Tamil Live News Updates: மீன்பிடி நிவாரண தொகை 8 ஆயிரமாக உயர்வு!
Aug 28, 2023, 05:59 PM IST
Tamil Live News Updates: இன்றைய (28.08.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
வடிவேலு சகோதரர் மரணம் - முதலமைச்சர் இரங்கல்
நகைச்சுவை நடிகர் வடிவேலு சகோதரர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைக்கலைஞர் வடிவேலு அவர்களின் தம்பியான திரு. ஜெகதீஸ்வரன் (52) அவர்கள் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார் என்று அறிந்து வருந்துகிறேன். உடன்பிறந்த உற்ற துணையான தன் தம்பியை இழந்து வாடும் திரு. வடிவேலு அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்க்க 3 கோடி - முதல்வர் அறிவிப்பு
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட தமிழ்நாடு அரசின் சார்பில் 3 கோடி ரூபாய் வாங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் ஓணம் வாழ்த்து
நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் திராவிட மொழிக் குடும்பத்தின் உடன் பிறப்புக்களான கேரள மக்கள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மீன்பிடி நிவாரண தொகை 8 ஆயிரமாக உயர்வு!
கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் துயரினை களைந்திட 14 கடலோர மாவட்டங்களிலும் உள்ள கடலோர மீனவ குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000/- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக அரசு வழங்கி வருகிறது. அத்தொகையினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு மீனவர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வந்த நிலையில், மீனவ குடும்பங்களின் கோரிக்கையினை ஏற்று, அவர்களின் துயரினை போக்கிடும் வகையில் 18.08.2023 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2024-25 ஆம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை ரூ.5000/-லிருந்து ரூ.8000/- ஆக உயர்த்தி வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அவ்வறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக 22.08.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1,79,000 கடலோர மீனவ குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.
வழக்கறிஞரின் சிகிச்சைக்கு முதல்வர் நிதி உதவி
கடந்த 9-8-2023 அன்று இராயபுரம் NRT மேம்பாலத்தில் நிகழ்ந்த சாலைவிபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சமூக ஆர்வலரும், சென்னை வடமண்டல குழந்தைகள் நலக்குழு உறுப்பினருமான திருமதி. லலிதா அவர்களின் குடும்பத்தினர் மருத்துவச் செலவிற்கு போதுமான நிதியின்றி பெரிதும் சிரமப்பட்டு வருவதாகவும் அவருக்கு நிதியுதிவி வழங்கக் கோரியும் கோரிக்கை வரப்பெற்றுள்ளது. வழக்கறிஞர் திருமதி.லலிதா அவர்கள் குழந்தைகள் நலக்குழு உறுப்பினராகவும், ஏழை எளிய மக்களுக்கு இலவச சட்டஆலோசனை உதவிகளை அளித்தும் மக்கள் பணியாற்றி வருகிறார். அவருடைய குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அவர் விரைவில் உடல்நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியில் ஊக்கத்துடன் செயலாற்றவும், அவரது மருத்துவச் செலவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்திரவிட்டுள்ளேன் என தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் - பேச்சு வார்த்தை தோல்வி
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 15,000 தண்ணீர் லாரிகள் வரும் 30ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
செந்தில் பாலாஜியை ஜாமீனில் எடுக்க ஏற்பாடு என தகவல்?
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் காவலை நீட்டித்துள்ள நிலையில் அவரை ஜாமீனில் எடுக்க அவரது வழக்கறிஞர்கள் திட்டமிட்டு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
செந்தில் பாலாஜிக்கு செப்.15 வரை காவல்
அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் செப்.15 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் அழைத்து செல்லப்படும் செந்தில் பாலாஜி
நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்டார்
சீமானை கைது செய்ய வேண்டும் - நடிகை விஜயலட்சுமி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜய லட்சுமி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்ததுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேட்டி
தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு முன்னிலை!
தமிழ்நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1,66,727 ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
மணிப்பூரில் மீண்டும் வன்முறை
மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் ஆளில்லாத 3 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால் பதற்றம்; முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு காவலுக்கு இருந்த பாதுகாப்பு வீரர்களிடம் இருந்து ஆயுதங்களை பறித்து சென்ற கும்பலால் பரபரப்பு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மெட்ரோ ரயிலில் 'புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்' என அறிவிப்பு செய்யாததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சரியான திட்டமிடல் இல்லாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!
சரியான திட்டமிடல் இல்லாமல் கடந்த ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கட்டமைத்துள்ளனர் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
நடிகர் வடிவேலுவின் சகோதரர் காலமானார்!
திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு-வின் உடன் பிறந்த இளைய சகோதரர் ஜெகதீசன் (52) உடல் நலக்குறைவால் மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
இறுதிக்கட்டத்தை எட்டிய மெட்ரோ ரயிலின் சாத்தியக்க்குறு அறிக்கை பணிகள்!
திருச்சி மற்றும் மெட்ரோ மாவட்டங்களுக்கான மெட்ரோ ரயிலின் சாத்தியக்க்குறு அறிக்கை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியது.
இன்று தங்கம் விலை
இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி, சென்னையில் இன்று (ஆக 28) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ. 43,840க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ. 5,480க்கு விற்பனையாகிறது.
1-12ம் வகுப்புகளுக்கான காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு!
1-3ஆம் வகுப்புகள் செப்.23 - அக்.2 10 நாட்களும், 4-12ஆம் வகுப்புகள் செப்.28 - அக்.2 5 நாட்களும், அக்.3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
இந்த தங்கப் பதக்கம், ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது - நீரஜ் சோப்ரா நெகிழ்ச்சி
இந்த தங்கப் பதக்கம், ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது. உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்த பின் நீரஜ் சோப்ரா நெகிழ்ச்சி. ஈட்டி எறிதல் பிரிவில் 88.17மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார் நீரஜ்.
பக்தர்களை அச்சுறுத்திய சிறுத்தை
திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்திய சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
உலக தடகள சாம்பியன்ஷிப்.. புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் முதல்முறையாக தங்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை. உலக தடகள சாம்பியன்ஷிப் - ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. இறுதிப்போட்டியில் 88.17 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீரர் முதல்முறையாக தங்கம் வென்று சாதனை.
பூக்களின் விலை கடுமையாக சரிவு!
சுபமுகூர்த்த தினங்கள், வரலட்சுமி நோன்பு உள்ளிட்ட முகூர்த்த நாட்கள் முடிந்த நிலையில் சென்னை கோயம்பேடு பூக்கள் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளன. ஒரு கிலோ மல்லி பூ ரூ.250, முல்லை -ரூ.150, ஜாதி மல்லி - ரூ.210, கனகாம்பரம் - ரூ.300, பன்னீர் ரோஜா - ரூ,60-க்கு விற்கப்படுகிறது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 1906 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 154 கனஅடியாக சரிவு; சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்
சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 118 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 48 கனஅடியாக சரிவு
கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 345 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 11 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது
பிரதமரின் விஷ்வகர்மா திட்டம்
பிரதமரின் விஷ்வகர்மா திட்டம் குறித்து வங்கி அதிகாரிகளுடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
இன்றே கடைசிநாள்
வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்.
சாமித்தோப்பு அய்யா வைகுண்டபதியில் ஆவணித்தேரோட்டம்!
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 18-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் 11-வது நாளான இன்று (28-ந்தேதி) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு திரு நடைதிறத்தலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெறுகிறது.
திக முப்பெரும் விழா
கிருஷ்ணகிரியில் நடைபெறும் திக முப்பெரும் விழாவில் கி.வீரமணி, அமைச்சர்கள் நேரு, சக்ரபாணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீட்டிக்கப்பட்ட காவல் நிறைவு!
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது கைது சரியானது என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். அதன்பின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஜர்படுத்தபட்டபோது, ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீட்டிக்கப்பட்ட காவல் நிறைவடைகிறது.
பெட்ரோல், டீசல் விலை
தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 28) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 464ஆவது நாளாக அதே விலையிலேயே விற்கப்படுகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.