
’’சின்னக்கட்சி, பெரியக்கட்சி என்ற வார்த்தைகள் தவறு. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் எல்லா கட்சி தலைவர்கள் வீட்டிற்கும் செல்கிறாரா இல்லையா?’’
’’சின்னக்கட்சி, பெரியக்கட்சி என்ற வார்த்தைகள் தவறு. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் எல்லா கட்சி தலைவர்கள் வீட்டிற்கும் செல்கிறாரா இல்லையா?’’

’’சின்னக்கட்சி, பெரியக்கட்சி என்ற வார்த்தைகள் தவறு. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் எல்லா கட்சி தலைவர்கள் வீட்டிற்கும் செல்கிறாரா இல்லையா?’’

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை களமிறக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளின் தலைவர்களான, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோரை சந்தித்து நேற்றைய தினம் அதிமுக முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் சந்திதது ஆதரவு கேட்டனர்.

தேவநாதன் யாதவ் உடன் சந்திப்பு

இந்த நிலையில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் மற்றும் யாதவ மகாசபை நிர்வாகியுமான தேவநாதன் யாதவ்வை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் ஆதரவு கேட்டனர், இந்த சந்திப்பிற்கு பின்னர் தேவநாதன் யாதவ் உடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசுகையில், இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்தப்போவதாக கூறி கூட்டணி கட்சிகளிடம் ஓபிஎஸ் ஆதரவு கேட்டு வருவது குறித்த கேள்விக்கு, அதிமுக என்பது இரு நீதிபதிகள் அமர்வு தந்த தீர்ப்பின் அடிப்படையில் ஈபிஎஸ் எழுர்ச்சியோடு உள்ளார்.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஓபிஎஸின் கதை முடிந்தது-ஜெயக்குமார்

ஓபிஎஸ் தன்னை அதிமுக என்று சொல்வது சட்டப்படி தவறு, திமுகவின் பி டீமாக அதிமுகவிற்கு தொந்தரவு தர வேண்டும் என்ற வகையில் அவரது செயல்பாடு உள்ளது. இந்த தேர்தலில் ஓபிஎஸ் களமிறங்கினால் அவரை சுயேச்சை வேட்பாளராக மக்கள் கருதுவார்கள், இந்த தேர்தலில் அவர் முடிந்துவிடுவார், நோட்டாவுக்கு கீழவே அவர் இருப்பார் என கூறினார்.

’’சின்னக்கட்சிகளின் ஆதரவு கேட்கும் அதிமுக’’

ஒரு பொதுத்தேர்தல் வந்தால் கூட போயஸ் கார்டனை நோக்கிதான் எல்லா கட்சிகளும் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள், ஆனால் தற்போது சின்ன சின்ன கட்சிகள் கூட தேடி போய் ஆதரவு கேட்கிறீர்களே அதிமுக பலவீனமாக உள்ளதா? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அது தவறு என கூறினார்.

யார் சின்ன கட்சி ? - தேவநாதன் யாதவ் ஆவேசம்

அப்போது இந்த கேள்விக்கு நான் பதிலளிப்பதாக கூறிய தேவநாதன் யாதவ், ’’சின்னக்கட்சிகளை தேடி இவர்கள் வரவில்லை மரியாதைக்குரிய திமுக தலைவர் ஸ்டாலினும் கூட அவர் கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளுக்காகவும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார். சின்னக்கட்சி, பெரியக்கட்சி என்ற வார்த்தைகள் தவறு. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் எல்லா கட்சி தலைவர்கள் வீட்டிற்கும் செல்கிறாரா இல்லையா?, அவரை போய் கேளுங்கள் என கோபமடைந்து பேசினார். இதனால் செய்தியாளர் சந்திப்பில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி