Election Results Live Updates: மேற்கு வங்க இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை
Mar 02, 2023, 04:16 PM IST
Erode ByPoll Results, Meghalaya Election Results, Nagaland Election Results: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான பல முக்கிய செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் 83,528 வாக்குகள் பெற்று முன்னிலை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - 11வது சுற்றிலும் காங்கிரஸ் முன்னிலை. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 83,528 வாக்குகள் பெற்று முன்னிலை அதிமுக வேட்பாளர் தென்னரசு 32,360 வாக்குகள் பெற்று பின்னடைவு
51 ஆண்டுகளுக்குப் பிறகு…
மேற்கு வங்கத்தில் சாகர்திகி சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பெய்ரோன் பிஸ்வால் வெற்றி பெறும் நிலையில் உள்ளார். அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டால்
51 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
மதியம் 2.30 மணி நிலவரம்
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 70,299 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 24,985 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
45,314 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
முதல்வர் ஸ்டாலின் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரலாற்றில் பதியக்கூடிய வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி. நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக இடைத்தேர்தல் வெற்றி அமைந்துள்ளது - முதல்வர் ஸ்டாலின் பேட்டி
7ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - 53485
தென்னரசு - 19937
நாம் தமிழர் - 2964
தேமுதிக - 431
7வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
6வது சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். 6வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் - 46,179, அதிமுக வேட்பாளர் - 16,777 வாக்குகள் பெற்றுள்ளனர்.
விரக்தியில் வெளியேறிய அதிமுக வேட்பாளர்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு விரக்தியில் வெளியேறினார். ஜனநாயகம் தோற்றது, பணநாயகம் வென்றது எனவும் பேட்டி.
திரிபுரா தேர்தல் நிலவரம்
பாஜக+ : 32
சிபிஎம்+ : 17
திப்ரா : 09
மற்றவை : 02
மேகாலயா நிலவரம்
தேசிய மக்கள் கட்சி : 27
திரிணாமுல் காங் : 07
பாஜக+ : 04
மற்றவை : 21
நாகாலாந்து நிலவரம்
பாஜக+ : 36
நாகா மக்கள் முன்னணி : 02
ஜனநாயக முற்போக்கு கூட்டணி : 03
மற்றவை : 19
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - முன்னிலை நிலவரம்
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - 28,136
அதிமுக வேட்பாளர் தென்னரசு - 9,104
நாம் தமிழர் - 1832
தேமுதிக - 220
வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 3ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை முடிவு தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் சுற்று முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பிறகு மூன்றாவது சுற்று எண்ணிக்கை தொடங்கும் என மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ண உண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 9.55 மணி நிலவரம்
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - 23,321
அதிமுக வேட்பாளர் தென்னரசு - 8,124
நாம் தமிழர் - 1498
தேமுதிக - 209
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - 22,746
அதிமுக வேட்பாளர் தென்னரசு - 6,497
நாம் தமிழர் - 514
தேமுதிக - 90
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 9.30 மணி நிலவரம்
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - 14,987
அதிமுக வேட்பாளர் தென்னரசு - 5160
நாம் தமிழர் - 860
தேமுதிக - 79
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : முன்னணி நிலவரம்
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - 11,661
அதிமுக வேட்பாளர் தென்னரசு - 4016
நாம் தமிழர் வேட்பாளர் மேனகா- 446
தேமுதிக வேட்பாளர் ஆனந்த்- 79
காங்கிரஸ் முன்னிலை
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் - 5630
அதிமுக வேட்பாளர் தென்னரசு - 1737
நாம் தமிழர் வேட்பாளர் மேனகா- 224
தேமுதிக வேட்பாளர் ஆனந்த்- 58
காங்கிரஸ் முன்னிலை
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்:
- காங்கிரஸ் - 3642
- அதிமுக - 1414
- தேமுதிக - 17
- நாதக - 63
முதல் சுற்று - காங்கிரஸ் முன்னிலை
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளார்.
- காங்கிரஸ் - 1374
- அதிமுக - 447
- தேமுதிக - 0
- நாதக - 0
இளங்கோவன் முன்னிலை
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: தபால் வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளார்.
பாஜக முன்னிலை
- பாஜக - திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 20 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.
- நாகாலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் - தபால் வாக்குகள் எண்ணிக்கையில் ஈ.வி.கே.எஸ் முன்னிலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குகள் எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை.
தபால் ஓட்டு பெட்டி திறக்கப்பட்டது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் உள்ள பெட்டி திறக்கப்பட்டது.
கடும் கட்டுப்பாடுகள்
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஈரோடு சித்தோடு பொறியியல் கல்லூரி மையத்தில் காவல்துறை கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் CCTV கேமராவால் கண்காணிக்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 397 தபால் வாக்குகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 397 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன.
இன்று வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
மேகாலயா, நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது.